Sunday, May 29, 2011

இசை ராஜாவிற்கு சமர்ப்பணம் 03 அல்லது கடைசி?

இதோ INDIA 24 HOURS ன் மூன்றாவது இசை கோர்வையை இணைக்கிறேன். அனேகமாக இந்த ஆல்பத்தில் நான் எழுதும் கடைசியாக இது இருக்கும் என்று நினைக்கிறேன். 

காரணம்  இதற்க்கு முன்னால் நான் இணைத்த 2 இடுகைக்கு நான் எதிர் பார்த்த ரெஸ்பான்ஸ் இல்லை. ராஜா போன்ற ஒரு ஞானியை கொண்டாடாத  கூட்டத்திற்கு . எதற்கு நான் இதை போன்ற ஒரு இடுகை எழுதி என் நேரத்தை வீணடிக்க வேண்டும்.

இந்த இடுகையின் ரெஸ்பான்ஸ் பார்த்து தொடருகிறேன்.
ஈமெயில் முகவரியை தெரிவித்த 7 நண்பர்களுக்கு MP3 வடிவில் அனுப்புகிறேன்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, May 28, 2011

இசை ராஜாவிற்கு சமர்ப்பணம் 02

INDIA 24 HOURS - 02

இளையராஜாவின் இசையை ரசிப்பதற்கு பெரிய ஞானம் எல்லாம் வேண்டாம். காது என்னும் கதவும் அதன் வழியே இசையை கேட்பதற்கு திறந்த நிலையில் மனமும் இருந்தால் போதும். நாம் சுலபமாக ராஜாவை உணரலாம்.
இதோ இங்கே நான் இணைக்கும் இசையில் உள்ள இசை நாம் அதை கேட்க ஆரம்பித்தவுடன் நம்மில் வியாபித்து விடுகிறது. இதில் அவர் உபயோகித்திருக்கும் வாத்தியங்கள் ஒரு இடத்திலும் சோடை போக வில்லை. தேவையற்ற வாத்தியம் என்று நாம் எதையும் சொல்ல முடியாது. அது அது அதன் பங்கை பாங்கே செய்கிறது. இதன் தலைப்பு பயணம் (JOURNEY) இதை கேட்ட போது என் மனம் என்னை சருகு போல மாற்றி காற்றின் திசைக்கு நானும் பயணமானேன்.


மொத்த இசையையும் வேண்டுவோர் உங்கள் மின் அஞ்சல் முகவரியை பின்னோட்டம் இடவும். இசை விமர்சகர்கள் பின்னுட்டடில் விமர்சிக்கவும். நானும் என் ராக தேவனை கொஞ்சம் சிலாதிக்கின்றேனே .

ராஜாவிற்கு  வோட் போடுங்கப்பா.

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

இசை ராஜாவிற்கு சமர்ப்பணம்

பல பேர் அறியாத ஒரு இசை பொக்கிஷம் என்னிடம் உள்ளது . அது இளையராஜா அவர்கள் எண்பதுகளில் பி பி சி தொலைக்கட்சிகாக இசை அமைத்தது. அந்த நிகழ்ச்சியின் பெயர் INDIA 24 HOURS . மொத்தம் 17 இசை கோர்வைகள் அடங்கியது. இந்த இசையை வாங்குவதற்காக நான் ஏறி இறங்காத கடைகள் இல்லை.
இன்று முதல் இசை கோர்வையை இணைக்கிறேன் 
மொத்த இசையையும் வேண்டுவோர் உங்கள் மின் அஞ்சல் முகவரியை பின்னோட்டம் இடவும். இசை விமர்சகர்கள் பின்னுட்டடில் விமர்சிக்கவும்.
வாக்கிடவும்.IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

காதலியின் நிலை என்ன?

ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்..அவளைப் போல்
ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து
கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.

இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி
தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல்
காணாமலும் போய்விட்டனர்.

உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே
முடியவில்லை. அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர்
திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான
முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது
எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான்..
உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து
வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும்
இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றதுஇஇல்லா விட்டால் மோசமான
விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.
 
அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை அடுத்த நாள் அப்பெண்னின்
கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள்.

 உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள்
கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண்
அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை போகவில்லை.

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப்
போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது. உடனே இவள் பயத்தினால் அலறினாள்.
அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது 'லூசாடி நீ! ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்'
என்றது.

இதைப் படித்ததும் உடனே என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு!


IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...