Saturday, July 2, 2011

உண்மையாகவா?

நாம் பைனரி எங்களை பற்றி அறிந்திருப்போம். மொத்தம் இரண்டு எண்களே உள்ளன.

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் தசம எண்ணில் பத்து எண்கள் உள்ளன.
எனவே நாம் 4 என்னும் தசம எண்ணின் சமமான பைனரி என்னை  100 என்று அறிகிறோம். இதுவே 32 என்னும் தசம எண்ணின் பைனரி எண் 100000 

சரி இப்பொழுது சங்கதிக்கு வருவோம். மிக குறைந்த இலக்கங்களை கொண்ட பைனரியில் நாம் பத்து இலக்க தசம எண்ணை எழுதும் பொது அது நீண்டு கொண்டே போகிறது. இது நாம் பேசும் மொழிக்கும் பொருந்தும்.
உதாரணாக 26 எழுத்துகளே கொண்ட ஆங்கில மொழியுள் 247 எழுத்துகளை கொண்ட தமிழ் மொழியை எழுதும் பொது. தமிழ் வார்த்தைகளில் உள்ள எழுத்துகளின் மொத்த இலக்கத்தை விட ஆங்கில வார்த்தைகள் அதிகமாக இருக்கிறது.
உதாரணமாக

மனசாலி- 4
manasaali  - 9 


இளையராஜா - 5 
ilaiyaraja -  10 

புதுமைபித்தன் - 8 
pudhumaipithan - 14 


எனக்கு தெரிந்த வரை தமிழ் மொழியே அதிக எழுத்துகளை கொண்டது. அகிலமெல்லாம் வாழும் தமிழர்களே உங்களுக்கு தெரிந்து அதிக எழுத்துக்கள் கொண்ட மொழி எது?

  
 
IniyaTamil TopSites

Friday, July 1, 2011

கணினி வல்லுனர்களே உங்களுக்கு ஒரு சவால். சந்திக்க தயாரா?

தலைப்பை பார்த்து வேட்டிய வரிஞ்சு கட்டி வந்திருக்கும் அண்ணன்களே. அசால்டா வந்திருக்கும் அக்காகளே முதல்லே கும்புட்டு வச்சுக்குறேங்க .
அப்புறம் நான் சவால் விட போறது சி, ஜாவா போல கம்ப்யூட்டர் மொழியில எல்லாம் கிடையாதுங்க. சும்மா சின்ன , சின்ன என்ன சின்ன சும்மா தம்மா துண்டு சமாசாரம் தானுங்க.

ஒரு FOLDER CREATE பண்ணினா போதுங்க . அதுவும் WINDOWS ல பண்ணணுங்க.
அந்த FOLDER NAME  CON  என்று வச்சு CREATE  பண்ணுங்க . SPACE  USE பண்ண கூடாதுங்க அவ்வளவு தானுங்க .
CREATE பண்ணிடீங்கான   எப்படி பண்ணீங்கனு இந்த தம்பிக்கு பின்னுட்டம் வழிய கொஞ்சம் சொல்லி கொடுங்க.
IniyaTamil TopSites

Thursday, June 30, 2011

இந்தியாக்கு அடுத்த இடத்தில அமெரிக்கா

இந்தியா  பல விஷயத்தில்  பின் தங்கி இருந்தாலும் ஒரு விஷயத்தில்  அது பல நாடுகளை முந்தி கொண்டு முன்னணியில் உள்ளது. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவையே அது இரண்டாம் இடத்திற்கு தள்ளி விட்டது. இதை படிக்கும் நீங்கள் இலஞ்சம் வாங்கும் நாடுகளை பற்றி நான் சொல்ல போவதாக எண்ணி விட வேண்டாம். 

நான் எதை பற்றி சொல்ல போகிறேன் என்று நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முன்னால் ஒவ்வொரு நாட்டின் நிலைகளை பற்றி சொல்லி விடுகிறேன்.

1)  India

2)  United States

3)  Sri Lanka

4)  United Arab Emirates

5)  United Kingdom

6)   Singapore

7)   Canada

8)   Saudi Arabia

9)   France

10) Ukraine
நண்பர்களே இது எதன் டாப் டென் என்று யூகித்து விட்டீர்களா?
ஹி ஹி இது வேறே ஒன்னும் இல்ல என் ப்ளாக் படித்த audience stats report.
IniyaTamil TopSites

Sunday, June 26, 2011

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

செல்போன் காதலால் கோவையில் நடந்த பயங்கரம்.


IniyaTamil TopSites

எனது ஞாபகத்தில் மீராவின் கவிதை


மீராவின் கவிதை தொகுப்பான கனவுகள் + கற்பனைகள் = காதிதங்கள். இதில் உள்ள எல்லா கவிதைகளும் அருமையானவை. பல வருடங்களுக்கு முன்னால் படித்தது. இதன் மின் வடிவம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தால் சொல்லுங்களேன்.


என் ஞாபகத்தில் உள்ள ஒரு கவிதை.


இரவில் 
காதல் என்ன கத்திரிக்காயா?
தொடர் கதை எழுதிய
வாணி மணாளன்
பகலில் 
காய் கறிக்கடை 
சந்தைக்கு சென்று
கத்திரிக்காய் விலை 
கிலோ இரண்டென கேட்டு
அதிர்ந்தார் அயர்ந்தார்
கத்திரிக்காய் கடைக்காரன்
கடுப்பில் சொன்னான்
அவ்வளவு மலிவாய்
அள்ளிக்கொண்டு செல்ல
கத்திரிக்காய் என்ன காதலா?       
IniyaTamil TopSites

Friday, June 24, 2011

மிஸ்டர் மணிரத்னம் அவர்களே ஆரண்ய காண்டம் பார்த்தீரா?

சிறந்த இயக்குனர் மணிரத்னம். 
நீங்கள் இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் முதன்மையானவர் என்று இந்த ஊர் இன்னமும் நம்பிக் கொண்டு இருக்கிறது. உங்கள் மார்கெடிங் உத்தியை எங்களுக்கும் கொஞ்சம் சொல்வீர்கள? விக்ரமை ஹிந்திக்கு கொண்டு போனீர்கள் . அவரும் உயிரை கொடுத்து நடித்து இருப்பார். அவர் மட்டும் அல்ல ராவன் படத்தில் பனி  புரிந்த எல்லோரும் அவர்கள் வேலையை சிறப்பாகவே செய்திருப்பார்கள் சுஹாசினியை தவிர.
ஆரண்ய காண்டம்



நீங்க நிச்சயமாக ஆரண்ய காண்டம் பார்த்து இருப்பிர்கள். பார்க்கவில்லை என்றால் பாருங்கள் . ராவன் படத்தை நீங்கள் எப்படி சொதப்பி இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒப்பீடு

நீங்களும் ராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தை தான் எடுத்தீர்கள்.குமார ராஜாவும் அதையே எடுத்தார்.  அனால் என்ன ஒரு வித்தியாசம். ஆரண்ய காண்டம் என்றால் காட்டில் தலை மறைவு வாழ்க்கை வாழும் ராமனை பற்றியது. உங்கள் காண்டத்தில் விக்ரமும் , இங்கே சம்பத்தும் தலைமறைவாக இருக்கிறாகள் ( புதிய ஆரண்யத்தில் ஒரே ஒரு பகல் மட்டுமே கதையின் சம்பவங்கள் நடக்கிறது )  சம்பத்தின் மனைவி கடத்தப் படுகிறாள். அவளை அவன் மீட்கிறான்.
குமார  ராஜாவின் கதை சொல்லும் தரம் நிச்சயமாக உங்களை பிரமிக்க வைத்து இருக்கும். பாத்திரப் படைப்பு . கதை மாந்தர்களின் பெயர்கள் மிருகங்களின் பெயர்களாக அமைத்தது. (இதற்கு முன் மகாநதியில் எல்லார் பெயர்களும் ஒரு நதியின் பெயராக இருக்கும்)
அப்புறம் கடைசியாக நீங்க குமார ராஜாவின் அடுத்த படத்தில் உங்களை அவரின் உதவி இயக்குனராக இணைத்து கொள்ளுங்கள். படியிங்கள். அதன் பின் படம் இயக்கலாம்.
IniyaTamil TopSites

Thursday, June 23, 2011

கணிதம் கற்போம் - 03

ஒரு விளையாட்டு கதை.



மிக பெரிய செல்வந்தர் ஒருவர் ஒரு நாள் உற்சாகமாக வீடிற்கு வந்தார்.வீட்டிற்கு வந்ததும் அவர் எல்லாரையும் அழைத்து தன் உற்சாகதிற்கான காரணத்தை சொன்னார்.

நான் இன்று ஒருவனை சந்தையில் பார்த்தேன். நான் பார்த்த மனிதர்களிலேயே இவரை போல வேறு கிறுக்கன்கள் இருக்க முடியாது என்றார்.எங்களுக்குள்  ஒரு மாதத்திற்கான ஒப்பந்தம் ஒன்றை நாங்கள் போட்டு கொண்டோம் . அது தான் என் மகிழ்ச்சிக்கான காரணம் என்றார்.வீட்டார் என்ன ஒப்பந்தம் என்று கேட்டார்கள்.

தினமும் அவன் என்னிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் நான் அவனுக்கு முதல் நாள் ஒரு பைசா காசும், இரண்டாம் நாள் இரண்டு பைசாவும், மூன்றாம் நாள் நாலு பைசாவும் இது போல் ஒரு மாதம் நான் பைசாவிளும் அவன் லட்சமாகவும் கொடுக்க வேண்டும் இது தான் ஒப்பந்தம் என்றார்.
வீட்டில் உள்ளவர்களுக்கு நம்ப முடியவில்லை. சிறுது நேரம் பேசி தூங்கி விட்டார்கள். ஆனால் நம் செல்வந்தருக்கு தான் தூக்கம் வரவில்லை.தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை எண்ணி சந்தோச பட்டுக் கொண்டார்.
சேவல் கூவ தொடங்கி விட்டது .யாரோ கதவை தட்டினார்கள்.திறந்து பார்த்தார்.வெளியே ஒப்பந்தகாரர். அவர் கையில் ஒரு  பெட்டி. 
இவரிடம் அந்த பெட்டியை தந்தார் 
எண்ணிக்கொள்ளுங்கள் என்று நூறு ரூபாய் கட்டுக்கள் பத்தை தந்தார். இவர் அதை எண்ணி சரி பார்த்து கொண்டார். 
மிகச் சரியாக இருந்தது.
இவரிடம் என் பங்கு என்று கேட்டார். இவரும் கொடுக்க வேண்டிய ஒரு நயா பைசாவை தந்தார்,. 
அதை வாங்கிக்கொண்டு நாளை வருகிறேன் என்று அவர் சென்று விட்டார்.  

நம் செல்வந்தருக்கு பயங்கர சந்தோசம் ஒரு பக்கம் சந்தேகம். ஒரு வேலை திருட்டு பையனாக இருப்பானோ . நம் கஜானா எங்கே இருக்கிறது என்று நோட்டம் விட வந்து இருப்பானோ என்று.
மறு நாள் வந்தது 
சேவல் கூவியது
பொழுது புலர்ந்தது 
பொழுது தளர்ந்தது
அந்தி வந்தது 
இவர் எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருந்தார் . ஒப்பந்தம் போட்டவர் வரவே இல்லை. சரி இனி அவன் வரமாட்டான் , பையன் சுதாசிருப்பான் என்று எண்ணிக்கொண்டார் அப்பொழுது கதவு தட்டப்பட்டது. வெளியே ஒப்பந்தகாரர் . லட்சம் கொடுத்தார் , இரண்டு பைசா வாங்கிகொண்டு சென்றார். மூன்றாம் நாள் ட்சம் கொடுத்தார் , நான்கு  பைசா வாங்கிகொண்டு சென்றார். நான்காம் நாள் எட்டு பைசா என்ற கணக்கில் ஒரு மாதம் வாங்கிகொண்டு சென்றார். நடுவில் நம் செல்வந்தர் இந்த ஒப்பந்தத்தை ஒரு மாதம் என்று போடாமல் இரண்டு மாதம் போட்டு இருக்கலாமே என்று வருத்தப்பட்டு கொண்டார்.


சரி இப்போ நீங்க சொல்லுங்க இதுல யார் கிறுக்கன்?


 ஊழலை ஒழிக்க பிறந்த ரஜினிக்கும், ஷங்கருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலால் கிடைத்த பணத்தில் எத்தனை  சதம் பங்கிருக்கும் என்று யாரவது சொல்ல முடியுமா?

IniyaTamil TopSites