Friday, March 18, 2011

3D இமேஜ் பார்ப்போமா கண்ணாடி இல்லாமல்

 நாம் இது வரை முப்பரிமான பாடங்களை கன்னடியுன் துணை இல்லாமல் பார்க்க முடிந்ததில்லை . அப்படியே stereogram போன்றவைகளை நாம் பார்த்திருந்தாலும் அதையும் மிகவும் சிரமத்தோடு தான் பார்த்தோம். அதுவும் பலருக்கு அது தெரிய வில்லை. கொசகொசவனே இருக்கும் படத்தை நாம் நம் இரு கண்ணையும் ஒன்றைக்கண் இருப்பவன் போல மாற்றி பார்க்கும் போது அதில் ஒளிந்திருக்கும் விலங்கையோ அல்லது பூவையோ கண்டு பிடித்த மகிழ்ச்சியில் கத்தும் போது பக்கத்தில் இருப்பவன் ( பார்க்க தெரியாதவன்) 
நம்மை ஒரு கிறுக்கன் போல் பார்ப்பான்.(சமிப்பத்தில் சிவலிங்கம் படம் எல்லார் கண்களுக்கும் தெரிந்தது. தெரியவில்லை என்று சொன்னால் தெய்வ குற்றம் செய்தவன் என்று நினைத்து விடுவார்கள் என்று தெரிவதாக சொல்லி விட்டார்களோ?)

இப்பொழுது அந்த சிரமம் எதுவும் இல்லாமல்  3d பாருங்கள்

டைனசரோடு தொடங்குவோம்

a

அடுத்து ஒரு அழகான குட்டி



ஜப்பான் குடும்பம் பாரம்பர்ய கிமோனோ உடையில்.




ஜப்பானில் ஒரு கடை


குளிர் காய்வோமா



கொஞ்சம் இளைப்பாறலாம்


பிடித்திருந்தால் வாக்கிடவும் இல்லையென்றால் வாதிடவும்.
IniyaTamil TopSites

Tuesday, March 15, 2011

ஆச்சர்ய மனிதர்


பிலிம் நியூஸ் ஆனந்தன
 
உழைப்பு உயர்வைத் தரும்

இது
கலைமாமணி

பிலிம் நியூஸ் ஆனந்தனைப் பற்றிய தொகுப்பு

55 ஆண்டு கால திரைஉலக சேவை
P.R.O தொழில் உருவாகியது எப்படி? - பிலிம்நியூஸ் ஆனந்தன்
பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது கதை வசனம் எழுதுவது வழக்கம். இதுவே எனது கலை ஆர்வத்திற்கு வித்து. சிறுவயது முதல் புகைப்படம் எடுக்கும் ஆர்வம். எனது யுக்தியால் இரட்டைவேடப்படம் பாக்ஸ் கேமிராவில் எடுத்தேன். இதைக்கண்ட என்.எஸ்.கே.யின் ஒளிப்பதிவாளர் சி.ஜெ.மோகன், ஒளிப்பதிவு செய்யும் கலையை எனக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அவர் கூறிய யோசனைப்படி விலையுயர்ந்த ஸ்டில் கேமிராவை வாங்கி படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.

1954ல் பிலிம்சேம்பர் பத்திரிகைக்காக ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பை பற்றிப் செய்தி சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்டேன். திரைக்கலைஞர்களை கேமராவில் படம் பிடித்தேன்.

எனது கல்லூரித் தோழன் சி.டி.தேவராஜன் நடத்தி வந்த பிலிம்நியூஸ் பத்திரிகையில் நான் எடுத்த படங்கள் வெளிவந்தன. இதனால் ஆனந்தன், பிலிம்நியூஸ் ஆனந்தனாக மாறினேன்.

நடிகர் சங்கத்தின் நடிகன் குரல் பத்திரிகையின் போட்டோ - ஜர்னலிஸ்ட் - ஆக மாறினேன். அதன் ஆசிரியர் வித்வான் வே.லட்சுமணன், நடிகன் குரலின் பதிப்பாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆர். அவர்களை தினமும் சந்திப்பார். அவருடன் நானும் செல்வேன்.

1958 எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம் அலுவலக மேளாளராக இருந்தவர் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அவரது மேஜையில் நாடோடி மன்னன் பட ஸ்டில்கள் இருந்தன. பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது அன்நாளைய வழக்கம் “ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா” - என்று கேட்டேன். “பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன? நீங்களே கொடுங்களேன்” - எனக் கூறி ஸ்டில்களை என்னிடம் கொடுத்தார். அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர். பாராட்டினார். P.R.O. என்ற புதிய தொழில் ஆரம்பமாவதற்கு காரணமானது இந்த சம்பவம் தான்.
பத்திரிகை ஆசிரியராக பணிபுரிந்து
1) எனது கல்லூரித் தோழன் சி.டி.தேவராஜ் நடத்திய பிலிம் நியூஸ் பத்திரிகையில் நிருபராகவும் புகைப்பட கலைஞராகவும் பணிபுரிந்தது(1954) ஆனந்தன் - பிலிம் நியூஸ் ஆனந்தனாக மாறியதற்கு காரணமானவர்.
2) ஸ்டார் வாய்ஸ்(வார இதழ்) ஆசிரியராக பணிபுரிந்தது. வெளியிட்டவர் மயிலை குருபாதம் (தயாரிப்பாளர்).
3) பிலிம் நியூஸ் (மாத இதழ்) ஆசிரியராக பணிபுரிந்து. வெளியிட்டவர் : டைமண்ட் பாபு (2006).
4) பிலிம் சேம்பர் - பத்திரிகையில் பணிபுரிந்து வருவது.
தயாரித்த புத்தகங்கள்
1) மாண்புமிகு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழக அரசின் முழு நிதி உதவியுடன் “சாதனைகள் படைத்த தமிழ் திரைப்ட வரலாறு” நூல் தயாரித்து(2004)
2) சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது வழங்கப்பட்ட போது “சாதனை மலர்” தயாரித்து (1995).
3) திரைக்கலைஞர்கள் விலாசங்கள் கொண்ட ‘திரைக்கலை தொகுப்பு’ - நூல் தயாரித்து(1978).
4) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதி அன்று ‘திரைப்பட புள்ளி விபரம்’ - என்ற பெயரில் திரைஉலகினருக்கும், பத்திரிகைகளுக்கு உபயோகப்படும் வகையில், 1954 முதல் ஆண்டு அறிக்கை நூல் இலவசமாக தொடர்ந்து வழங்கி வருவது.
5) திரை நட்சத்திரங்களின் 100-வது படம் வெளிவரும்போது, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, கமல்ஹாசன் சிவக்குமார் ஆகியோருக்கு ஆல்பம் தயாரித்தது.
6) கமலின் 200வது படமான ஆளவந்தான் படம் வெளியிட்ட அன்று படஆல்பம் நூல் தயாரித்தது(2001).
7) சிவாஜியின் 150 படமான சவாலே சமாளி படம் வெளியான போது மலர் வெளியிட்டது(1971).
8) கலைஞர் சின்ன அண்ணாமலை அவர்களுக்காக ‘நடிகர் திலகம்’ - என்ற பெயரில் புகைப்பட ஆல்பம் நூல் தயாரித்தது. காங்கிரஸ் தலைவர் திரு.காமராஜ நாடார் அவர்களால் வெளியிடப்பட்டது(1969).
9) “நெஞ்சில் நிலைத்து நின்று, நினைவை விட்டு அகலாத கவிஞர்களின் திரை இசைப்பாடல்கள்” - என்ற பெயரில் கவிஞர்களின் ஒரு பாடல் தொகுப்பு நூல் தயாரிக்கப்பட்டது(2008).
கண்காட்சிகள் அமைத்தது
திரை உலகம் 50 ஆண்டை முன்னிட்டு, கண்காட்சி 10 நாட்கள் நடத்தப்பட்டது. சாதனைகள் செய்த கலைஞர் 10 பேரை கௌரவப்படுத்தப்பட்டனர்.(1981)

தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சியில், சினிமா உலக கண்காட்சி தொடர்ந்து மூன்று முறை சென்னையில் நடத்தப்பட்டு மூன்றாண்டும் சிறந்த அரங்கு விருது கிடைத்தது.

மதுரை சுற்றுலா பொருட்காட்சியில் சினிமா உலக கண்காட்சி நடத்தி சிறந்த அரங்கு விருது கிடைத்தது.

உலகப் படவிழாவின் போது தெலுங்கு, மலையாளப்பட கண்காட்சி முறையே ஹைதராபாத்திலும் திருவனந்தபுரத்திலும் நடத்தப்பட்டது.

என்.டி.ஆரின் படகண்காட்சி ஹைதராபத்தில் ஆந்திரா பிலிம் சேம்பர் சார்பாக நடத்தப்பட்டது.

கமல்ஹாசன் பிறந்த நாளில் மூன்று முறை கண்காட்சி நடத்தப்பட்டது.

தெலுங்கு திரைப்பட வைர விழாவின்  போது தெலுங்கு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக சென்னையில் நடத்தப்பட்டது.

திரைப்பட நடிகைகள் அஞ்சலி தேவி, ஜமுனா-வாணிஸ்ரீ ஆகியோரில் வெள்ளி விழாவின் போது ஹைதராபாத்தில கண்காட்சிகள் நடத்தப்பட்டன.

CINEMA TODAY சார்பில் “78 ஆண்டு தமிழ் சினிமா கண்காட்சி(2009)

பிலிம் நியூஸ் ஆனந்தன், 208, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை- 14.
பட்டங்கள்
1) ‘கலைமாமணி - தமிழக அரசு (1991)
2) ‘கலைச் செல்வம் - நடிகர் சங்கம்(1997)
3) ‘திரைத்துறை அகராதி’ - கண்ணதாசன் மையம்
4) ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ - ராஜபாளையம் ரசிகர் மன்றம்
5) ‘1997- ம் ஆண்டின் சிறந்த மனிதர்’விருது அமெரிக்காவில், வடக்கு கெரோலினா சர்வகலாசாலை வாழ்க்கை வரலாறு கழகம் - வழங்கியது.
6) தெலுங்கு தயாரிப்பாளர் வெங்கண்ணசௌத்ரி “கலா பீடம்” விருது(1986)
7) காமராஜர் தேசிய சங்கம் “செய்தி சிகரம்”
8) “கலை மூதறிஞர்” - விருது (ராஜ்கதிரின் கலாலயா)
9) தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கம் “கௌரவ இயக்குனர்” விருதினை வழங்கி கௌரவித்தனர் (1989).
10) ‘நடமாடும் திரையுலகக் கலைக்களஞ்சியம்’ - சிவக்குமார்
11) ‘சினிமா செய்தி தந்தை’ - மௌலி
12) திரையுலக உ.வே.சா. - யூகி சேது
விருதுகள்
1. அஞ்சலி தேவியை தலைவராகக் கொண்ட வி.நாகையா நினைவு சாதனையாளர் விருது(2008).
2. லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் விருது
3. சென்னை மவுண்ட் ரோட்டரி கிளப் சிவாஜி விருது
4. புதுக்கோட்டை ரோட்டரி கிளப்
“Vocational Award ”2003
5. எனது 61-வது பிறந்த நாளை திரைஉலகம் சிறப்பாக நடத்தியது (1990)
6. தமிழக அரசு நடத்திய “நட்சத்திர இரவு” சிறப்பாக நடைபெற உதவியதற்காக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் மோதிரம் அணிவிக்கப்பட்டது.
7. சிறந்த பி.ஆர்..ஓ விருது - தமிழ்நாடு டி.வி.பார்வையாளர் சங்கம்.

* 1989 -ல் திரைஉலக 75 ஆண்டு வைர விழவில் “அகில இந்திய சாதனை புரிந்தவர்கள் ” என்ற முறையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை 75 பேரில் ஒருவராக தேர்ந்தெடுத்து கௌரவித்தது.

* 2002 -ல் பிலிம்நியூஸ் ஆனந்தன் 52 ஆண்டுகளாக சேகரித்து வைத்திருந்த திரைசம்மந்தப்பட்ட கலை பொக்கிஷங்களை தமிழக அரசு அரசுடமை ஆக்கிக் கொண்டது, அவைகளை வைத்து நிரந்தர கண்காட்சி ஒன்றினை அமைக்க திட்டம் வகுத்துள்ளது.
சாதனையாளர் விருதுகள்
1. எஸ்.எஸ்.வாசன் விருது - எல்.வி.பிரசாத் விருது
2. சிவாஜி விருது - எம்.ஜி.ஆர்.சிவாஜி அகாடமி விருது(2003)
3. மெகா பைன் ஆர்ட்ஸ் எம்.ஜி.ஆர் விருது
4. மதி ஆர்ட்ஸ் அகாடமி காமராஜர் விருது
5. ஃttN விருது(2004)
6. வெரைட்டி பிலிம் விருது(2008)
7. சினிமா ரசிகர் சங்கம்- விருது மூன்று முறை 1980; 1988; பொன் விழாவில் 1995.
8. வல்லமை தாராயோ- இயக்குனர் மதுமிதா நடத்திய பாராட்டு விழா(2008)
9. ஸ்ரீ ராமானுஜர் டிரஸ்ட் விருது (2008)
10. வி.4 விருது
11. ஓம் சக்தி அகாடமி (பொன் விழாவில் விருது)
12. தமிழக அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட “சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு ” தயாரித்தற்காக, சென்னை சினிமாரசிகர்கள் சங்கமும், தமிழ்நாடு திரைப்பட வரலாறு” தயாரித்தற்காக, சென்னை சினிமா ரசிகர்கள் சங்கமும், தமிழ்நாடு டி.வி.பார்வையாளர் சங்கமும் இணைந்து, விழா எடுத்து கௌரவித்தது.
13. ஜெய்சங்கர் அவர்களால் கீழ்பாக்கம் உடல் ஊனமுற்றவர்கள் இல்லத்தில் கௌரவிக்கப்பட்டார்.
14. வி.ஜி.பி.- தம்ஸ் அப் - அஜந்தா
15 அம்பத்தூர் கலைக்கழகம்
16. ரைசிங் ஸ்டார் பிலிம் விருது(2008).
17. சிவாஜி - பிரபு அறக்கட்டளை சார்பில் சிவாஜி கணேசன் பிறந்த நாளில் கௌரவிக்கப்பட்டார் (2008).
18. CINEMA TODAY சார்பாக விருது (2007)
பத்திரிகைகள் விருது
1. சினிமா எக்ஸ்பிரஸ் விருது
2. தமிழ் மூவிஸ் விருது
3 தினகரன் விருது
4. விக்டரி சினிமா டைரி விருது
5. ரைசிங் ஸ்டார் விருது
6. ஹதராபாத் பிலிம் கிளப் வெள்ளி விழா ஆண்டு விருது
7. தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்றதர்க்கு பாராட்டு விழா
8. சென்னையில் 75 ஆண்டு தெலுங்கு சினிமா கண்காட்சி நடத்தியமைக்கு, தெலுங்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் பாராட்டு விழா
9 சூப்பர் சினிமா - வெரைட்டி சினிமா விருது(2008).
டி.வி.சேனல் விருது

1) விஜய் டி.வி.(சாதனையாளர் விருது) (2008)
2) ராஜ் டி.வி.“75 ஆண்டு திரை உலகம் விருது (2008)
3) இந்து டி.வி.(2008)


நன்றி 
IniyaTamil TopSites

Monday, March 14, 2011

ஜப்பான் சுனாமிக்கு முன்பும் பின்பும்

நாம் எத்தனை முறை இயற்கையை சீண்டி இருப்போம். அது ஒரு முறை சீண்டினால் நம்மால் தாங்க முடிகிறதா?
























IniyaTamil TopSites

பொன்னியின் செல்வன் கடைசியா படிச்சிக்கோங்கோ


எந்த வருசத்து கல்கி புத்தகம் எடுத்து படித்தாலும் பொன்னியின் செல்வன் தொடர் மறுபடி மறுபடி பிரசுரமாகிக் கொண்டே இருக்கும். புதியர்கள் மற்றும் ஏற்கனவே படித்தவர்கள் மறுபடியும் படிக்க. எடுக்குறேன் எடுக்குறேன்னு கமல் சொல்லி கொண்டே இருந்தார். இப்போ மணிரதனம் எடுக்கப் போறாராம். அவர் மேக்கிங் ஸ்டைல் தான் நம்ம எல்லார்க்கும் தெரியுமே . எனவே எல்லாம் ஒரு தடவ கடைசியா வந்திய தேவன ரசிச்சுக்கோங்கோ.
IniyaTamil TopSites

(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள்

உங்கள் பதிவை பார்த்து நானும் எனக்கு தெரிந்த பாடல்களை எழுதலாம் என்று இந்த பதிவை தொடங்குகிறேன். இந்த பதிவை நான் எழுதுவதற்கு காரணமான கார்த்திகை பாண்டியனுக்கு இந்த பதிவை சமர்பிக்கின்றேன்.

படம் முதல் பாடல்
பாடல், இசை, தயாரிப்பு : எஸ். ஏ. இராஜ்குமார்.
பாடல் : பூவே இது காற்றின் கீதம் 
 இந்த பாடல் எடுத்த விதம், பாட்டின் வரிகள். பாட்டின் இனிமை. எல்லாம் அருமையாக இருக்கும். மன்னிக்கவும் மிக மிக அருமையாக இருக்கும் இந்த பாடல் நெட்டில் தேடினேன் கிடைக்கவேயில்லை .
ஒரு 20 வருடத்திற்கு முன்னால் கேட்டது.
என் ஞாபகத்தில் உள்ள வரிகளை எழுதுகிறேன்

பூவே இது காற்றின் கீதம் 
உயிர் பாடும் வேதம்
கண்ணோரம் காதல் வைத்து கண்ணே உன்னை பார்க்கின்றேன்
நெஞ்சோடு நெஞ்சம் பேச நேரம் தானே கேட்கின்றேன்
மௌனம் விடு மல்லிகையே 
மாலை கோர்க்கின்றேன் 

இரவா பகலா தெரியாதிருந்தேன்
இமையெங்கும் தேவியே உன் கனவை சுமந்தேன் 
சரியோ தவறோ மனதை இழந்தேன்
உலகங்கள் மாறினாலும் உனை நான் மறவேன்
நீ எந்த கோவில் தேவதை கேள் எந்தன் நெஞ்சின் பாடலை.  

பூவே இது காற்றின் கீதம் 
உயிர் பாடும் வேதம்
கான்னோரம் காதல் வைத்து கண்ணே உன்னை பார்க்கின்றேன்
நெஞ்சோடு நெஞ்சம் பேச நேரம் தானே கேட்கின்றேன்
மௌனம் விடு மல்லிகையே 
மாலை கோர்க்கின்றேன் 

வாழ்வினில் ஒரு நாள் வருவது உறுதி
காதலின் கடலை கடப்பது இறுதி
நீயாக நெஞ்சினை தோடு 
இல்லை என் மூச்சினை எடு   


படம் : மகேசன் (வெளி வரவேயில்லை)
இசை: பாலபாரதி 
பாடல் : காதல் வந்தால் எதை மாற்றம் 

படம் : கோல்மால் 
இசை: பாலபாரதி 
பாடல் : நீ பேசும் பூவா பூவினமா.

 படம் : டைம் 
இசை: இசைராஜா
பாடல் : நிறம் பிரித்து பார்த்தேன்

படம் : தேவதை 
இசை: இசைராஜா 
பாடல் : நாள் தோறும் எந்தன் நெஞ்சில் 

படம் : ராசாமகன் 
இசை: இசைராஜா 
பாடல் : காத்திருந்தேன் கனியே 

படம் : தேவதை 
இசை: இசைராஜா 
பாடல் : நாள் தோறும் எந்தன் நெஞ்சில்

படம் : பைவ் ஸ்டார் 
இசை: ஸ்ரீ ராம் பார்த்தசாரதி  
பாடல் : ரயிலே ரயிலே ஒரு நிமிஷம் (ஒரிஜினல் பாடலை நெட்டில் பார்த்த ஞாபகம்)










IniyaTamil TopSites

Sunday, March 13, 2011

பத்திரிகைகள் ஏன் அமைதி காத்தன? பாகம் 3

            முதல் இரண்டாம் பாகத்தில் நாம் மௌன ராகம் மற்றும் இந்தியன் படத்தின் ஒரிஜினல் படத்தை பார்த்தோம். பின்னுட்டம் இட்ட ஒரே ஒருவருக்கு நன்றி. பின்னுட்டம் வரும் என்று எதிர் பார்த்தேன். வரவில்லை .ஒரு வேலை இந்த இடுகைகள் பிடிக்கவில்லையோ? சரி எப்படியும் இருந்து விட்டு போகட்டும். என் ஆதங்கத்தை நான் இங்கே வெளிப்படுத்துகிறேன். பத்திரிக்கைகள் காட்டிய மௌனத்தை நானும் ஏன் காட்ட வேண்டும்?.   
  
        இங்கே நான் பாலசந்தர் இயக்கிய ஒரு படத்தின் மூலத்தை எழுதப்போகிறேன். அதற்க்கு முன்னால் ஒரிஜினல் படத்தை பாப்போம். இது தமிழ் படம் அல்ல. ஹிந்தி படம். சாஜன். சாஜன் ஒன்றும் மூன்றாம் தர படம் அல்ல.மிகவும் நல்ல படம். சாஜன் என்றவுடன் பலருக்கும் அந்த படத்தை விட அதன் பாடல்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். மேரா தில் பி கித்துனா பியார், ஜியே தூ ஜியே, பகுத் பியார் கர்தே ஹைன் மற்றும் படத்தின் எல்லா பாடல்களும் . பிரபல்யமானவை மற்றும் இனிமையானவை. நதீம் ஷ்ரவன் (பல இனிய மெட்டுக்கள் உருவான மனதிற்குள் கொலை வெறி இருந்தது என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது) இருவர் இசையில் பாடல்கள் கேட்ட எல்லோரும் நிச்சயமாக ரசித்திருப்பார்கள்.

          பாடலைப் போலவே படமும் கவித்துவமான படம். ஹிந்தி அரைகுறையாக தெரிந்திரிந்தும் சப்டைட்டில் இல்லாமலும் தான் படம் பார்த்தேன். இருந்தும் படம் எனக்கு புரிந்தது பிடித்தது. கதையை பார்போம


கதை

அமன்(சஞ்சய்தத்) ஒரு அனாதை. நல்ல குணம் கொண்டவன். கவிஞன் . எல்லாவற்றிர்க்கும் மேல் ஊனம் உள்ளவன். அவன் சிறு வயது முதல் பணக்கார வீட்டு பையன் ஆகாஷ் வர்மாவின் (சல்மான் கான்) நண்பன்.  ஆகாஷின் தாய் தந்தையர் அமனையும் ஒரு மகனாக வளர்க்கிறார்கள் . இருவரும் அண்ணன் தம்பிகளாக எந்த பிரிவினையும் இல்லாமல் வளர்கிறார்கள்.

ஆகாஷ் விடலை பையனாக வளருகிறான். பெண்களை ரசிக்கிறான்.



      அமன் கவிதையை ரசிக்கிறான், சாகர் என்ற புரை பெயரில் கவிதை  எழுதுகிறான். அவனுடைய கவிதைகள் பிரசுரமாகிறது. அவன் பலரால் ரசிக்கப்படுகிறான். பிரபல்யமாகிறான். அவனுடைய பல ரசிகைகளில் இனிய அழகான பூஜா சாக்சனாவும் (மாதுரி தீக்சித்) ஒருத்தி. அமன் தான் சாகர் என்று தெரியாமலேயே அவள் அவனுடன் பழகுகிறாள் . 
     ஆகாஷ் பூஜாவை பார்த்தவுடன் காதல் கொள்கிறான். அவன் அமனிடம் அவன் காதலுக்கு உதவி கேட்கிறான். மனதில் பூஜாவை காதலிக்கும் அமன் மனதில் அழுதவாறே அவனுக்கு யோசனை சொல்கிறான். ஆகாஷை கவிஞன் சாகர் போல நடிக்க சொல்கிறான். பூஜாவும் ஆகாஷும் காதல் கொள்கிறார்கள்.
    இதை பார்த்து அமன் மனதுடைந்து போகிறான். தன்னுடைய கவிதையை பல பெண்கள் ரசித்தாலும் தன்னுடைய ஊனத்தால் தன்னை யாரும் காதலிக்க மாட்டார்கள் என்று மனதிற்குள் வருத்தப்பட்டு கொள்கிறான்.
  முடிவில் அமன் பூஜாவை காதலிப்பதும், அமன் தான் கவிஞன் சாகர் என்றும் தெரிந்து கொள்கிறான். அமனுக்காக ஆகாஷ் காதலை தியாகம் செய்கிறான்.




இப்போ டூயட் 


இங்கே பிரபு ஏழை கிடையாது அனாதை கிடையாது ஊனம் கிடையாது. கவிஞன் கிடையாது  . அனால் குண்டு சாக்ஸபோன் கலைஞன். அவனை எந்த பெண்ணும் பார்க்க மாட்டார்கள் கிண்டலடிப்பார்கள். அனால் அவனுடைய இசையை ரசிக்காதவர்களே கிடையாது. அவனும் அவன் தம்பி ரமேஸ் அரவிந்தும் சேர்ந்து ஒரு இசை குழு வைத்து கல்யாணதுக்கு வாசிக்கிறார்கள். 
       இங்கே ரமேஸ் அரவிந்த் ஒரு விடலை பையன். பெண்களை ரசிப்பவன். இவர்கள் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் வசிப்பவர் மீனாக்ஷி சேஷாத்திரி. மீனாக்ஷி சேஷாத்திரியை பார்த்தவுடன் தம்பிக்கு காதல் வந்து விடுகிறது. பக்கத்து வீட்டிலிருந்து வரும் இசையை வசிப்பது தம்பி தான் என்று நினைத்து தம்பியை காதலிக்கிறாள். இதை அறிந்து அண்ணன் துக்கப்பதுகிறான் துயரப்படுகிறான். தான் குண்டாக இருப்பதால் தன்னை யாரும் காதலிக்கவில்லை என்று வருத்தப்படுகிறான்.
    முடிவில் இசையமப்பவன் அண்ணன் என்று தெரிகிறது . அண்ணன் காதல் வெற்றியடைகிரது


அடுத்த பாகத்தில் நடிகன் படம் எந்த தமிழ் படத்தில் இருந்து உருவியது என்று பார்ப்போமா........


இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
IniyaTamil TopSites

Wednesday, March 2, 2011

விசுவும் ரஜினியும்

இந்த பதிவிற்கு ரஜினியும் விசுவும் என்று தலைப்பிடாமல் விசுவும் ரஜினியும் என்று நான் எழுதியதற்கு காரணம் ரஜினி  படங்களுக்கு அவர் எழுதிய வசனங்களும் அதன்பால் எனக்கு அவர் மேல் ஏற்பட்ட மரியாதையும் தான்.
ரஜினிக்கு விசு வசனம் எழுதிய முதல் படம் தில்லுமுள்ளு. அதில் நான் ரசித்த வசனங்கள் பல இருக்கின்றன .
எஸ் பி முத்துராமன் இயக்கிய மூன்று படங்களுக்கு விசு வசனம் எழுதி இருக்கிறார். அதில் இரண்டு ரஜினி நடித்தவை 1 )நல்லவனுக்கு நல்லவன்.
 2 ) குடும்பம் ஒரு கதம்பம் (பலர் விசு இயக்கியது என்று நினைப்பார்கள்) 3 ) மிஸ்டர் பாரத்.

பாலசந்தர் சர்வர் சுந்தரம் படத்திற்கு வசனம் மட்டுமே  எழுதி இருந்தார் ஆனாலும் அந்த படத்தை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு இரட்டை இயக்குனர்களை விட பாலசந்தர்க்கு அந்த படம் பெயர் வாங்கி தந்தது. அதை போல குடும்பம் ஒரு கதம்பம் விசுவிற்கு பெயர் வாங்கி தந்தது.

இந்த இடுகையை படிப்பவர்கள் மேற் சொன்ன திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த வசனங்களை குறிப்படவும்.
IniyaTamil TopSites