Friday, February 18, 2011

பத்திரிகைகள் ஏன் அமைதி காத்தன? பாகம் 2

நான் முதல் பாகத்தில் மௌன ராகம் எதிலுருந்து எடுக்கப்பட்டது என்று சொல்லியிருந்தேன். இப்பொழுது வேறு ஒரு திரைப்படத்தை பற்றி சொல்ல போகிறேன். நெஞ்சத்தை கிள்ளாதே போல இது ஒரு வெற்றி படம் எல்லாம் இல்லை. மிக சுமாராக ஓடிய படம்.

                 இன்று பலரும் மறந்த ஒரு இயக்குனர் கார்வண்ணன் . அவருடைய முதல் படம் 'பாலம்'. நிச்சயமாக சொற்பராவது ஞாபகம் வைத்து இருப்பார்கள். ஒரு மந்திரியை கடத்தி வந்து இரண்டு ஊர்களை இணைக்கும் ஒரு பாலத்தில் வைத்து அரசாங்கத்திடம் ஏதோ ஒரு கோரிக்கையை  (என்ன கோரிக்கைன்னு மறந்து விட்டது) வைப்பார்கள். கடத்தல்காரர்களை கிட்டி டீம் முறியடிக்கும் . ஆனாலும் அவர்கள் மந்திரியை கொன்று விடுவார்கள். இதில் மந்திரியை கடத்துபவராக முரளி நடித்திருப்பார். 
          
               படம் முக்கால் பாகம் பாலத்திலேயே நடக்கும். ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பிற்கு குறையே இருக்காது. நிச்சயமாக இதை ஆங்கில படத்திற்கு இணையான படம் என்றால் அது மிகையாகாது. எந்திரன் போல ஆங்கில படத்தில் வேலை பார்த்தவர்களை கொண்டு தமிழ் படம் எடுத்து அதை ஆங்கில படத்திற்கு இணையான படம் என்று பறை சற்றி கொள்ளவில்லை. 
       
           பாலம் எடுத்த கார்வண்ணனின் இரண்டாவது படம் புதிய காற்று.  அப்படத்தின் கதையை பார்ப்போம் .

    கதை சுருக்கம் (என் ஞாபகத்தில்)
        
                நேர்மையான தமிழ் வாத்தியார் சாருஹாசன் ஒரு சிறு கிராமத்தில் ஆசிரியராக உள்ளார். அவர் வேலை பார்க்கும் பள்ளிக்கூடம் கூரை பெயர்ந்து மாணவர்கள் சிலர் மாண்டு போகிறார்கள். இதற்கு கோபம் கொள்ளும் வாத்தியார் பள்ளிகூட கட்டடம் கட்டிய ஒப்பந்தக்கரர்களை தட்டிக் கேட்கிறார். அவர்கள் அவரை கொன்று விடுகிறார்கள்.

      இதனால் கோபம் கொண்ட அவர் மகன்(முரளி) ஒப்பந்தக்கரர்களை கொள்கிறான். மேலும் இது போல் அரசாங்க அலுவலகத்தில் கையூட்டு பெறுபவர்களை எல்லாம் கொள்கிறான். ஆத்மா என்ற பெயரில் அவன் எல்லா கொலைகளையும் செய்கிறான். பொது மக்கள் ஆத்மாவை ஏற்றுக்கொள்கிறார்கள். அவனுக்கு பல ரசிகர்கள் உருவாகிறார்கள். டி சர்ட்டில் ஆத்மா என்று பெயர் எழுதி அலையும் அளவிற்கு.
  
     ஆத்மா யார் என்று போலிஸ் தேடுகிறது. புத்திசாலி போலீசான மு.க.முத்து (ஆமாம் தமிழ் ஈன தலைவர் நம்ம கருணாநிதி மகன் தான்) ஆத்மா யார் என்று கண்டு பிடிக்கிறார். ஆத்மா ஒரு பொது கூடத்தில் கையூட்டு வாங்கும் ஒரு மந்திரியை கொள்ள வரும் பொது அவனை சுட்டு விடுகிறார். அங்கிருந்து தப்பிக்கும் முரளி அவனுடைய காதலியிடம் ஆத்மா என்பது தான் தான் என்றும் தோட்டா தன்னை உயிர் வாழ விடாது என்றும் தான் இறந்தது இந்த உலகிற்கு தெரியக்கூடாது என்றும் அப்படி தெரிந்தால் மறுபடியும் அரசு அலுவலர்கள் பயமின்றி கையூட்டு பெற தொடங்கி விடுவார்கள். எனவே யாருக்கும் தெரியாமல் தன்னை புதைத்து விடுமாறு கேட்டு கொள்வதோடு படம் முடிவடையும்.

       இதிலுருந்து எடுக்கப்பட்ட படம் எதுவென்று யூகித்திருப்பீர்கள். சரி இரண்டாவது படத்தை பாப்போம்.

         மணிரத்னம் போலவே டைரக்ட்டா வேற படத்திலிருந்து கதைய தூக்கிற டைரக்டர். இவரும் பெரிய்ய்யய்ய்ய்ய இயக்குனர் . தமிழ் சினிமாவ தூக்கி நிறுத்துறவர். ஆமாம் அய்யா திருவாளர் ஷங்கர் தான் அது. படம் இந்தியன் . 
  
        இப்போ நாம் இரண்டு படத்திற்கும் உள்ள ஒற்றுமை மற்றும்  வித்தியாசத்தை பாப்போம். 
           முதல் படத்தில் அப்பா சாவார். மகன் எல்லாரையும் கொள்ளுவார்.
இரண்டாவது படத்தில்  அப்பா  எல்லாரையும் கொள்ளுவார் மகன் உட்பட. 
முதல் படத்தில் முரளி இறந்து விடுவார் அனால் அவருடைய சாவை மறைத்து அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று மக்கள் நினைப்பது போல் படம் முடியும். இரண்டாவது படத்தில் தாத்தா இறந்து விட்டதாக மக்கள் நினைப்பார்கள். ஆனால் அவர் சாகாமல் விபத்திலுருந்து தப்பித்து வெளி நாட்டிற்க்கு சென்று தான் இன்னும் சாக வில்லை என்று புத்திசாலி போலீசிற்கு தொலைபேசுவார். 
       இரண்டு படத்திலும் புத்திசாலி போலிஸ் உண்டு. இந்தியனில் நெடுமுடி வேணு . 
        முதல் படத்தில் ஆத்மா ரசிகர்கள் அவர் பெயர் போட்ட சட்டையை பயன்படுத்துவதை போல இந்தியனில் தாத்தா ஸ்டைலில் முடி வெட்டி கொண்டு அலைவார்கள். 
      
        பத்திரிக்கைகள் ஏன் இதை எல்லாம் கண்டு கொள்வதில்லை. ஆனந்த விகடன் காலச்சுவடு பகுதியில் நாம் நெஞ்சத்தை கிள்ளாதே மற்றும் புதிய காற்று விமர்சனத்தை எதிர் பார்ப்போமா?

           பத்திரிகைகள் ஏன் அமைதி காத்தன? பாகம் 3 ல் நாம் நம் இயக்குனர் சிகரத்தின் டூயட் படத்தின் ஒரிஜினல் படத்தை பார்ப்போமா? இதை போல் வேறு படம் உங்களுக்கு தெரிந்திருந்தால் அதை எழுதுங்கள் மறக்காமல் எனக்கு லிங்க் கொடுத்து விடுங்கள்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Unknown said...

Hi Manasaali

Indian movie was remake of NAAM PIRANTHA MANN
Where Shivaji has acted as former freedom fighter
and the same kamalhaasan has acted his son.

Where Shivaji will kill kamal haasan at the end for his anti national activities.

மனசாலி said...

HARI said...

Hi Manasaali

Indian movie was remake of NAAM PIRANTHA MANN
Where Shivaji has acted as former freedom fighter
and the same kamalhaasan has acted his son.

Where Shivaji will kill kamal haasan at the end for his anti national activities.



இருக்கலாம் ஹரி . அனால் புதிய காற்றில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் முடிவு எல்லாம் இந்தியனோடு கனகச்சிதமாக ஒத்து போகிறது.