Saturday, July 16, 2011

கம்ப்யூட்டர் வாங்கிய நம்ம சுப்புரமணியின் சந்தேகம்.





ஐயா,
 
சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஜி-மெயிலில்  அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.

2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

5.  "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find" மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.

6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.

7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?

8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?


11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்? IniyaTamil TopSites

ஒரு கணிதப் புதிர்



நம்ம சுப்புரமணி ஒரு மளிகை கடைக்கு வேலைக்கு போனான். சுப்புரமணி சேட்டைக்காரன்.ஒரு தடவ 40 கிலோ படிக்கல் ( 40 கிலோ படிக்கல் என்பதே கிடையாதே என்று சொல்பவர்களுக்கு சும்மா ஒரு கணக்கிற்கு ) ஒன்ன கீழ போட்டு ஒடச்சுட்டான் . அது நாலு துண்டா உடைந்து விட்டது. நாலும் வேற வேற எடை. கடைகாரருக்கு பயங்கர கோபம் அவன திட்டிகிட்டே இருந்தார்.
' சும்மா திட்டாதீங்க முதலாளி, நான் உங்களுக்கு நல்லது தான் செஞ்சு இருக்கேன். நியாயமா பார்த்த நீங்க என்னை பாராட்டனும்'..
கடைகாரர் அவன முறைத்து பார்த்தார்.
'என்ன முதலாளி அப்படி பார்கீறீங்க. இங்கே பாருங்க, முதலில் 40 கிலோ படிக்கல்ல வச்சுகிட்டு 40 கிலோ மட்டும் தான் எடை போட முடியும். இப்போ நாலு துண்டா உடைந்ததால  1 கிலோ முதல் 40 கிலோ வர எந்த எடையையும் நீங்க போட முடியும்.
உடனே முதலாளி 12 கிலோ எடை போடு என்றார்.
இவன் போட்டு காட்டினான்.
28 கிலோ எடை போடு என்றார்.
இவன் போட்டு காட்டினான்.
37 கிலோ எடை போடு என்றார்.
இவன் போட்டு காட்டினான்.
4 கிலோ எடை போடு என்றார்.
இவன் போட்டு காட்டினான்.
முதாளிக்கு ஆச்சர்யம் ஆச்சர்யம்.
நம்ம சுப்புரமணி புத்தி கூர்மை பார்த்து அவனுக்கு சம்பளம் அதிகமாக்கினார்.

சரி இப்போ விசயத்திற்கு வருவோம்.

சுப்புரமணி எப்படி இத பண்ணினான் . அந்த படிக்கல் எந்தெந்த எடையில் உடைந்திருக்கும். மொத்தம் நான்கு துண்டுகள் . ஒன்றின் விடையை நான் சொல்லி விடுகுறேன். அத்து 1 கிலோ. மற்ற மூன்றின் எ(வி)டையை நீங்க சொல்லுங்களேன்.
IniyaTamil TopSites

Friday, July 15, 2011

இது தாண்டா ராஜ வாழ்க்கை

இது  தாண்டா ராஜ வாழ்க்கை


இவர் தான் உலகிலேயே பெரிய பணக்கார நாடான புருனே நாட்டின் ஜனாதிபதி. இவர் தான் உலகலேயே தங்கத்தை அதிகமாக பயன்படுத்துபவர்.


These are some pictures of his palace ...
The largest and most luxurious palace in the world...
Consists of 1788 rooms with some furnished in gold and diamond-encrusted
257 bath inlaid with gold and silver
and a garage to accommodate 110 cars
The palace has 650 suites ... each furnished at not less than 150,000 thousand euros
This requires the visitor to spend 24 hours just to inspect each room for 30 seconds


The Sultan of Brunei's plane

Most luxurious aircraft in the world, inlaid with gold
The Sultan has also a Boeing 747 worth a hundred million dollars,
and then re-designed as a home at a cost of more than one hundred and twenty million dollars.
Featured add-ons such as a whirlpool bath of pure gold 
He also has six small aircraft and two helicopters.









One of the cars of theSultan of Brunei

At the special request of the Sultan of Brunei,
theRolls Royce company combined their car designs with that of Porsche.
This vehicle is currently in London for use during his stay in Britain



When the Sultan of Brunei's daughter married,
the legendarycelebrations continued for 14 days,
at a cost of about five million dollars,
attended by more than 25 heads of state and family members.

 Sultan of Brunei car inlaid with pure gold



The Princess wears a crown of diamonds
and carries a small bouquet of flowers studded with diamonds.
She also wears huge diamonds as earrings, adding sparkle to her face.

Wikipediasays he has
531 Mercedes-Benzes 
367 Ferraris 
362 Bentleys
185 BMWs
177 Jaguars
160 Porsches 
130 Rolls-Royces
And 20 Lamborghinis

Bringing the total number of his cars to 1,932
IniyaTamil TopSites

Thursday, July 14, 2011

சமைக்கும் போது பாத்திரத்தில் உள்ள எண்ணெய் தீப்பிடித்தால் என்ன செய்வது?

பொது மக்கள் நலன் கருதி வெளியிடுவது மனசாலி.

IniyaTamil TopSites

திருவனந்தபுர பொக்கிஷத்தில் ‘இருந்ததில், பாதிக்கு மேல் பித்தளை’

நேர்மைக்கு தண்டனை ? 
திருவனந்தபுரத்தில் பத்மநாப ஸ்வாமி ஆலயத்தில், சில ரகசிய அறைகள் இருக்கின்றன என்ற செய்தி அல்ல – வியப்புக்குரியது; 
அந்த ரகசிய அறைகளில் குவிந்து கிடக்கின்ற எண்ணற்ற தங்க நகைகளும், நாணயங்களும், ரத்தினம், வைரம் போன்றவை பதித்த ஆபரணங்களும் அல்ல – ஜொலிக்கின்றவை; 
அந்த நகைகள், நாணயங்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்களையும் மீறுகிறது என்ற மதிப்பீடு அல்ல – பிரமிப்பைத் தருவது. 
பத்மநாப ஸ்வாமி ஆலயம்

கற்பனைக்கு அப்பாற்பட்ட இந்த பொக்கிஷத்தில் கை வைக்க வேண்டும் என்கிற ஆசையே இல்லாத, கோவில் சொத்தை அபகரிக்கும் எண்ணமே இல்லாத, நெருப்பு போன்ற நேர்மை கொண்ட ஒரு மன்னர் பரம்பரை, 250 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே இருந்து வந்திருக்கிறதே... அதுதான் ஜொலிக்கிறது ;
அதுதான் வியப்பைத் தருகிறது; அதுதான் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. 

1750
ஆம் ஆண்டில், முதல் மார்த்தாண்டவர்மன் என்ற மன்னர்தான், இந்த விலை மதிப்பிட முடியாத நகைகளையும், தங்க நாணயங்களையும், பத்மநாப ஸ்வாமிக்கே சமர்ப்பித்ததாகவும், அந்த மன்னர் தன்னை ‘பத்மநாப தாஸன்’ என்றே குறிப்பிட்டுக் கொண்டதாகவும் வருகிற செய்திகள் திருவிதாங்கூர் சமஸ்தான சரித்திரத்தை எடுத்துச் சொல்கின்றன. 
வாயளவில் சமத்துவம் பேசாமல், தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோவில்களைத் திறந்து விட்ட, ‘சித்திரைத் திருநாள்’ என்று அழைக்கப்பட்ட பலராம வர்மன், இந்தப் பரம்பரையைச் சார்ந்தவர்; அதற்கு உறுதுணையாக இருந்தவர் ஸர்.ஸி.பி.ராமஸ்வாமிஐயர். அதே போல, மனித உரிமை பற்றி மேடை போடாமல், மரண தண்டனையை ரத்து செய்த இந்தியாவின் முதல் ராஜ்யமாக திருவிதாங்கூரை திகழச் செய்ததும், இதே சித்திரைத் திருநாள் மன்னர்தான். 
இப்படிப்பட்ட உண்மையான முற்போக்குச் சிந்தனை உடைய இந்த மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் அனைவருக்கும், பத்மநாப ஸ்வாமி கோவில் பொக்கிஷத்தைப் பற்றித் தெரிந்துதான் இருந்தது. 1930ல் இந்த ரகசிய அறை ஒன்றில் இருக்கின்ற நகைகள் பற்றிய கணக்குக் கூட எடுக்கப்பட்டது. 1941ல் மலையாளக் கவிஞர் பரமேஸ்வர ஐயர், தனது புத்தகத்தில் இந்தப் பொக்கிஷம் பற்றிய விவரங்களைக் கூறியிருக்கிறார். பின்னர் 12 பகுதிகளாக வந்த, திருவிதாங்கூர் அரண்மனை சரித்திரத்திலும், இது பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. 
இந்தக் கோவில், தொடர்ந்து மன்னர் பரம்பரையின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. அங்கு இவ்வளவு பெரிய பொக்கிஷம் இருப்பதை அறிந்திருந்தும், அந்தப் பரம்பரையில் வந்த ஒரு மன்னர் கூட, இத்தனை பொக்கிஷத்தையோ, இவற்றில் ஒரு பகுதியையோ எடுத்து அயல் நாடுகளில் பதுக்கிக் கொள்ளவோ, ஸ்விட்சர்லாந்த் வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ளவோ, வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ளவோ முனையவில்லை. 
அவர்கள் பகுத்தறிவாளர்கள் அல்ல. கோவில் கோபுரத்தை பீரங்கி வைத்துப் பிளப்போம் என்று முழக்கமிட்ட, பகுத்தறிவுக் கூட்டத்தைச் சாராத இந்த மன்னர் பரம்பரை, ‘கோவில் சொத்து, குல நாசம்’ என்று நம்பியது. பொதுச் சொத்து விஷத்திற்குச் சமமானது என்று உணர்ந்தது. அன்று முதல் இன்று வரை – இன்று உள்ள உத்திராடத் திருநாள், மார்த்தாண்ட வர்மன் உட்பட – எந்த மன்னரும், இந்த பொக்கிஷத்தை கபளீகரம் செய்யவில்லை.

மக்கள் சொத்து எனில், அது தங்கள் குடும்ப சொத்து; நாட்டின் வளமை என்றால், அது வாரிசுகளின் வளமை... என்று செயல்படுகிற இந்திய அரசியல்வாதிகள் – அதாவது இன்றைய அரசர்கள் – கையில் இந்த பொக்கிஷம் சிக்கியிருந்தால், என்ன கதி ஆகியிருக்கும்!
இப்போதும் சில ‘சமூக பிரக்ஞை’ உள்ளவர்கள், இதை அரசியல்வாதிகளிடம் கொண்டு போய் சேர்த்து விட வழி தேடுகிறார்கள். ‘மக்களின் ஏழ்மையை, மக்களின் துயரைப் போக்கி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இந்த பொக்கிஷம் பயன்படுத்தப்பட வேண்டும்’ என்பது அவர்கள் வாதம். அதாவது, இந்தப் பொக்கிஷத்தில் உள்ள விலையுயர்ந்த நகைகளை விற்று, கிடைக்கிற பணத்தில், ஏழைகளின் துயரை இவர்கள் தீர்த்து விடுவார்களாம்!
ஆமாம், தீர்த்து விடுவார்கள்; பொக்கிஷத்தைத் தீர்த்து விடுவார்கள். அதில் ஒரு சிறு துளி, ஏழைகளுக்குப் போய்ச் சேர்ந்தாலே அதிசயம்தான்! அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பங்கு போட்டு கொண்டு ‘இருந்ததில், பாதிக்கு மேல் பித்தளை’ என்று  அறிக்கை விட்டால் கூட வியப்பதற்கில்லை.

250
ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கோவில் பொக்கிஷம் – பெருமாள் சொத்து – அப்படியே இருப்பதுதான் முறை. ஆனால் அதை இனி விட்டு வைப்பார்களா என்பது சந்தேகம்தான். ஸ்விட்சர்லாந்திலும், மற்ற சில நாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு வருகிற யோக்கியதை இல்லாத அரசியல்வாதிகளிடம், இந்த கோவில் சொத்தை ஒப்படைக்கக் கூடாது. 
ஏன்? 

நாட்டில் உள்ள அரசியல்வாதிகளின் சொத்துக்கள் கணக்கெடுக்கப்படட்டும்; அவற்றிலிருந்து சட்டவிரோதமாகக் கிட்டியவை ஒதுக்கப்பட்டு, அவை விற்கப்படட்டும்; அந்தப் பணம் பொது மக்களுக்குப் பயன்படுத்தப்படட்டுமே! 

ஏன் அதை யாரும் வற்புறுத்தவில்லை? 

சட்டம், சமூகம், தர்மம், நியாயம், பச்சாதாபம், பரிதாபம் – எல்லாம் அங்கே ஒளிந்து கொண்டு விடுகின்றனவே – ஏன்? 
ஸ்விட்சர்லாந்திலும், பல அயல் நாடுகளிலும், பல அரசியல்வாதிகளிடமும், அவர்களுடைய பினாமிகளிடமும் புகுந்திருக்கிற பொக்கிஷங்கள், ஏழைகளுக்குப் பயன்படட்டும். 
சுப்ரீம் கோர்ட்டில், இன்றைய மன்னர் வாரிசு உத்திராடத் திருநாள், ‘இந்தச் சொத்து தன்னுடையதோ, தன் குடும்பத்தினரையோ சார்ந்தது அல்ல’ – என்று கூறியிருக்கிறார். ‘கோவில் சொத்தாகிய அது, தெய்வ கைங்கர்யங்களுக்கும், மக்கள் நலனுக்கும் பயன்பட வேண்டியது’ என்ற அவருடைய நேர்மையான கருத்து ஏற்கப்பட வேண்டும்; 

அதை விட்டு, ‘இது பொதுச் சொத்து’ என்ற பெயரில், அரசியல்வாதிகளின் அறம் நிலையற்ற துறையிடம் இதை ஒப்படைத்து – திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் பாதுகாத்து வந்துள்ள, பெருமாள் கோவில் பொக்கிஷத்தைச் சூறையாட வேண்டாம்.   அது மன்னர் பரம்பரையினரின் நேர்மைக்குக் கொடுக்கப்படுகிற தண்டனை ஆகிவிடும்.

- என் அண்ணன் அனுப்பிய மெயிலில் இருந்து. - IniyaTamil TopSites

யோகாசனம் செய்யலாமா? சரக்கு அடித்து விட்டு?

நீங்களும் முயற்சிக்கலாமே.









சவாசனம்

பாலாசனம்

சேது பங்க்ஹா சர்வாங்காசனம்

மர்ஜயசனம்


ஹலாசனம்


டால்பினாசனம்

சலம்பாசனம்


அனந்த பாலாசனம்

மலாசனம்

புராசனம்






எனவே தண்ணியடிப்பதை ஆதரியுங்கள்.
வாழ்க  TASMAC IniyaTamil TopSites

தண்ணியடிக்கிறதும் யோகாசனம் பண்றதும் ஒன்றே.


சவாசனம்

.www.FunAndFunOnly.org
பாலாசனம்
www.FunAndFunOnly.org
சேது பங்க்ஹா சர்வாங்காசனம் www.FunAndFunOnly.org
மர்ஜயசனம்
www.FunAndFunOnly.org

ஹலாசனம்

www.FunAndFunOnly.org
டால்பினாசனம்
www.FunAndFunOnly.org

சலம்பாசனம்

www.FunAndFunOnly.org
அனந்த பாலாசனம்www.FunAndFunOnly.org
மலாசனம்www.FunAndFunOnly.org
புராசனம்
www.FunAndFunOnly.org






எனவே தண்ணியடிப்பதை ஆதரியுங்கள்.
வாழ்க  TASMAC IniyaTamil TopSites