Sunday, February 20, 2011

பிரபாகரனின் தாயார் மரணம்

இந்தியர்களாலும் கருனாதியாலும் அலைக்கழிக்கப்பட்ட விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இன்று வல்வெட்டித்துறையில் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 81 . அவருடைய சிகிச்சைக்கு இந்தியா வந்த அவரை நம் அரசு  அவருக்கு அனுமதி தராமல் மறுத்ததற்கு நாமும் நம் மௌனனமும் ஒரு மறைமுக காரணமே. அம்மா எங்களை மன்னித்து விடுங்கள் அம்மா.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, February 18, 2011

பத்திரிகைகள் ஏன் அமைதி காத்தன? பாகம் 2

நான் முதல் பாகத்தில் மௌன ராகம் எதிலுருந்து எடுக்கப்பட்டது என்று சொல்லியிருந்தேன். இப்பொழுது வேறு ஒரு திரைப்படத்தை பற்றி சொல்ல போகிறேன். நெஞ்சத்தை கிள்ளாதே போல இது ஒரு வெற்றி படம் எல்லாம் இல்லை. மிக சுமாராக ஓடிய படம்.

                 இன்று பலரும் மறந்த ஒரு இயக்குனர் கார்வண்ணன் . அவருடைய முதல் படம் 'பாலம்'. நிச்சயமாக சொற்பராவது ஞாபகம் வைத்து இருப்பார்கள். ஒரு மந்திரியை கடத்தி வந்து இரண்டு ஊர்களை இணைக்கும் ஒரு பாலத்தில் வைத்து அரசாங்கத்திடம் ஏதோ ஒரு கோரிக்கையை  (என்ன கோரிக்கைன்னு மறந்து விட்டது) வைப்பார்கள். கடத்தல்காரர்களை கிட்டி டீம் முறியடிக்கும் . ஆனாலும் அவர்கள் மந்திரியை கொன்று விடுவார்கள். இதில் மந்திரியை கடத்துபவராக முரளி நடித்திருப்பார். 
          
               படம் முக்கால் பாகம் பாலத்திலேயே நடக்கும். ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பிற்கு குறையே இருக்காது. நிச்சயமாக இதை ஆங்கில படத்திற்கு இணையான படம் என்றால் அது மிகையாகாது. எந்திரன் போல ஆங்கில படத்தில் வேலை பார்த்தவர்களை கொண்டு தமிழ் படம் எடுத்து அதை ஆங்கில படத்திற்கு இணையான படம் என்று பறை சற்றி கொள்ளவில்லை. 
       
           பாலம் எடுத்த கார்வண்ணனின் இரண்டாவது படம் புதிய காற்று.  அப்படத்தின் கதையை பார்ப்போம் .

    கதை சுருக்கம் (என் ஞாபகத்தில்)
        
                நேர்மையான தமிழ் வாத்தியார் சாருஹாசன் ஒரு சிறு கிராமத்தில் ஆசிரியராக உள்ளார். அவர் வேலை பார்க்கும் பள்ளிக்கூடம் கூரை பெயர்ந்து மாணவர்கள் சிலர் மாண்டு போகிறார்கள். இதற்கு கோபம் கொள்ளும் வாத்தியார் பள்ளிகூட கட்டடம் கட்டிய ஒப்பந்தக்கரர்களை தட்டிக் கேட்கிறார். அவர்கள் அவரை கொன்று விடுகிறார்கள்.

      இதனால் கோபம் கொண்ட அவர் மகன்(முரளி) ஒப்பந்தக்கரர்களை கொள்கிறான். மேலும் இது போல் அரசாங்க அலுவலகத்தில் கையூட்டு பெறுபவர்களை எல்லாம் கொள்கிறான். ஆத்மா என்ற பெயரில் அவன் எல்லா கொலைகளையும் செய்கிறான். பொது மக்கள் ஆத்மாவை ஏற்றுக்கொள்கிறார்கள். அவனுக்கு பல ரசிகர்கள் உருவாகிறார்கள். டி சர்ட்டில் ஆத்மா என்று பெயர் எழுதி அலையும் அளவிற்கு.
  
     ஆத்மா யார் என்று போலிஸ் தேடுகிறது. புத்திசாலி போலீசான மு.க.முத்து (ஆமாம் தமிழ் ஈன தலைவர் நம்ம கருணாநிதி மகன் தான்) ஆத்மா யார் என்று கண்டு பிடிக்கிறார். ஆத்மா ஒரு பொது கூடத்தில் கையூட்டு வாங்கும் ஒரு மந்திரியை கொள்ள வரும் பொது அவனை சுட்டு விடுகிறார். அங்கிருந்து தப்பிக்கும் முரளி அவனுடைய காதலியிடம் ஆத்மா என்பது தான் தான் என்றும் தோட்டா தன்னை உயிர் வாழ விடாது என்றும் தான் இறந்தது இந்த உலகிற்கு தெரியக்கூடாது என்றும் அப்படி தெரிந்தால் மறுபடியும் அரசு அலுவலர்கள் பயமின்றி கையூட்டு பெற தொடங்கி விடுவார்கள். எனவே யாருக்கும் தெரியாமல் தன்னை புதைத்து விடுமாறு கேட்டு கொள்வதோடு படம் முடிவடையும்.

       இதிலுருந்து எடுக்கப்பட்ட படம் எதுவென்று யூகித்திருப்பீர்கள். சரி இரண்டாவது படத்தை பாப்போம்.

         மணிரத்னம் போலவே டைரக்ட்டா வேற படத்திலிருந்து கதைய தூக்கிற டைரக்டர். இவரும் பெரிய்ய்யய்ய்ய்ய இயக்குனர் . தமிழ் சினிமாவ தூக்கி நிறுத்துறவர். ஆமாம் அய்யா திருவாளர் ஷங்கர் தான் அது. படம் இந்தியன் . 
  
        இப்போ நாம் இரண்டு படத்திற்கும் உள்ள ஒற்றுமை மற்றும்  வித்தியாசத்தை பாப்போம். 
           முதல் படத்தில் அப்பா சாவார். மகன் எல்லாரையும் கொள்ளுவார்.
இரண்டாவது படத்தில்  அப்பா  எல்லாரையும் கொள்ளுவார் மகன் உட்பட. 
முதல் படத்தில் முரளி இறந்து விடுவார் அனால் அவருடைய சாவை மறைத்து அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று மக்கள் நினைப்பது போல் படம் முடியும். இரண்டாவது படத்தில் தாத்தா இறந்து விட்டதாக மக்கள் நினைப்பார்கள். ஆனால் அவர் சாகாமல் விபத்திலுருந்து தப்பித்து வெளி நாட்டிற்க்கு சென்று தான் இன்னும் சாக வில்லை என்று புத்திசாலி போலீசிற்கு தொலைபேசுவார். 
       இரண்டு படத்திலும் புத்திசாலி போலிஸ் உண்டு. இந்தியனில் நெடுமுடி வேணு . 
        முதல் படத்தில் ஆத்மா ரசிகர்கள் அவர் பெயர் போட்ட சட்டையை பயன்படுத்துவதை போல இந்தியனில் தாத்தா ஸ்டைலில் முடி வெட்டி கொண்டு அலைவார்கள். 
      
        பத்திரிக்கைகள் ஏன் இதை எல்லாம் கண்டு கொள்வதில்லை. ஆனந்த விகடன் காலச்சுவடு பகுதியில் நாம் நெஞ்சத்தை கிள்ளாதே மற்றும் புதிய காற்று விமர்சனத்தை எதிர் பார்ப்போமா?

           பத்திரிகைகள் ஏன் அமைதி காத்தன? பாகம் 3 ல் நாம் நம் இயக்குனர் சிகரத்தின் டூயட் படத்தின் ஒரிஜினல் படத்தை பார்ப்போமா? இதை போல் வேறு படம் உங்களுக்கு தெரிந்திருந்தால் அதை எழுதுங்கள் மறக்காமல் எனக்கு லிங்க் கொடுத்து விடுங்கள்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

இராமனுக்கும் இலங்கைக்கும் சம்மந்தம் இல்லையா?

நான் சமிபத்தில் கேள்விப்பட்ட ஒரு செய்தி எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதாவது இராமன் இலங்கைக்கு செல்லவேயில்லை என்றும் வால்மீகி எழுதிய கதையில் வரும் லங்கா சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ளது என்றும் அங்கே பெரிய ஏரி உள்ளது என்றும் அதன் நடுவில் தான் சீதா சிறைப்படுத்த பட்டாள் என்றும் அதற்கு பக்கத்தில் உள்ள ஒரு ஊர் தான் நாசிக் என்றும் அந்த ஊரில் தான் இலக்சுமணன் சூர்பனகை மூக்கை அறுத்தான் என்றும் அதன் காரணமாக தான் அந்த ஊருக்கு நாசி(மூக்கு)க் என்று பெயர் வந்தது என்றும். இப்படி பல என்றும் 
நிசமாவா?
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, February 17, 2011

பத்திரிகைகள் ஏன் அமைதி காத்தன?

நெஞ்சத்தை கிள்ளாதே
              நான் என்னுடைய 10வது வயதில் பார்த்த படம். சுஹாசினி நடித்த முதல் படம். கிரேட் மகேந்திரன் இயக்கத்தில் அருமையான படம். ஒரே ஒரு முறை தான் பார்த்திருப்பேன். என் நெஞ்சில் பச்சக் என்று ஒட்டி கொண்டது. 30 வருடம் கடந்த பின்னும் பல காட்சிகள் எனக்கு நினைவில்  உள்ளது. அதுவும்  சுஹாசினியின் துடுக்குத்தனம்.
         அதில் பலருக்கும் பிடித்த 'பருவமே' பாடலை விட எனக்கு 'உறவெனும் புதிய வானம்'  நல்லதொரு தாலாட்டாக இருந்திருக்கிறது. அதுவும் அந்த ஹம்மிங் வாவ் அதை எப்படி சொல்வது.


            கதை சுருக்கம் (என் ஞாபகத்தில் உள்ளவை)

               சுகாசினி துடுக்குத்தனம் நிறைந்த பெண். அவள் ஏழை மெக்கானிக் மோகனை காதலிக்கிறாள். அவளுடைய அண்ணனின் நண்பன் பிரதாப் போத்தன் ஒரு போட்டோகிராபர் .அவன் அவளின் சுட்டித்தனத்தால் அவளை ரசிக்கிறான். இவ்வேளையில் மோகன் சுகாசினியை சந்தேகப்படுகிறான். எனவே அவள் அவனை வெறுத்து அண்ணனின் ஆலோசனைப்படி பிரதாப்பை திருமணம் செய்து கொள்கிறாள். அவர்கள் வேறு ஊருக்கு மாறி விடுகிறார்கள். 
          
           இருவரும் வெளி உலகிற்கு தம்பதிகளாகவும், வீட்டில் வேறு விதமாகவும் வாழ்கிறார்கள். சுஹாசினி துடுக்குத்தனம் இல்லாமல் அமைதியாகவே இருக்கிறாள். பிரதாப் அவளுக்கு உபசரிக்கிறான். நாட்கள் செல்ல செல்ல பிரதாப் மீது அவளுக்கு காதல் வருகிறது. அனால் அதை அவள் வெளியே சொல்லாமலே இருக்கிறாள். இருவரும் பிரிந்து விடுவோம் என்று முடிவு செய்கிறார்கள். க்ளைமாக்சில் ஏர்போர்டில் கடைசி சமயத்தில் ஒன்று சேருகிறார்கள். ( இந்த படத்தின் கதையை நன்று தெரிந்தவர்கள் அதை பின்னுடமாகவோ அல்லது அவர்களின் ப்ளாகிலோ எழுதுங்கள் )
            




       நெஞ்சத்தை கிள்ளாதே வெளி வந்த சில வருடங்களுக்கு பிறகு வேறு ஒரு திரைபடத்தை பார்த்தேன்.  இதிலும் நாயகி துடுக்குத்தனம் நிரந்த பெண். அவள் திருமணத்தை வெறுக்கிறாள் . வீட்டில் ஒருவனை அவளுக்கு மனம் முடிக்கிறார்கள். அவன் நல்ல நிலையில் டெல்லியில் வேலை பார்க்கிறான். நெஞ்சத்தை கிள்ளாதே போலவே இதிலும் இவர்கள் வெளி உலகிற்கு தம்பதிகளாகவும், வீட்டில் வேறு விதமாகவும் வாழ்கிறார்கள். நெஞ்சத்தை கிள்ளாதே போலவே கணவன் அவளுக்கு உபசரிக்கிறான். இவள் ஏன் இவ்வாறு இருக்கிறாள் என்று ஒரு பிளாஷ் பேக் வருகிறது. அதில் நாயகி ஒருவனை காதலிக்கிறாள் . நெஞ்சத்தை கிள்ளாதே போல அவளுடைய காதலன் மெக்கானிக் அல்ல .ரௌடி.  ஒரு சமயம் நடந்த ஒரு வன்முறையில் போலிஸ் ரௌடியை தேடுகிறது. 
     இந்த சமயத்தில் இவர்கள் திருட்டு கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். நாயகி பதிவு அழுவலகத்தில் காத்திருக்கிறாள் . போலிசிடமிருந்து தப்பித்து வரும் போது நாயகியின் கண் முன்னே அவனை போலிஸ் சுட்டு கொள்கிறது. இத்துடன் பிளாஷ் பேக் முடிகிறது.  
          நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் காதலன் சந்தேகப்படுகிறான். இதில் காதலன் சாகிறான். வித்தியாசம் அவ்வளவே. பின்னர் நெஞ்சத்தை கிள்ளாதே போலவே நாட்கள் செல்ல செல்ல கணவன் மீது அவளுக்கு காதல் வருகிறது. அனால் அதை அவள் வெளியே சொல்லாமலே இருக்கிறாள். இருவரும் பிரிந்து விடுவோம் என்று முடிவு செய்கிறார்கள். க்ளைமாக்சில் புகை வண்டி நிலையத்தில் கடைசி சமயத்தில் ஒன்று சேருகிறார்கள். சிகப்பு நிறத்தில் உள்ளதை நான் copy paste செய்து இரண்டு இடத்தில மட்டும் மாற்றம் செய்திருக்கிறேன்.
         நான் இரண்டாவதாக பார்த்த படத்தை பெரும்பாலும் எல்லாரும் கண்டு பிடித்து இருப்பீர்கள் . ஆமாம் அது இந்தியாவின் மிகப்பெரும் இயக்குனர் என்று (அப்படியா) மார்க்கெட் உத்தியின் மூலம் சொல்லப்படும் மணிரத்னம் இயக்கிய மௌன ராகம். 

            மௌன ராகம் வெளி வந்து இன்று வரை இதை எந்த அச்சு ஊடகமோ அல்லது வேறு வகை ஊடகமோ சொல்ல வில்லை . அது ஏன் என்று புரியாத புதிராகவே இருக்கிறது. சொல்லவில்லை என்பதை விட தலையில் தூக்கி வைத்து ஆடுகிறது.
           காரணம் தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

மங்காத்தாவை நாம் புறக்கணிப்போம்.

கங்கை அமரன் காசிற்காக அ(ராஜ)க (பக்சேயை) சந்தித்து அவரிடம் புதிய படத்திற்கான ஒப்பந்தத்தை இட்டிருந்தால் அவர் இன்னுமொரு கருணாநிதியே . மேலும் அந்த படம் இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக இருப்பதை போல ஒரு பொய்யான செய்தியை அந்த திரைப்படத்தின் மூலம் பரப்ப வேண்டி அதை போன்ற ஒரு கதையை வெங்கட் பிரபு உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்  என்று அச்செய்தி சொல்கிறது. இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்கம் அடுத்த படமான மங்காத்தாவை நாம் புறக்கணிப்போம்.இதை நாம் நம் ஈழ சகோதர சகோதிரிகளுக்காக செய்வோம்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, February 16, 2011

மோசமான திரையங்குகள்

        நாம் சில படங்களை மிகவும் மோசமான திரையரங்கில் சென்று பார்க்க வேண்டியிள்ளது. சமிபத்தில் வாடா போடா படத்தை மதுரை அலங்கார் தியேட்டர் சென்று பார்க்க வேண்டி இருந்தது. உன்னை யார் அந்த படத்திற்கு போக சொன்னா? அதுவும் அலங்கார்ல என்று நண்பர்கள் கேட்டார்கள். நானும் ஒரு பதிவர் ஆகி விட்டேன் என்றெல்லாம்  அவர்களிடம் சொல்லவில்லை. தமிழகத்தின் புதிய திரைப்படத்தின் கட்டண கொள்(கை)ளையால் டிக்கெட் விலை 50 ரூபாய் . 50 ரூபாய் அதிகம் என்று நான் நினைக்கவில்லை . பிக் சினிமா கணேஷில் 40 ரூபாய் தான் . ஆனால் 60 கூட கொடுக்காலாம். (சமிபத்தில் அர்ஷில் 85 கொடுத்து பயணம் போனேன் . சுகமான பயணமாக இருந்தது) எனவே நான் சொல்வது என்னவென்றால் விலை முக்கியம் இல்லை. அதற்கேற்ற வசதி தான் நான் விரும்புவது.
         சரி நாம் அலங்காருக்கு வருவோம் . திரையரங்கில் கூட்டம் கிடையாது. ஆங்காங்கு சிலர் அமர்ந்து இருந்தார்கள். அதில் அனேகர் ஹோமோ பார்டிங்க. பெரும்பாலும் உள்ளே இருந்தவங்க எல்லாம் பொட்டலம் அடிக்கிறவங்க. தியேட்டர்  முழுவதும் கஞ்சா மணம்(நாற்றம்). நான் தனியாக தான் படம் பார்க்க போயிருந்தேன்.  நான் புகை பழக்கத்தை நிறுத்தி 9 ஆண்டுகள் ஆகி விட்டது. நான் புகைத்த போது கூட பொது இடத்தில புகைக்க மாட்டேன்( சாலையை சொல்லவில்லை) .
        படம் முடியம் கடைசி நிமிடம் வரை கூட தியேட்டரை சேர்ந்த பணியாளர்கள் யாரும் வரவில்லை . இது போன்ற திரையரங்கு உரிமையாளர்கள் தயவு செய்து டிக்கெட்  விலையை 200 ரூபாயாக உயர்த்துங்கள். அப்போது தான் என் போன்றவர்கள் உங்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள். ஹோமோ பார்டிங்க எப்படியும் வந்துடுவாங்க. என்னை போன்றவர்கள் வராமல் இருந்தால் அவர்கள் நிம்மதியாக அவர்கள் வேலையை செய்வார்கள் . ஆண் பாவம் பொல்லாதது. வீனா  பல ஆண் ஜோடிகள் பாவத்தை சம்பாதிக்காதீங்க .  
   என்ன? படம் எப்படி இருக்கா? உண்மையை சொன்னா படம் பரவாயில்லை . ஒரு தடவை பார்க்கலாம். டைரக்ஷன் சொதப்பல். மத்தபடி பரவாயில்லை. 
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, February 10, 2011

சீடன் விமர்சனம்

வணக்கம். இது எனது முதல் ப்ளாக். எனது நடை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை . இது வரை வாசகனாக மட்டுமே இருந்திருக்கிறேன் . முதல் முறையாக எழுதுகிறேன். தவறு இருந்தால் தயவு செய்து சுட்டி காட்டவும். நன்றி

இரண்டு நாட்களுக்கு முன்பு டிவியில் சீடன் ட்ரைளர் பார்த்தேன். பார்த்தவுடன் அது நான் ரசித்த மலையாள சினிமாவான நந்தனம் படத்தின் தமிழ் பதிப்பு என்று தெரிந்தது . ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த படம். இன்றும் நந்தனம் படத்தின் பாடலை கேட்கும் போது என்னையும் அறியாமல் நான் அதனுடன் ஒன்றி விடுவேன். அதில் ப்ரித்விராஜ் , நவ்யா நாயர் இருவரும் அறிமுகம் ஆனார்கள் என்று நினைக்கிறன் . நவ்யா அதில் கொள்ளை அழகாக இருப்பார்.
கதை
அனாதை பெண்ணான நவ்யா குருவாயூரில் வீட்டு வேலை பார்க்கும் பெண். அவள் ஒரு கிருஷ்ணன் பக்தை. அவள் குருவாயூர் கோவிலுக்கு போக நினைக்கும் போது எல்லாம் எதாவது ஒரு தடை வந்து விடும் அவளால் . கோவிலுக்கு செல்ல முடியாது. அவள் வேலை பார்க்கும் வீட்டில் ஒரு வயதான அம்மா மட்டும் இருப்பார். அந்த அம்மாவின்  செல்ல வேலைகாரியாக நவ்யா இருப்பார். நன்றாக பாடுவாள். விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் பேரன் ப்ரித்விராஜ் நவ்யாவை காதலிப்பார் (வேற என்ன பண்ணுவாங்க) 


அனால் அவனுக்கு அம்மா ரேவதியின் கட்டாயத்தால் வேறு ஒரு பெண்ணிற்கு நிச்சயம் ஆகிறது . நவ்யாவால் ஒன்றும் செய்ய இயலாத நிலை. இந்த சமயத்தால் நவ்யாவின் பால்ய காலத்து நண்பனும் ஊரிலிருந்து வருகிறான். நவ்யாவின் நிலையை அறிந்து அவன் அவளுக்கு உதவி செய்கிறான் . அவனின் உதவியால் நவ்யவிற்கும் ப்ரித்விரஜ்ஜிற்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது. இதற்கு நன்றி சொல்ல அவள் அவன் நண்பனை பார்க்க அவன் வீட்டிற்கு செல்கிறாள். நண்பனின் அக்காவிடம் நண்பன் எங்கே என்று கேட்கிறாள் . உள்ளே இருப்பதாக சொல்லி அவனை அழைத்து வர செல்கிறாள். வரும் போது ஒரு புதியவனை அழைத்து வருகிறாள். இவன் தான் என் தம்பி என்று சொல்கிறாள். அனால் இது வரை அவனிடம் பழகியதும் அவளுடைய காதலுக்கு உதவியதும் வேறு ஒருவன். அவன் யார் என்று இவளுக்கு தெரியவில்லை . அதன் பின் அவன் வருவதுமில்லை . ப்ரித்விராசுடன் திருமணம் நடக்கிறது. குருவாயூர் கோவிலுக்கு செல்கிறார்கள்.வழக்கம் போல் இவளால் உள்ளே செல்ல முடியவில்லை. காரணம் யாரோ ஒரு மந்திரி கோவிலுக்கு வருவதால் பொது மக்களை அனுமதிப்பதில்லை என்று . இவள் கோவில் வெளியே நின்று சாமி கும்பிடுகிறாள். அப்பொழுது நவ்யாவின் காதலுக்கு உதவியவன் கோவில் உள்ளே இருந்து இவளுக்கு கை காட்டுகிறான். அப்படியே கர்ப்ப கிரகத்தின் உள்ளே சென்று மறைகிறான். படம் முடிகிறது.


பல நல்ல மலையாள படங்கள் தமிழுக்கு வரும் போது. அதன் தரத்தை அது இழக்கிறது . உதாரணம் : முத்து , சந்திரமுகி , சுந்தரா ட்ராவல்ஸ் , குசேலன், காவலன்.

இப்பொழுது சீடன் வருகிறது .எப்படி இருக்க போகிறதோ ? . நந்தனம் பார்க்கும் போது இது போல ஒரு படத்தை  நிச்சயமாக தமிழில் யோசனை கூட பண்ண மாட்டார்கள் என்று நினைத்தேன். நந்தனம் ரீ மேக் பண்ண நினைத்தவர்கள் நிச்சயம் அதன் பாடலை கேட்காமல் இருக்கா மாட்டார்கள். தினாவால் நந்தனம் பாடலை போல மனதை வருடும் பாடலை கொடுக்க முடியாது. கொடுத்தாள் மகிழ்ச்சி. முடியவில்லை என்றால் அதே பாடலை கூட பயன் படுத்தலாம். தமிழில் கீழ் கண்ட படங்களை ரீ மேக்கிடலாம்.
௧. மீச மாதவன்
௨ பெருமழக்காலம்
௩ மம்மி அண்ட் மீ
௪ கல்யாணராமன்
௫ யாத்ராகரோடசுரத்தைக்கு




IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...