நான் பதிவுலகிற்கு வந்து ஒரு ஆண்டுகள் ஆகிறது . அடிக்கடி சென்னையில் பதிவர்கள் சந்தித்து கொள்கிறார்கள். சமிபத்தில் நெல்லையில் கூட பதிவர்கள் சந்தித்து கொண்டார்கள். அனால் மதுரையில் அது போன்ற ஒரு நிகழ்வு நடந்ததாக தெரியவில்லை , நடப்பதற்க்கான சுவடும் தெரியவில்லை. அதற்க்கான முயற்சியில் மதுரை பதிவர்கள் யாரும் ஈடுபட்டாக தெரியவில்லை.யாரேனும் அவ்வித முயற்சியில் ஈடுபட்டிருந்தால் இங்கே தெரிவிக்கவும்.
இல்லையெனில் இதையே முதல் முயற்சியாக எண்ணி என் போன்று மதுரை பதிவர்கள் சந்திப்பு நடக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள். உங்கள் விவரங்களை இங்கே தெரிவிக்கவும்.நன்றி
6 comments:
விவரங்களை மெயிலில் அனுப்பியவர்களுக்கு நன்றி.
நானும் வரிசையில நிற்கிறேன்
ரைட்டு.... முயற்சிப்போம்..
அன்பின் மனதில் பட்டதை எழுதும் மனசாலி - மதுரையில் ஏறத்தாழ இருபது பதிவர்கள் இருக்கிறார்கள். மதுரையைச் சார்ந்த - வெளியூரில் வசிக்கும் பதிவர்கள் ஏறத்தாழ எங்களுக்குத் தெரிந்த வரை ஏழெட்டுப்பேர். தாங்கள் மதுரையில் வசிப்பவரா ? மதுரையைச் சார்ந்த வெளியூரில் வசிக்கும் பதிவரா ? தங்களின் ஆதங்கம் புரிகிறது. சென்னையில் பதிவர்கள் அதிகம். அடிக்கடி கூடுகிறார்கள் - நெல்லையில் - அயலகத்தில் வசிக்கும் நெல்லையைச் சார்ந்த நண்பர்கள் நெல்லைக்கு வந்த போது சந்திப்பு சிறப்பாக நடத்தினார்கள். மதுரையில் வசிக்கும் பதிவர்கள் அடிக்கடி சந்திக்கிறோம் - ஆக்க பூர்வமாகச் சிந்திக்கிறோம். செயல்படுகிறோம். தங்களின் விருப்பம் என்ன - விபரமாக மின்னஞ்சலில் எழுதவும். நிச்சயம் விருப்பத்தினைப் பற்றிச் சிந்தித்து ஆவன செய்வோம். தங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பும் அனுப்புக. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
நான் உங்கள் பின் தொடர்கிறேன்
ரைட்டு.... முயற்சிப்போம்..
vgovindaraj,madurai
Post a Comment