Friday, November 25, 2011

ஆட்சிக்காலம் ஐந்து வருடம் முடிந்தால் மரணம்



ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
  
அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.
 
 இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.
 
 இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.
 
 மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''  தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது ! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''
 
 கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
 
 மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
 
 மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.
 
 படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
 
 ''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''
 
 ''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''
 
 ''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''
 
 ''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''
 
 ''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம்
வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
 
 இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.
 
 மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு,வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
 
 நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
 
 இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப்
போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு !'' என்றான் மன்னன்.
 
 ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
 
 மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?
 
 பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.
 
 ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
 
 இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!
 
 அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே!!!!!!!
 
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, November 24, 2011

தங்கம், லித்தியம், தாமிரம், கோபால்ட்: உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிம புதையல்!





உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்காவின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.

இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் 'ஸ்மெல் பண்ணவர்கள்' அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.

இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் பேரளவில் கண்டுபிடித்துள்ளனர்.

இப்படியொரு தாதுப் படுகை, பெரும் பொக்கிஷம் தங்கள் நாட்டில் இருப்பதே தெரியாமல் போரிலும் மதத் தீவிரவாதத்திலும் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு சொல்லப்பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது.

ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும்.

'இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்' என்கிறார் ஒரு அதிகாரி. லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம்.

இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்.

ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில்,

"ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்.

மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும் என்றார்.

இந்த கனிமப் புதையலில் மதிப்பு என்ன?:

அதைத் தெரிந்து கொள்ளும் முன், ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் எவ்வளவு என்று பார்க்கலாம்.

இந்த நாட்டின் பொருளாதாரம் பெருமளவு சார்ந்திருப்பது... விவசாயத்தையோ, தொழிற்சாலைகளையோ அல்ல. ஓப்பியம் மற்றும் அபின் தயாரிப்பை!

சர்வதேச அளஷவில் கொடிய போதைப் பொருள்கள் அனைத்துக்கும் தாயகமாகத் திகழ்கிறது ஆப்கானிஸ்தான். மேற்கு ஆசியாவின் போதை மருந்து முக்கோணத்தின் மையப் பகுதி ஆப்கானிஸ்தான். இன்று நேற்றல்ல...பண்டைய காலத்திலிருந்தே ஓப்பியம் தயாரிப்பது ஆப்கானிஸ்தானில் குடிசைத் தொழில் மாதிரி.

இதற்கடுத்த வருவாய் ஆதாரம், முன்பு ரஷ்ய உதவி. இப்போது அமெரிக்கா தரும் நிதியுதவி.

இப்படி சகல வழிகளிலும் ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் அளவே 12 பில்லியன்கள்தான்! அதாவது இந்த 12 பில்லியன் டாலர்தான் ஆப்கானிஸ்தானின் ஜிடிபி (gross domestic production!). ஒரு சர்வதேச நடுத்தர ஐ.டி. நிறுவனத்தின் லாபத்தின் அளவும் இதுதான்.

ஆனால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரைத் தாண்டும் என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன் கணக்கில் சொன்னால் 1000 பில்லியன் டாலர்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவின் ஜிடிபியே 1.23 ட்ரில்லியன்தான்!!.

இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதுதான் இப்போது எழுந்துள்ள 'பில்லியன் டாலர் கேள்வி'!. அல்லது இதை அமெரிக்கா எப்படி மறைமுகமாக சுருட்டப் போகிறது என்பது தான் 'ட்ரில்லியன் டாலர் கேள்வி!'.

ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் தலிபான்கள் தலைதூக்கும் நிலை. நாட்டின் ஒரு பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது.

இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப் பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில், இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியலறிஞர்கள்.

இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படியெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது.

ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.

ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்க ஆப்கன் அமைச்சர் ஒருவரே 30 மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர் அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.

ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான் என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப் பார்த்தால், 'தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா அல்லது தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா என்பது தெரியவில்லை.

கடந்த ஓரிரு வாரங்களில் தான் இந்த ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா.

'unobtinum' என்ற கற்பனையான கனிமத்தை எடுக்க பண்டோரா கிரகத்தையே அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து, அதன் மக்களை ஒழித்துக் கட்டும் கற்பனைக் கதையைத் தான் 'அவ்தார்' என்ற படமாக எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன். 3 டி சமாச்சாரம், அன்னிய கிரகவாசிகள் என்று கதை போனதால் கேமரூன் சொல்ல வந்த விஷயம் (கதையின் கரு ) பெரிதாகப் பேசப்படவில்லை.

இப்போது ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிம வளம் கிட்டத்தட்ட பண்டோரா கிரக கதை மாதிரி ஆகிவிடுமோ என்ற அச்சம் இப்போதே பரவ ஆரம்பித்துவிட்டது.

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, November 23, 2011

புரோட்டா பிரியர்களுக்கு ஒரு அபாய மணி


புரோட்டா பிரியர்களுக்கு ஒரு அபாய மணி




IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, November 21, 2011

ஜோக் பதிவு போட்டு ரொம்ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்ப நாள் ஆனதால் இந்த பதிவு.



 போடா, நீ முட்டாள் !
குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !
டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?
நான் ஒருத்தன் இங்கே இருப்பது
உங்களுக்கு தெரியலையா ? 
 ***************************************************************************


பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
********************************************************************************

வாத்தியார்: ஒரு "COMPOUND sentence" சொல்லுடா!
பையன்: "STICK NO BILLS"

 **********************************************************************************
என்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது..
நான் தான் சொன்னேனே...என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு .
******************************************************************************** 

நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
******************************************************************************** 

"ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்...."
"ஏதாவது பிரச்சினையா...?"
"ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!"
******************************************************************************** 

"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."
"உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"
******************************************************************************** 

உங்க செல்லுக்கு - என்

அட்ரஸ் அனுப்பியிருக்கிறேன் ..!!

என்னோட அட்ரஸுக்கு - உங்க

செல்-ல அனுப்பமுடியுமா..??


       
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, November 11, 2011

மதுரை சௌராஷ்டிரா மக்களின் முதல் சினிமா முயற்சி

            தமிழ் திரைத்துறை என்பது தமிழ் மொழி பேசுபவர்கள் அல்லாது பிற மொழி பேசுபவர்களையும் உள்ளடக்கியது. ஆரம்ப கால தமிழ் திரைத்துறையில் மதுரையை சேர்ந்த சௌராஷ்டிரா மொழி பேசுபவகள் பலர் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் தமிழ் படங்கள் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அவர்கள் சௌராஷ்டிரா மொழியில் ஒரு முழு நீள திரைப்படம் உருவாக்கவேண்டும் என்றில்லாமல் தமிழ் படங்கள் தயாரிப்பதிலேயே ஆர்வம் காட்டினர்.
           இன்று அந்த மொழி பேசும் இளைஞர்கள் சிலர் சௌராஷ்டிரா மொழியின் முதல் திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் உள்ளனர். ஏற்கனவே சில டெலி பில்ம்கள் சௌராஷ்டிரா மொழியில் வந்திருந்தாலும் முதன் முறையாக இத்திரைபடத்தை qube  பார்மட்டில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
அவர்களின் முயற்சி வெற்றி பெற மனசாலி மனதார வாழ்த்துகிறது. இதோ டிரைலர் நீங்களும் பாருங்களேன். மறக்காமல் கமெண்ட் எழுதுங்கள்.


நன்றி டாப் டென் பின்னுட்டங்கள் நாளைய மனசாலியில்
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, November 4, 2011

டாப் டென் பின்னுட்டங்கள் மனசாலி பார்வையில் 03

இதோ இந்த வாரத்திற்கான வரிசை 


10
சும்மா.. டைம் பாஸ் said... 4
உள்ளூரில் ஏ.ஆர். முருகதாஸ், மோசமாக விமர்சிக்கப்பட்டாலும்- Because in the Tamilnadu more 50% of the people are not from Tamil origin, they settled here for many generations, They speak,Read and write Tamil but at home they speak different language, major junk of them are Telugu and Malayalam origin. So in Tamilnadu orginal Tamils are Minority people.


பதிவு 

09
சித்திரவீதிக்காரன் said...
நமக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம். மதுரை, தமிழ், இயற்கை மீது கொண்ட காதலால் தனியாக பெண்கள் மீது காதல் வருவதில்லை. வேறு மாதிரி சொல்வதென்றால் பயம் அதிகம். அடி வாங்குற அளவுக்கு உடம்பு கிடையாதுன்றதாலயும் காதல் வராமல் இருந்திருக்கலாம். பகிர்வுக்கு நன்றி.
பதிவு  
காதலுக்கு கண் இருந்தது
08

ஹேமா said... காலர்- அழைப்பவர்
ஆர்குட்- அல்லது நல்லது(or good)
கூகில்- கூவைக் கொல்லு
அல்லது கூ! போய் கொன்றுவிட்டு வா!
பிகாஸா- பன்னி காரணமா?(pig causeaa)
யாஹீ - யா என்பது யார்?
iphone- கண் தொலைபேசி அல்லது ஐ! தொலைபேசி  
ட்விட்டர்- திட்டுபவர்
( twit- scold/insult)
ஆப்பிள்- இது இன்னும் தமிழ் வார்த்தைல சேரலையா?
karate, kungfu- ஜப்பானிய மொழியை படித்துவிட்டு சொல்கிறேன்.

பதிவு  
Facebook என்ன இளிச்சவாயா.?!


 07
Mayu said...
பிரபாகரன் ஒரு விடுதலை வேண்டி போராடிய ஒரு தேசத்தின் தலைமகன், அவரை கவுண்டமணி போன்ற நகைச்சுவை நடிகருடன் ஒப்பிடுவது மனதுக்கு வேதனை தருகிறது. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது வேறு விடயம், ஆனால் அதை நகைச்சுவைக்கான பேசுபொருளாக தயவு செய்து எடுக்காதீர்கள்.. Pirabaharan is a legend of Tamil's history after the fall of Sera,Chola, Pandiyar Kingdoms.
பதிவு  

06
vanathy said... 103 104
மனோ, இந்த கிப்ட் ஐடியா நல்லாதேன் இருக்கு. ஆனால், சிலருக்கு எவ்வளவு கொட்டினாலும் திருப்தியே வராதே. அவர்கள் எங்களுக்கு எதுவும் தராவிட்டாலும் பரவாயில்லை கொடுப்பதை சந்தோஷமா வாங்கினாலே போதும். என் உறவினர் ஒருவருக்கு ஏதாவது கிப்ட் கொடுத்தாலும் கதை சொல்வார். கொடுக்காவிட்டாலும் நக்கல் அடிப்பார்.


 பதிவு 

05
kailash said...
You need to provide your account details for verification purpose only when you call bank or credit card company. If they are calling you , you dont need to provide any details even if it is legitimate call . Set SMS Alerts for your Account and Credit Card Transactions , alerts will come within 2 - 5 secs .
பதிவு  


04
ரா.செழியன். சொன்னது…[பதிலளி]
,”சமச்சீரிலிருந்து””நூலகம்” வரை எவ்வளவு பெருந்தன்மையான,காழ்ப்புணர்ச்சியற்ற,மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற அண்ணாவின் எண்ணங்களை பிரதிபலிக்கும் தாயை முதல்வராக இந்த தமிழ்கூறும் நல்லுலகம் பெற்றிருக்கிறது!!!!!!!அவர்களின் மனதை விடவா இந்த நூலகம் பெரிது?வாழ்க தமிழன்,தமிழ்நாடு.......
பதிவு  

03

Ganpat said...
உயிரையே பணயம் வைத்து ஊசி வாங்கப்போகும் அப்பாவிகள்! விற்பனை வரி இல்லாமல் விற்கப்படும் பொருட்களை வாங்க போட்டியிடும் தேசப்பற்று மிக்க நுகர்வோர்கள்!! அரசு/சட்டம் என் **** த்துக்கு சமம் என தன்னிச்சை போல செயல்படும் வியாபாரிகள்!!! எவ்வளவு விதி மீறலுக்கு,எவ்வளவு வாங்கலாம் என கணக்குபோடும் நேர்மையான அரசு அதிகாரிகள்!!! அனாவசியமாக கேள்வி எழுப்பும் நீதிமன்றங்களின் வாயை அடைக்க அவசர சட்டம் கொண்டு வரும் அதைவிட நேர்மையான முதல் அமைச்சர்கள்.!!! இவர்கள் கூடி தேர் இழுக்கும்வரை வரை ரங்கநாதன் தெருவில் இன்னொரு WTC tower கட்டப்பட்டால் கூட ஆச்சரியம் இல்லை! பொறுத்துக்கொள்ளுங்கள்.இந்த நாடகம் ஓரிரு நாட்களில் முடிந்து விடும்.அப்புறம் ஜாலியாக shopping செல்லலாம்!!
பதிவு  

02

பாலா said... at 31 October 2011 20:55
அடுத்துவருக்கு இடைஞ்சல் தரும் கொண்டாட்டங்கள் தேவைதானா. இது உங்க ஊரின் தலைவிதி போலும்.
பதிவு  


01
விஜயகாந்த் said...
மக்களே, மக்களே என்று விஜயகாந்த்தும், பிரேமலதாவும் ஊர் ஊராகப் போய்க் பிரச்சாரம் செய்தும் மக்கள் வாக்களிக்காமல் போனதற்கு முக்கியக் காரணங்களை ஆராய்வோம். 1. முதலில் தேமுதிகவை மக்களுக்கான கட்சியாக, அதாவது மக்கள் கட்சியாக இன்னும் விஜயகாந்த் மாற்றவில்லை. 2.மக்களுக்கான போராட்டங்களை தேமுதிக முறையாக சரியான நேரங்களில் நடத்தத் தவறி விட்டது. 3. தனக்கென்று வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றே விஜயகாந்த் செயல்பட்டது. 4. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வர வேண்டும் என்ற மக்களின் அடிப்படை எதிர்ப்பார்ப்பை அவர் மதிக்கத் தவறி விட்டார். 5. அதிமுகவையும், திமுகவையும் கடுமையாக சாடி வந்த விஜயகாந்த், மறுபடியும் அதிமுகவிதாமே கூட்டணி வைத்தது மக்களுக்கு பிடிக்கவில்லை. 6. சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு அமோகமான வாக்குகள் கிடைக்க திமுக மீதான மக்களின் கடும் அதிருப்தியும், கோபமுமே காரணம். அதை சரியாக கணிக்காமல் தன்னுடைய கூட்டணிதான் இந்த வெற்றிக்கு காரணம் என நினைத்தது. 7. திமுகவை விட மேலான கட்சியாக தேமுதிக உருவெடுத்த போதிலும், சரியான எதிர் கட்சியாக சட்டமன்றத்தில் செயல் படாதது. 8. நடக்கும் ஜெ தலைமையிலான ஆட்சி குறித்து ஒரு வருடம் கழித்தே பேசுவேன் என்று தெனாவெட்டாக விஜயகாந்த் பேசியது. 9. ஒரு எதிர்க்கட்சியாக பொறுப்பாக நடந்து கொள்ளாமல் இருந்தது. 10. யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பாக ஒரு நல்ல அங்கீகாரத்தை மக்கள் கொடுத்தும் கூட அதை சற்றும் பொருட்படுத்தாமல் தேமுதிக செயல்பட்டதால் தான் மக்கள் ஒதுக்கிதள்ளியுள்ளனர். தேமுதிக ஒரு பொறுப்பான மக்கள் கட்சி, மக்களாகிய நம் குரலே தேமுதிகவின் குரல், நமக்கான கட்சிதான் தேமுதிக என்ற நிலை வரும் போதுதான் அந்தக் கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும். அந்த ஆதரவும் நிரந்தரமாகும், அப்போதுதான் தேமுதிக உண்மையான மாற்றுக் கட்சியாக மாற முடியும் என்பதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உணர வேண்டும்.
பதிவு  









IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, November 1, 2011

மொத்தமாக இந்தியா உங்கள் கைகளில்

இந்த போஸ்டில் இந்திய அரசு நிறுவனங்களின் இணையதள முகவரிகளை  தருகிறேன். இது நிச்சயமாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். BROWSING CENTRE நடத்துபவர்கள் இதை பிரிண்ட் செய்து உங்கள் சென்டரில் ஒட்டி வைத்து கொள்ளுங்கள்.


All Indian government office related links are available... . Kindly save it......
Obtain:

*   Birth Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=1>
*   Caste Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=4>
*   Tribe Certificate <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=8>
*   Domicile Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=5>
*   Driving Licence <
http://www.india. gov.in/howdo/ howdoi..php? service=6>
*   Marriage Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=3>
*   Death Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=2>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>
Apply for:

*   PAN Card <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=15>
*   TAN Card <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=3>
*   Ration Card <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=7>
*   Passport <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=2>
*   Inclusion of name in the Electoral Rolls <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=10>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>
Register:

*   Land/Property <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=9>
*   Vehicle <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=13>
*   With State Employment Exchange <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=12>
*   As Employer <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=17>
*   Company <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=19>
*   .IN Domain <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=18>
*  
GOV.IN Domain <http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=25>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>
Check/Track:

*   Waiting list status for Central Government Housing <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=9>
*   Status of Stolen Vehicles <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=1>
*   Land Records <
http://www.india. gov.in/landrecor ds/index. php>
*   Causelist of Indian Courts <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=7>
*   Court Judgements (JUDIS ) <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=24>
*   Daily Court Orders/Case Status <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=21>
*   Acts of Indian Parliament <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=13>
*   Exam Results <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=16>
*   Speed Post Status <
http://www.india. gov..in/howdo/ otherservice_ details.php? service=10>
*   Agricultural Market Prices Online <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=6>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>
Book/File/Lodge:

*   Train Tickets Online <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=5>
*   Air Tickets Online <
http://www.india. gov..in/howdo/ otherservice_ details.php? service=4>
*   Income Tax Returns <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=12>
*   Complaint with Central Vigilance Commission (CVC) <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=14>
*
  Search More - How do I <http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>
Contribute to:

*   Prime Minister's Relief Fund <
http://www..india. gov.in/howdo/ otherservice_ details.php? service=11>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>
Others:

*   Send Letters Electronically <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=20>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>
Recently Added Online Services

*   Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2691>
*   Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2693>
*   Tamil Nadu: View Water shed Atlas of Tamil Nadu <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2694>
*   Tamil Nadu: E-Pension District Treasury Tirunelveli <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2695>
*   Meghalaya: Search Electoral Roll Online by Name (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2697>
*   Meghalaya: Search Electoral Roll Online by EPIC number (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2698>
*   Meghalaya: Search Electoral Roll Online by House number (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2699>
*   Himachal Pradesh: Revised Pay and Arrears Calculator-Fifth Pay <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2702>
*   Meghalaya: Search Electoral Roll Online by Part number (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2700>
*   Andhra Pradesh: Online Motor Driving School Information <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2705>  
Global Navigation

*   Citizens <
http://www.india. gov.in/citizen. php>
*   Business (External website that opens in a new window) <
http://business. gov.in/>
*   Overseas <
http://www.india. gov.in/overseas. php>
*   Government <
http://www.india. gov.in/govt. php>
*   Know India <
http://www.india. gov.in/knowindia .php>
*   Sectors <
http://www.india. gov.in/sector. php>
*   Directories <
http://www.india. gov.in/directori es.php>
*   Documents <
http://www.india. gov.in/documents .php>
*   Forms <
http://www.india. gov.in/forms/ forms.php>
*   Acts <
http://www.india. gov.in/govt/ acts.php>
*   Rules <
http://www.india. gov.in/govt/ rules.php>
*   Schemes <
http://www.india. gov.in/govt/ schemes.php>
*   Tenders <
http://www.india. gov.in/tenders. php>
*   Home <
http://www.india. gov.in/default. php>
*   About the Portal <
http://www.india. gov.in/aboutthep ortal.php>
*   Site Map <
http://www.india. gov.in/sitemap. php>
*   Link to Us <
http://www.india. gov.in/linktous. php>
*   Suggest to a Friend <
http://www.india. gov.in/suggest/ suggest.php>
*   Help <
http://www.india. gov.in/help. php>
*   Terms of Use <
http://www.india. gov.in/termscond tions.php>
*   Feedback <
http://www.india. gov.in/feedback. php>
*   Contact Us <
http://www.india. gov.in/contactus .php>
*   Accessibility Statement <
http://www.india. gov.in/accessibi litystatement. php>

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...