மதுரையில் பவர் கட் செய்வதை பற்றி நான் ஒரு பதிவிடலாம் என்று நினைத்திருந்தேன். நேரமும் மின்சாரமும் இல்லாத காரணத்தால் அதை எழுத இயலவில்லை. மின்சாரத்தை நம்பி வேலை செய்பவர்களுக்கு வருமானம் குறைவதை பற்றி எழுதலாமென்று இருந்தேன்.
ஆனால் இப்பொழுது நான் இங்கே சொல்ல போவது ஷாக் அடிக்கும் ஒரு விஷயம். பவர் கட் எப்படி ஷாக் அடிக்கும்னு நினைக்கிறீங்களா?. சொல்றேன்.
இப்போ ஒரு ஐந்து நாளாக மாலை வேளையிலும் இரவு வேளையிலும் பவர் கட்டாகிறது .
சீரியல் பார்க்க முடியாத தாய் மார்கள் எல்லாம் வெளியே வந்து அமருகிறார்கள். சீரியல் பார்க்க முடியாத வருத்ததோடு. இபபொழுது இரண்டு நாளாக மாலையிலோ இரவிலோ பவர் கட் ஆனால் வெளியே மகிழ்ச்சியாக அமர்ந்து இருக்கிறார்கள் கூடவே எதிர்பார்போடு. என்ன சங்கதி என்று விசாரித்தேன். இவ்வாறு இருட்டிய பிறகு பவர் கட் ஆனால் ஆளும் கட்சியினர் ஒட்டு போட பணம் குடுக்கிறார்கலாம்.
இவர்களும் கரண்ட் வரும் வரை அமர்ந்து இருக்கிறார்கள். யாரும் வந்த மாதிரி இல்லை. மறுநாள் பேச்சு என்ன தெரியுமா . நேற்று கரண்ட் போனப்போ மூணாவது தெருவில கொடுத்து இருக்காங்க. அநேகமா இன்னக்கு நாம சந்துக்கு வருவாங்க.
இந்த நாளும் இருட்டிய பிறகு கரண்ட் போனது. ஹை ஜாலி என்று எல்லாரும் வெளியே வந்து அமர்கிறார்கள். தர்ம பிரபுக்களை எதிர் பார்த்து.
எனக்கு நினைவு தெரிந்து கரண்ட் கட் ஆகும் சமயம் திருட்டு நடக்கும். மக்கள் பணத்தையோ நகையையோ பறிகொடுப்பர்கள். அனால் இன்றோ கரண்ட் போனால் பணம் கிடைக்கிறது.
வாழ்க கலைஞர். வாழ்க அழகிரி. வாழ்க தேர்தல் முக்கியமாக வாழ்க நம் மாண்புமிகு பொது மக்கள்.
0 comments:
Post a Comment