Sunday, July 29, 2012

ஜூலை மாதத்திற்கான கடைசி புதிர்கள்.

ஜூலை 18 அன்று நான் கேட்டிருந்த எல்லா புதிருக்கும் சரியான விடையை கூறியிருந்தீர்கள்.  மனசாளியின் பாராட்டுக்கள்.

இன்று இரண்டு கணித  புதிர்களும் ஒரு வார்த்தை புதிரும் தருகிறேன். எல்லா புதிரும் எளிமையானவை தான். கணித புதிர்கள் வழக்கம் போல சுவாரஸ்யமானவை.



1. புதிர் ஒன்று.

பின் வரும் எண்களை கூட்டுங்கள்
1000
40
1000
30
1000
20
1000
10

முதல் முறை வந்த விடையை பின்னுட்டம் இடவும்.



2. புதிர் இரண்டு

20 ஐ  1/2 யில் வகுத்து வரும் விடையுடன் 10ஐ கூட்டவும்.

முதல் முறை வந்த விடையை பின்னுட்டம் இடவும்.



3. புதிர் மூன்று.

இது பொது அறிவு கேள்வி

ரஷ்யர்கள் அக்டோபர் புரட்சியை எந்த மாதத்தில் கொண்டாடுவார்கள்?


மீண்டும் சந்திப்போம்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, July 28, 2012

CAPTCHA DATA ENTRY வேலை செய்ய தயாரா?

இன்றைய தேதியில் ONLINE வேலை தேடுபவர்கள் அதிகம் பேர் எதிர்பார்ப்பது CAPTCHA DATA ENTRY. சென்ற வருடம் வெளியிட்ட போஸ்ட் மூலம்  மனசாலி ப்ளாக் பார்ப்பவர்கள் அதிகம் பேர் இந்த வேலையை பெற்று சிறப்பாக செய்து வருகிறார்கள். சென்ற வருடத்தை போல இந்த வருடமும் அதிகமான அளவில் ஆட்கள் தேவைபடுகிறார்கள். 



 உங்களில் யாருக்கேனும் அல்லது உங்கள் நண்பர்கள் யாருக்கேனும் CAPTCHA DATA ENTRY  வேலை செய்ய விருப்பம் இருந்தால் அவர்களை பற்றிய விபரங்களை myownicon@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய சொல்லவும்.

குறிப்பு : CAPTCHA DATA ENTRY பற்றி தெரிந்தவர்கள் மட்டும் விண்ணப்பக்கவும்.புதியவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். Team வைத்து இருப்பவர்கள் வரவேற்கப் படுகிறார்கள். முன் பணமோ அல்லது பினையாகவோ பணம் செலுத்த தேவையில்லை.

1000 entry அடித்தால் ரூபாய் 35.00

Team உள்ளவர்கள் என்ட்ரிக்கு ஏற்றார் போல் பணம் பெற்றுக் கொள்ளலாம்.

24 மணிநேரமும் வேலை செய்யலாம்.

FASTEST  SERVER

For Further Details
Call +91 91500 81875
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, July 18, 2012

இன்று மூன்று புதிர்கள்.

 இன்றைய புதிர் பகுதியில் மூன்று புதிர்கள் தரலாம் என்று இருக்கிறேன்.

முதல் புதிரை கவனமாக படியுங்கள்.

எத்தனை பேர்களுக்கு சரியான விடை வந்தது என்று பின்னுட்டம் இடவும்.

1. முதல் புதிர் 

மேரியின் தந்தை ஜானுக்கு மொத்தம் 4 மகள்கள். முதல் மகளின் பெயர் ஜனவரி. இரண்டாவது மகளின் பெயர் பெப்ரவரி. மூன்றாவது மகளின் பெயர் மார்ச்.

சரி இப்பொழுது கேள்விக்கு வருவோம். முதலிலேயே சொல்லி விடுகிறேன் இந்த புதிர் LKG UKG மாணவர்களுக்கான புதிர். நீங்களும் முயலுங்கள்.

கேள்வி: ஜானின் கடைசி பெண்ணின் பெயர் என்ன?


புதிர் இரண்டு மற்றும் மூன்று.

வழக்கம் போல் இரண்டு லோகோ புதிர்கள் .

அப்படியா கார்னர்!!!!

Cleveland Ohio வில் எலி பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். எலி பிடிக்க வேண்டுமென்றால் அதற்க்கு எலி வேட்டைக்கான லைசென்ஸ் வாங்க வேண்டும்.



அடுத்த பதிவில் சந்திக்கலாம்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, July 13, 2012

திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்தினால் உலகம் அழிவது உறுதி.

உலகத்தின் அழிவை பற்றி பலர் பல விதமாக சொல்லி இருக்கிறார்கள். சமிப காலமாக உலகம் அழியப் போகிறது என்று பொத்தாம் பொதுவாக சொல்லி கொண்டு இருந்தது போய் மாயன்கள்  புண்ணியத்தில் உலகம் அழியும் நாளிற்கு தேதியும் குறித்து விட்டோம். இதனால் பலர் பீதியில் இருப்பது உண்மையே.சிலர் தனக்கு பயமில்லை என்று சொல்லி கொண்டு பயப்படுபவர்களை   கேலி பேசினாலும் உள்ளுக்குள் பயந்து கொண்டு தான் இருக்கிறார்கள். 

காலம் காலமாக நம்மை பயமுறுத்தும் புண்ணியவான்கள் யார்?

இதை போல் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதன் காரணகர்த்தா யார் என்று பார்த்தால் அதில் முதல் இடத்தில் வருவது Nostradamus.

அவர் பூகம்பம்,சுனாமி,வெள்ளம்,புயல்,சுழற்காற்று,பஞ்சம் போன்ற காரணிகளால் உலகம் அழிவை நெருங்கும் என்கிறார். யோசித்து பார்த்தால் இவை யாவும் இப்பொழுது அதிகமாகவே இருக்கிறது.


அடுத்து கிறிஸ்தவம் . இதன் படி ஏற்கனவே ஒரு முறை உலகம் நீரினால் அழிந்து விட்டது. 2012 ல் சூரிய வெப்பம் அதிகமாகி அதனால் ஏற்படும் வெப்பத்தால் பெரும் நாசம் உண்டாகி உலகம் அழியும்.

அடுத்து இந்து மதம். நாம் இப்போது இருப்பது கலி காலம். கலி காலம் என்பது கடைசி காலம்.

சமிபமாய் மாயன்கள்  'எல்லா கிரகமும் 2012 டிசம்பர் 21 அன்று எல்லா கோள்களும் நேர் கோட்டில் சந்திக்க இருப்பதால் காந்த சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு உலகம் அழியும்' என்று சொல்கிறார்கள். இவர்களும் பூமியின் அழிவு புதிதல்ல என்று கூறுகிறார்கள்.


இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா?

இருக்கிறது. மிகவும் சுலபமான வழி .


குபேரனிடம் கடன் வாங்கிய திருப்பதி எழுமலையான் இத்தனை நாள் வட்டி கட்டி வந்தாராம், இப்பொழுது குவியும் காணிக்கையால் கொஞ்சம் கொஞ்சமாக அசல் கட்ட தொடங்கி இருக்கிறாராம். அவர் அசல் முழுவதையும்  கட்டி விட்டார் என்றால், உலகம் அழிந்து விடுமாம்.

இதனால் தெரிவிப்பது  என்னவென்றால் இனி திருப்பதிக்கு காணிக்கை செலுத்தாமல் இருந்தால் நாம் உலகத்தில் அழிவில் இருந்து தப்பிவிடலாம்.
(எவ்வளவோ நம்பியாச்சு இத நம்ப மாட்டோமா?)

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, July 10, 2012

HP வழங்கும் இலவச Pen Drive பெறுவது எப்படி?

முதலில் கண்டும் காணாதவைக்கான விடையை சொல்லி விடுகிறேன். மூன்று நாட்கள் பொறுத்து பார்த்தேன். விடையை யாரும் சொல்லவில்லை.

1 ஆப்பிள்

ஆப்பிள் ஒரு ரிசிவர் வைப்பதற்கான ஸ்டான்ட் போல் அமைக்கப்பட்டுள்ளது.

2. கோகோ கோலா




இதில் இரண்டு முகங்கள் மறைந்துள்ளது.

3. ஒலிம்பிக்


ஒரு ஆண் நின்று கொண்டிருக்க ஒரு பெண் குனிந்து பலான வேலை செய்வது போல் அமைக்கப் பட்டுள்ளது ( அல்லது எனக்கு தோன்றுகிறதா?)

A  Style விளக்க தேவையில்லை என நினைக்கிறேன்.


சரி இன்றைய பதிவிற்கு வருவோம்.


நெட்டில் மேய்ந்த [போது என் கண்ணுக்கு பட்டது. உண்மையோ பொய்யோ நான் எனக்கான Pen  Drive ரெஜிஸ்டர் செய்து விட்டேன். 4 முதல் 6 வாரம் வரை டைம் கேட்டிருக்கிறார்கள். வந்தால் வாங்கிக் கொள்வேன். அவ்வளவு தான்.


சரி எப்படி ஆர்டர் செய்வதி?

http://h30090.www3.hp.com/HPKFP/Default.aspx


லிங்கை கிளிக் செய்யவும். பின் கீழே உள்ளதை போல் follow பண்ணவும்.0



புதிய புதிர்கள் அடுத்த பதிவில்.
 மீண்டும் சந்திப்போம்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, July 7, 2012

கண்டும் காணாதவை

ஜூலை 4ற்கான புதிரின் விடையை செழியன் அவர்கள் அட்டகாசமாக கண்டு பிடித்தார். அவருக்கு மனசாலியின் பாராட்டுக்கள். சாக்லேட்டுக்கும் கரடிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டிருந்தார். Toberone சுவிட்சர்லாந்து நாட்டில் Bern என்ற நகரத்தில் தொடங்கப்பட்ட கம்பெனி ஆகும்.. Bern பனி கரடிகள் உலாவும் நகரம் என்ற புரளியை கொண்டது..  A Style லோகோ ;பலருக்கு புரியாதது ஆச்சர்யம்..

இன்று நமக்கு மிகவும் பரிச்சயமான ஆப்பிள் மற்றும் coca cola லோகோ மற்றும் ஒலிம்பிக் 2012 லோகோவை தருகிறேன்.. இவற்றுள் ஒளிந்துள்ளதை கண்டு பிடியுங்கள்.. 

1 ஆப்பிள் 



2 கோகோ கோலா 


3 ஓலிம்பிக் 2012



மீண்டும் நாளை பார்க்கலாம்..
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, July 4, 2012

ஜூலை 4 ற்கான புதிர்

நேற்றைய லோகோவை நீங்கள் நிச்சயம் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அனாமியாக வந்த ஒருவரும் சுரேஷும் சரியான விடையை அளித்திருந்தனர்.
இன்றும் மூன்று லோகோவை தருகிறேன். இதில் ஒளிந்துள்ளத்தை கண்டிபிடியுங்கள்.



1 tour de france



good will


toblerone


இந்த லோகோ சும்மா ஒரு ஜாலிக்கு..
Adults Only  படத்துக்கு இதைய சிம்பளா வைக்கலாமே?

நாளை சந்திக்கலாம்.
லோகோ புதிரை தொடரலாமா?
போரடித்தால் நிறுத்தி விடலாம்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, July 3, 2012

ஜூலை 3 2012 ற்கான புதிர்.

இன்று மூன்று லோகோவை உங்கள் பார்வைக்கு தருகிறேன். அது சொல்லும் மறைமுக அதில் ஒளிந்திருக்கும் சாதாரண பார்வைக்கு புலப்படாத செய்தயை  பின்னுட்டத்தில் சொல்லுங்கள்.

Elettro Domestici -Home Appliances




2 yoga-austrailia


amazon
இந்த லோகோகளை கவனித்து பாருங்கள்.  இதனை வடிவமைத்தவரை உங்கள் மனம் நிச்சயமாக பாராட்டியே தீரும்.


சரி இதனுள் ஒளிந்து உள்ளதை நாளை சொல்கிறேன்.


ஜூலை 01 புதிருக்கான விடை


IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, July 2, 2012

இது புதிருக்கான முன்னோட்டம்.

புதிரை எண்களை கொண்டோ அல்லது எழுத்துக்களை கொண்டு தான் கேள்வி   கேட்க வேண்டுமா? படங்களை கொண்டும் கேட்கலாமே என்று நான் எண்ணியவுடன் எனக்கு தோன்றியது logo தான். நாம் பல logo  பார்திரிபோம். நம்மில் எத்தனை பேர் அதை ரசித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

logo டிசைன் என்பது மிகப் பெறும் கலை. அதற்கு ஓவிய பயிற்சி இருந்தால் மட்டும் போதாது. சிந்திக்க தெரிய வேண்டும். மற்றவர்களிடமிருந்து விலகி தனித்துவமாக சிந்திக்க தெரிய வேண்டும். 

மீசை வைத்தவன் எல்லாம் பாரதி இல்லை. தாடி வைத்தவன் எல்லாம் வள்ளுவன் இல்லை நாம் சொல்வது போல லோகோ எல்லாம் லோகோ அல்ல.

நாம் இங்கே பார்க்க போகும் லோகோக்கள் நிச்சயமாக உங்களை கவர்வது மட்டுமல்லாமல் இனி புதிய லோகோ பார்க்கும் போது உங்களை யோசிக்க வைக்கும்.

சில லோகோ பல அர்த்தங்களை வைத்திருக்கும். சிலது  குறும்புதனத்தை. 

இன்று இரண்டு லோகோவை பாப்போம்.

FEDEX 


FEDEX லோகோவில் மறைத்திருக்கும் அம்பு fedex நோக்கத்தை சொல்லும்.





VAIO 

VAIO  என்பது  Video Audio Integrated Operation என்பதன் முதல் எழுத்துக்களால் உண்டான பெயர். இந்த லோகோ மறைமுகமாக சொல்வது என்னவென்றால் VA என்பது ANALOG (தொடர்முறை) மற்றும் IO  என்பது DIGITAL (எண்முறை யும் குறிக்கிறது.


சரி நண்பர்களே நாளை எண் புதிரோ எழுத்து புதிரோ அல்லது படப் புதிரோ ஏதேனும் ஒன்றுடன் உங்களை சந்திக்கிறேன். நேற்றைய புதிருக்கான விடையை நாளை சொல்கிறேன்.




IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, July 1, 2012

தினம் ஒரு புதிர் கணக்கு ஜூலை 01.

இன்றைய புதிர் கணக்கு



62 - 63 = 1

இது தப்புக் கணக்கு தான்.

இந்த புதிரில் உள்ள ஒரே ஒரு இலக்கத்தை இடம் மாற்றி இதனை சரியான கணக்காக மாற்றலாம். 

என்ன ஆயுத்தமா ?


விடையும் புதிய புதிரும் நாளை.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...