Wednesday, December 28, 2011

ப்ரியாவுக்காக ஒரு கவிதை

தப்பபா நெனச்சுராதீங்க . இது சும்மா எழுதி பார்த்தது.



விதைக்கும் போது விதைத்தவனும்!
பெய்யும் போது மழையும் !
நெய்யும் போது  நெசவாளியும்!
மகிழ்ந்தே மிக மிக மகிழ்ந்தே இருந்தார்கள்!
இவர்களுக்கு தெரிந்திருக்குமோ?
பணக்கார பயிரிலிருந்து 
உற்பத்தியாகம்
ஒரு எளிய ஆடையை 
இந்த பருத்தி சேலையை
எங்கள் தோழி அணியப் போகிறாள் என்று!!

இருட்டை கூந்தலாக்கி
மூன்றாம் பிறையை நெற்றியாக்கி
அகன்று சுழன்று நேர் நோக்கும் வசீகரத்தை கண்களாக்கி
அளவெடுத்தது போல் நாசியாக்கி
சந்தன கிண்ணத்தை கன்னமாக்கி
பவளக் கொடியை இதழாக்கி
முத்துச்சரத்தை பல்வரிசையாக்கி
முரட்டுக்காளையின் திமிரை திமிலாக்கி

இல்லாததை இடையாக்கி
நீளக் குழல் விளக்கின் பளபளப்பை வழவழப்பை கால்கலாக்கி
படைக்கப்பட்ட இவள்
இந்த பருத்தி சேலையை
உடுத்தப் போகும் சேதியறிந்து தான்.
விதைத்தவனும், மழையும்,நெசவாளியும்
மகிழ்ந்து பணி புரிந்தார்களோ?
என்று எண்ணிய பருத்தி
இவள் உடுத்தியவுடன்
அலைந்து திரிந்து
பட்ட ரணம் மாறி
சுகப்பட்டது
இவள் வசப்பட்டது


பருத்தி சேலையில்
இவளை பார்த்த பட்டுப்பூச்சியோ
பட்டிற்கு பதிலாக
பருத்தி எடுக்க செய்த
முயற்சி தோற்றதால்
மாய்த்து கொண்டது பரிதாபம்.

புவியில் இவள் லட்சத்தில் ஒருத்தி
இங்கோ இன்னும் ஒருத்தி
பெண்களால் பூமி அழகாகிறது
தமிழச்சியோ அழகிற்கு அளவாகிறாள்.
பிறரெல்லாம் அழகு படுத்தி கொள்கிறார்கள்
இவளோ அழகாகவே பிறக்கிறாள்    
பிறர் அழகாய் தெரிய
பட்டும் துட்டும் தேவை
தமிழச்சிக்கோ
பக்கத்து தெரு
மூன்றாம் வீட்டு கிழவன்
பழைய தறியில் நெய்யும்
பருத்தி சேலை போதும்
பருத்தி என்று அல்ல
இவள் உடுத்தி கொள்ளும்
எல்லாம் இவளால் அழகாகிறது



பெண் எப்பொழுது முழுமையான பெண்ணாகிறாள்?
கேட்டுப் பாருங்கள் சொல்வார்கள்.
தாயாகும் போது என்று.
இருக்கலாம்.
அது பொதுவான உண்மையாக இருக்கலாம்.
அதே பெண் இங்கே
நம் தமிழ்நாட்டில் பிறந்தால்
பிறக்கும் போதே முளுமையாகிறாள்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Monday, December 26, 2011

சும்மா இது சாம்பிள் தான்.


நெட்டில் உலவி கொண்டிருந்தபோது அதனை படிக்க நேர்ந்தது. யாம் பெற்ற இன்பம் நீங்களும் பெற லிங்கை க்ளிக் பண்ணவும்.


குளிர் சாதனப் பெட்டிக்குள்
வேர்த்து விறுவிறுத்து
பீர் பாட்டில் !



அம்மா சூடு போட்டதில்
பெயர் தான் அழிந்துபோனது
தழும்பில் அவள் ஞாபகம் !




அரசியல் வாதி பேசியதும்
ஆவேசமாய் பொங்கியது
சோடா !




இழவு வீட்டில்
இன்ப அதிர்ச்சி
உயில் வாசிக்கும் வக்கீல் !





50 பேர் சுட்டு கொலை
அச்சச்சோ
க் கன்னாவைக் காணோம் !



மேலும் படிக்க......

சென்ரியூ

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, December 25, 2011

தொழிலுக்கு வந்த புதுசில்...

இங்கே சில சினிமா மற்றும் அரசியல்வாதிகளின் ஆரம்ப கால புகைப்படங்களை தருகிறேன். இது அவர்கள் தொழிலை தொடங்கிய சமயம் எடுத்தது.













IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, December 22, 2011

captcha data entry வேலை செய்ய அதிக அளவில் ஆட்கள் தேவை.


இணையத்தில் ஆன்லைனில் captcha data entry வேலை செய்வதற்கு அதிக அளவில் ஆட்கள் தேவை படுகிறார்கள். 1000 Captcha டைப் செய்தால் 30INR 30Rs/1K) கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் 7 தேதி உங்கள் வங்கி கணக்கில் பணம் Transfer செய்யப்படும்.

 ஒப்பந்தத்திற்கு திரும்ப பெற கூடிய பிணைய தொகை ருபாய் 2000 செலுத்த வேண்டும். ஒப்பந்தம் ஆறு மாதம். ஆறு மாத முடிவில் ருபாய் 2000 திரும்ப பெற்றுக் கொள்ளலாம். வேலையை தொடர விரும்புவர்கள் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே நியமிக்கப்படுவர். விருப்பம் உள்ளவர்கள் உங்களை பற்றிய விபரங்களை myownicon@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியபடுத்தவும்.
 
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, December 17, 2011

ஈரோடு சங்கமத்தில் எதிர்பார்ப்பது


சங்கமத்தில் சங்கமிக்க வேண்டும் என்று அதிகமான ஆவலில் இருந்தேன். வேலை பளு காரணமாக வர இயலாத சூழல். எனவே இங்கிருந்தே சங்கமம் சிறக்க வாழ்த்துகிறேன். சங்கமத்திற்கான முயற்சி எடுத்தவர்களுக்கு நன்றி. சென்னையில் பதிவர்கள் சந்தித்து கொள்ளும் போது 'மதுரையில் இது போல்' ஒரு சந்திப்பை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். நண்பர்கள் துணையுடன் 11-11-11 அன்று சங்கமிக்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. மீண்டும் சிறிது நாட்களுக்கு பிறகு முயலலாம் என்று தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றோம்.


 மதுரை பதிவர்கள் சந்திப்பு பற்றி யோசிக்கும் போது. ஏன் சந்திக்கிறோம்? எதற்காக சந்திக்கிறோம்? என்பதே முக்கிய யோசனையாக இருந்தது. நட்பு வட்டம் பெருகும் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அதற்கும் மேலாக எதாவது இருக்க வேண்டும் அல்லவா? மதுரை பதிவர்கள் சந்திப்பில் கை கோர்ப்பவர்களிடம் கலந்து ஆலோசிக்கலாம் என்றிருந்தோம்.

இங்கேயும் எனக்கு இதே கேள்வி. ஈரோடு சங்கமத்தில் என்ன செய்யப் போகிறார்கள்?

நான் எதிர்பார்ப்பது.
  1. முக்கியமா சண்டை போடாம இருங்க.
  2. யாராவது உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா என்று போர்ட் கொண்டு வந்தா. என்ன? ஏது?னு விசாரிங்க. ஏன் என்றால் இங்கே உதவனுமானு கேட்கிறவங்க யாரும் இல்லை.
  3. புதிதாக கிடைத்த பதிவு நண்பர்கள உங்க பதிவுக்கு ஒட்டு போட மட்டும் உபயோகப் படுத்தாதீங்க.(படுத்தாதீங்க)
  4.  முக்கியமா பதிவர்கள் பதிவு மூலமா எதாவது 'வருமானம்' வர்ற வழி இருந்தா பகிர்ந்துக்கோங்கோ. அதை சங்கமத்திற்கு வராதவர்களுக்கும் சொல்லுங்க.
  5. சங்கமம் நடத்துபவர்கள் ஈரோடுக்காரர்கள் 'விருந்தோம்பலுக்கு' பேர் போனவர்கள். வந்தவர்கள் மனம் நோகாமல் சங்கமத்தை சிறப்பாக நடத்துவார்கள் என்று எல்லோரும் அறிவார்கள். அவர்களை ஏதாவது ஒரு விதத்தில் சந்தோச படுத்துங்கள்.
மீண்டும் ஒரு முறை சங்கமம் சிறக்க வாழ்த்துகின்றேன்.
நன்றி

நிறைந்த மனதுடன்
மனசாலி 
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Friday, December 9, 2011

உங்கள் கணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?

இந்த இடுகை ஒரு பயனுள்ள இடுகையாக இருக்கும் என்று நம்பி இதை எழுதுகிறேன்.

முதலில் ஒன்றை சொல்லி விடுகுகிறேன் இது பெண்டியம் 3 கணினி வைத்திருப்பவர்களுக்கு எனவே மற்றவர்கள் ஜூட் .

  முதலில் நாம் கவனிக்க வேண்டியது கணினியின் நினைவகம். பொதுவாக 128MB வைத்திருப்போம் அதிகம் போனால் 256 . நாம் முதலில் இதை மாற்ற வேண்டும் SD RAM இன்று சந்தையில் கிடைப்பது அரிதாகிவிட்டது. அப்படியே கிடைத்தாலும் அதன் விலை கூடுதலாக இருக்கும் எனவே நாம், இப்பொழுது சந்தையில் நடைமுறையில் உள்ள DDR2 அல்லது DDR3 நினைவகத்தை வாங்கிக் கொள்வோம்.

உதாரணமாக DDR2 2GB வாங்குவதாக வைத்துக்கொள்வோம். விலையும் மலிவாக இருக்கும் கொள்ளளவும் கூடுதலாக இருக்கும். இப்பொழுது வீட்டிற்கு வந்து நம் கணிப்பொறியில் அதை எப்படி பொருத்துவது என்று ஒரு சிறிய விளம்பர இடைவெளிக்கு பின் பாப்போம்.





 
  

 


 இப்பொழுது ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் இரண்டு நினைவகங்களும் அளவிலும் அமைப்பிலும் வித்தியாசமாக இருக்கும். நாம் புதிதாக வாங்கிய நினைவகத்தை நம்மிடம் உள்ள பழைய அம்மா வாரியத்தில் (மதர் போர்டு) இணைக்க முடியாது. எனவே நாம் DDR2 நிறுவ அதற்குறிய புதிய அம்மா வாரியத்தை வாங்க வேண்டும். 


சந்தையில் DDR2 பொருந்த கூடிய அம்மா வாரியம் பல கிடைக்கிறது. பற்பல நிறுவனங்கள் இதை தயாரிக்கின்றன. ஏதேனும் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பெண்டியம் பொருந்த கூடிய வாரியத்தை வாங்குங்கள். இதை எப்படி நம் கணினியில் நிறுவுவது என்பதை அடுத்த பாராவில் பாப்போம்.

நாம் ஏற்கனவே வாங்கிய பழைய DDR2(சர்விஸ் ஆளுங்க அப்படி தான் சொல்லுவாங்க) நினைவகத்தை நாம் புதிதாக வாங்கிய அம்மா வாரியத்தால் சுலபமாக பொருந்தும் அடுத்து நாம் செய்ய வேண்டியது அதன் செயலியை இணைப்பது. புதிய வாரியத்தில் செயலி வைக்கும் இடம் சிறிதாக இருக்கும் நம்முடைய பழைய வாரியத்தில் உள்ள செயலி பெரிதாக இருக்கும். எனவே நாம் இப்பொழுது புதிய வாரியத்தில் பொருந்த கூடிய செயலியை வாங்க வேண்டும். 

நல்ல வேலையாக நம் வாரியம் DUAL CORE செயலி பொருந்துவதாக இருப்பதால் நாம் சில ஆயிரங்களை மிச்சப் படுத்தலாம். அடுத்த படியாக நாம் மாற்ற வேண்டியது எஸ் எம் பி எஸ். இப்பொழுது நாம் எல்லா மென் பொருளையும் நம் வன்தட்டில் நிறுவி பயன் படுத்தலாம்.


இப்பொழுது அதன் வேகத்தை பாருங்கள். யாரிடமாவது இது P3 என்றாம் நம்பவே மாட்டார்கள்.


நாம் மீண்டும் ஒரு நாளில் சைக்கிளை எப்படி காராக மாற்றுவது என்று பாப்போம்.
  
 
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...