Wednesday, March 30, 2011

சுயேச்சையை வெல்ல வைப்போம்

மதுரையிலுறுந்து மனசாலி. அடிப்படையில் தமிழ் என் தாய் மொழி அல்ல.
மொழியோ இனமோ எதுவாக இருந்தால் என்ன? மனிதம் ஒன்று தானே.அது எங்கே வதைப்பட்டாலும் குரல் கொடுக்க வேண்டியது நம் கடமையல்லவா?. அரசியல் காரணங்களுக்காக எல்லையில் இரு நாட்டு ரானுவத்தினர் சண்டையிட்டு மடிகிறார்கள். என்னைப் பொருத்த வரை எல்லையில் சண்டையிடும் ரானுவ வீரன் ஒரு அடிமையே. சண்டையிடு என்றால் சண்டையிடவும், சும்மா இரு என்றால் சும்மா இருக்கவும் வேண்டும். அவனுக்கு கொஞ்சம் சம்பளமும். அதிகமாக நாட்டுப்பற்று என்னும் போதையையும் கொடுக்கிறார்கள். சண்டையில் சாகும் வேற்று நாட்டு வீரனுக்காக நாம் கவலைப் படுவதில்லையா? ஆனால் இங்கே சண்டையிட்டு செத்தவர்கள் யார்? அப்பாவி பொது மக்கள். சிறு குழந்தைகள் இந்த பின்னூட்டத்தை என்னால் எழுத முடியவில்லை . மனதில் அந்த பிஞ்சுகளின் ரனத்தை நான் சுமக்கிறேன். இதை எல்லாம் நம்மால் தடுக்க முடியவில்லையே என்று மனம் பதறுகிறது. எந்திரன் பின்னால் சென்றவர்களில் ஒரு பத்து சதம் பேர் கூட ஒன்று சேரவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது. இங்கே நாம் நம்மை வருங்கால வல்லரசு என்று சொல்லிக் கொள்கிறோம். கூட்டனியின் தலைவன் என்று கருனா(கருனாநிதி) நம்மை எல்லாம் ஏமாற்றிக் கொண்டு இருந்தார். எனவே காங்கிரஸ் மட்டும் அல்ல நம் இலக்கு. தி மு காவும் (அடிப்படையில் நான் ஒரு திமுக அனுதாபி) நாம் இம்முறை எல்லா தொகுதியிலும் ஒரு சுயேச்சையை வெல்ல வைப்போம்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments: