இந்த பதிவின் அவசியம் என்ன என்று பலர் நினைக்கலாம். பின்னுட்டங்கள் கவனிக்கப்படுகின்றன.மதிப்பிடப்படுகின்றன எனும்போது. நிச்சயமாக அதை எழுதுபவர்கள் சிறந்த முறையில் எழுதவே நினைப்பார்கள் என்றே நினைக்கிறேன். மனசாலி சென்ற வாரம் தெரிவு செய்த பத்தில் ஒருவர் இந்த வாரம் அவர் இட்ட பல பின்னுட்டங்கள் அவருடைய பழைய பின்னுட்டங்களை விட நல்ல வழமையாக இருந்தன. இந்த முயற்சி வெற்றி பெற்றால் நல்ல பதிவுகள் பல நமக்கு கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சிறந்த பின்னுட்டங்கள் மூலம் நாம் நல்ல சிறுகதைகளை உருவாக்கலாம் பல நல்ல கருக்கள் பின்னுட்டத்தில் உறுதியாக கிடைக்கும். உதாரணமாக மெகா சீரியல் பின்னுட்டத்தில் இருந்து நாம் ஒரு சிறுகதையை உருவாக்கலாம்.
சிறந்த பின்னுட்டங்களை தேடுவதற்கு நிறைய படிக்க வேண்டியிள்ளதால் எழுதுவது குறைந்து விட்டது. எனவே நண்பர்களே நீங்கள் பதிவில் காணும் நல்ல பின்னுட்டங்களை எனக்கு பின்னுட்டத்தில் தெரிவிக்கவும். நன்றி
எனக்கு தெரிந்த ஒரு பயன்
நித்திரை முழித்து பழகலாம். இதன் மூலம் என்ன பயன் எண்டு கேட்பவர்களுக்கு. இரவில் எங்காவது களவுக்கு சென்றால் தூங்காது தப்பலாம்
இனி தர வரிசை
10
- சாகம்பரி said...
- அவசர யுகத்தில் இது மிகவும் தேவையான பதிவு. எலுமிச்சை சாறும் இஞ்சி சாறும் பலன் தரும்
வயிற்றில் பொங்கும் அமிலத்தின் அவஸ்தை//ஓட்டு சதவீதம் அதிகரிக்க கூட்டணி இல்லை என்பது தான் காரணமா?
அதைக் காரணமாக சொல்ல முடியாது.
ஆம்...காங்கிரஸ் எங்ககூட இல்லாததால் வாக்குகள் கொஞ்சம் அதிகமாக எங்களுக்கு கிடைத்துள்ளது.//
இது எனக்கு புரியவில்லை. சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டது குறைந்த இடங்கள். இப்போது மாநிலம் முழுவதும். கிட்ட தட்ட இரு மடங்கு அதிக இடங்கள். அப்படி பார்த்தால், இரு மடங்கு ஒட்டு கிடைத்தால் கூட சதவிகிதம் அதிகரிக்க வில்லை என்றே சொல்ல வேண்டும். அப்படி இருக்கையில், அதிகரித்தது வெறும் ஐந்து சதவிகிதம் (இல்லை, அதற்க்கும் கீழா?) என்றபோது, உண்மையிலேயே குறைந்தது என்று தானே சொல்ல வேண்டும்?
இது எல்லா கட்சிக்கும் பொருந்தும்.
08
சித்தாரா மகேஷ். said... நீங்க நல்லாவே நாடகங்கள் பார்ப்பீர்கள் போலிருக்கே.அருமையான உணர்வு.
மெகா சீரியல் ஒன்றை இயக்குவது எப்படி?
07
- சேட்டைக்காரன் said...
- நண்பரே! சர்தார்ஜீகள் மட்டுமல்ல! குஜராத்திகளைப் பற்றி குஜ்ஜு ஜோக்ஸ்; வங்காளிகளைப் பற்றி போங்க் ஜோக்ஸ்; மராட்டியர்களைப் பற்றி காட்டி ஜோக்ஸ்! மலையாளிகளைப் பற்றிய மல்லு ஜோக்ஸ்; தமிழர்களைப் பற்றிய மதறாசி ஜோக்ஸ் என்று பலரகமான ஜோக்குகள் இணையம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் கற்பிக்க யாரும் இன்னும் கிளம்பவில்லை! :-) மேலும் பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் எழுதிய புத்தகங்களை வாசித்திருக்கிறீர்களோ? ஜஸ்பால் பட்டி என்ற நகைச்சுவை நடிகர் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களோ? இவர்களெல்லாம் சர்தார்ஜீ ஜோக்ஸ் புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களே எழுதியவர்கள். இத்தோடு சான்டாசிங் பான்டாசிங் இணையதளத்தை நடத்துபவர்களே சீக்கியர்கள் தான்! சீக்கியர்களுக்குத் தங்களைக் குறித்தே நகைச்சுவை செய்கிற பெருந்தன்மை உண்டென்று வேண்டுமானாலும் கூறலாம்.
- சர்தார் ஜோக்குகளில் உள்ள வக்கிர வரலாறு!
06அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் - மஹிந்தவின் மீதா?
05