பிறந்தவுடன் பேசிய குழந்தை
ஒரு மருத்துவமனை :
அதிகாலை பிரசவ வார்டில் பிரசவ வலியால் துடிக்கிறாள் ஒரு பெண்.சுற்றி மருத்துவர்களும், செவிலியர்களும் நிற்கிறார்கள். பிரசவ வலிஅதிமாகிக்கொண்டே போகிறது. வெளியே அந்தப்பெண்ணின் கணவரும் உறவினர்களும்மிகவும் கவலையுடன் நின்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
அந்தப்பெண்ணின் கணவர் தன்னுடைய செல்போனை எடுத்து நண்பர்களை உதவிக்குஅழைக்க நினைத்து தன்னுடைய செல்போனை பார்க்கிறார். ஆனால் அது சார்ஜ்இல்லாமல் தன்னுடைய செயலை நிறுத்தியிருக்கிறது.
மருத்துவர்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அடுத்து என்னசெய்வது. என்று யோசித்து, ஆபரேஷன் தியேட்டரை ரெடி செய்யலாம என்றுநினைக்கையில் அதுவும் சாத்தியமில்லாமல் போகிறது.
அந்த மருத்துவமனையில் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்கிறது. விடிவதற்குஇன்னும் நேரம் இருக்கிறது. விடிந்தபிறகுதான் ஒரு முடிவுக்கு வரமுடியும்என்ற நிலையில் அந்து ஒரு வித பதட்டம் நீடிக்கிறது…………………………………….
அந்த நேரத்தில்...
ஒரு பெரிய அலறலுடன் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்திலே ஒரு அழகிய குழந்தைப் பிறக்கிறது.
பிறந்த குழந்தையை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். மருத்துவர்களும், செவிலியர்களும்...
அப்போது அந்த குழந்தை மெல்ல தன்னுடைய கண்களை திறந்து ஒரு மருத்துவரை பார்த்தது...
அவரும் ஆவலுடன் அந்த குழந்தையைபார்த்தார்..
அப்போது அந்த குழந்தை மருத்துவரைப்பார்த்து...“இங்கு கரண்ட் இருக்கா...” என்று கேட்டது...
அதற்கு மருத்துவர்“இல்லை”என்று பதிலளித்தார்..
“அடக்கடவளே நான் மறுபடியும் தமிழ்நாட்டில் தான் பிறந்திருக்கேனா..”என்று தன்னுடைய தலையில் அடித்துக்கொண்டது...
அதற்கு டாக்டர்...“கருவறையில் இருட்டு... கல்லரையில் இருட்டு இடைப்பட்ட நாட்களில் மட்டும் எதற்கு கரண்ட்”என்ற தத்துவத்தை சொல்லிக் கொண்டே நடையைக்கட்டினார்...
இது உண்மையா இல்லையா தெரியல... நாளைக்கு இப்படியும் நடக்கலாம்..
4 comments:
ஹா ஹா நல்ல கற்பனை
நான் கூட உண்மையான செய்தியோ என்று நினைத்து படிக்க ஆரம்பித்தேன். நல்ல ஜோக் . The best joke in the world is to tell the truth என்று சொல்வார்கள். கலா கார்த்திக்
கவிதைவீதி வலைதளத்தில் இதுப்போல ஒரு பதிவு பார்த்ததாக நியாபகம்
கற்பனை அருமை
Post a Comment