இதோ இந்த வாரத்திற்கான வரிசை
10
- உள்ளூரில் ஏ.ஆர். முருகதாஸ், மோசமாக விமர்சிக்கப்பட்டாலும்- Because in the Tamilnadu more 50% of the people are not from Tamil origin, they settled here for many generations, They speak,Read and write Tamil but at home they speak different language, major junk of them are Telugu and Malayalam origin. So in Tamilnadu orginal Tamils are Minority people.
பதிவு
09
- நமக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம். மதுரை, தமிழ், இயற்கை மீது கொண்ட காதலால் தனியாக பெண்கள் மீது காதல் வருவதில்லை. வேறு மாதிரி சொல்வதென்றால் பயம் அதிகம். அடி வாங்குற அளவுக்கு உடம்பு கிடையாதுன்றதாலயும் காதல் வராமல் இருந்திருக்கலாம். பகிர்வுக்கு நன்றி.
08
ஹேமா said... காலர்- அழைப்பவர்
ஆர்குட்- அல்லது நல்லது(or good)
கூகில்- கூவைக் கொல்லு
அல்லது கூ! போய் கொன்றுவிட்டு வா!
ஆர்குட்- அல்லது நல்லது(or good)
கூகில்- கூவைக் கொல்லு
அல்லது கூ! போய் கொன்றுவிட்டு வா!
பிகாஸா- பன்னி காரணமா?(pig causeaa)
யாஹீ - யா என்பது யார்?
iphone- கண் தொலைபேசி அல்லது ஐ! தொலைபேசி
யாஹீ - யா என்பது யார்?
iphone- கண் தொலைபேசி அல்லது ஐ! தொலைபேசி
ட்விட்டர்- திட்டுபவர்
( twit- scold/insult)
ஆப்பிள்- இது இன்னும் தமிழ் வார்த்தைல சேரலையா?
( twit- scold/insult)
ஆப்பிள்- இது இன்னும் தமிழ் வார்த்தைல சேரலையா?
karate, kungfu- ஜப்பானிய மொழியை படித்துவிட்டு சொல்கிறேன்.
07
- பிரபாகரன் ஒரு விடுதலை வேண்டி போராடிய ஒரு தேசத்தின் தலைமகன், அவரை கவுண்டமணி போன்ற நகைச்சுவை நடிகருடன் ஒப்பிடுவது மனதுக்கு வேதனை தருகிறது. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது வேறு விடயம், ஆனால் அதை நகைச்சுவைக்கான பேசுபொருளாக தயவு செய்து எடுக்காதீர்கள்.. Pirabaharan is a legend of Tamil's history after the fall of Sera,Chola, Pandiyar Kingdoms.
பதிவு
06
- மனோ, இந்த கிப்ட் ஐடியா நல்லாதேன் இருக்கு. ஆனால், சிலருக்கு எவ்வளவு கொட்டினாலும் திருப்தியே வராதே. அவர்கள் எங்களுக்கு எதுவும் தராவிட்டாலும் பரவாயில்லை கொடுப்பதை சந்தோஷமா வாங்கினாலே போதும். என் உறவினர் ஒருவருக்கு ஏதாவது கிப்ட் கொடுத்தாலும் கதை சொல்வார். கொடுக்காவிட்டாலும் நக்கல் அடிப்பார்.
பதிவு
05
- You need to provide your account details for verification purpose only when you call bank or credit card company. If they are calling you , you dont need to provide any details even if it is legitimate call . Set SMS Alerts for your Account and Credit Card Transactions , alerts will come within 2 - 5 secs .
பதிவு
04
- ,”சமச்சீரிலிருந்து””நூலகம்” வரை எவ்வளவு பெருந்தன்மையான,காழ்ப்புணர்ச்சியற்ற,மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற அண்ணாவின் எண்ணங்களை பிரதிபலிக்கும் தாயை முதல்வராக இந்த தமிழ்கூறும் நல்லுலகம் பெற்றிருக்கிறது!!!!!!!அவர்களின் மனதை விடவா இந்த நூலகம் பெரிது?வாழ்க தமிழன்,தமிழ்நாடு.......
பதிவு
03
- உயிரையே பணயம் வைத்து ஊசி வாங்கப்போகும் அப்பாவிகள்! விற்பனை வரி இல்லாமல் விற்கப்படும் பொருட்களை வாங்க போட்டியிடும் தேசப்பற்று மிக்க நுகர்வோர்கள்!! அரசு/சட்டம் என் **** த்துக்கு சமம் என தன்னிச்சை போல செயல்படும் வியாபாரிகள்!!! எவ்வளவு விதி மீறலுக்கு,எவ்வளவு வாங்கலாம் என கணக்குபோடும் நேர்மையான அரசு அதிகாரிகள்!!! அனாவசியமாக கேள்வி எழுப்பும் நீதிமன்றங்களின் வாயை அடைக்க அவசர சட்டம் கொண்டு வரும் அதைவிட நேர்மையான முதல் அமைச்சர்கள்.!!! இவர்கள் கூடி தேர் இழுக்கும்வரை வரை ரங்கநாதன் தெருவில் இன்னொரு WTC tower கட்டப்பட்டால் கூட ஆச்சரியம் இல்லை! பொறுத்துக்கொள்ளுங்கள்.இந்த நாடகம் ஓரிரு நாட்களில் முடிந்து விடும்.அப்புறம் ஜாலியாக shopping செல்லலாம்!!
பதிவு
02
- அடுத்துவருக்கு இடைஞ்சல் தரும் கொண்டாட்டங்கள் தேவைதானா. இது உங்க ஊரின் தலைவிதி போலும்.
பதிவு
01
- மக்களே, மக்களே என்று விஜயகாந்த்தும், பிரேமலதாவும் ஊர் ஊராகப் போய்க் பிரச்சாரம் செய்தும் மக்கள் வாக்களிக்காமல் போனதற்கு முக்கியக் காரணங்களை ஆராய்வோம். 1. முதலில் தேமுதிகவை மக்களுக்கான கட்சியாக, அதாவது மக்கள் கட்சியாக இன்னும் விஜயகாந்த் மாற்றவில்லை. 2.மக்களுக்கான போராட்டங்களை தேமுதிக முறையாக சரியான நேரங்களில் நடத்தத் தவறி விட்டது. 3. தனக்கென்று வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றே விஜயகாந்த் செயல்பட்டது. 4. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வர வேண்டும் என்ற மக்களின் அடிப்படை எதிர்ப்பார்ப்பை அவர் மதிக்கத் தவறி விட்டார். 5. அதிமுகவையும், திமுகவையும் கடுமையாக சாடி வந்த விஜயகாந்த், மறுபடியும் அதிமுகவிதாமே கூட்டணி வைத்தது மக்களுக்கு பிடிக்கவில்லை. 6. சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு அமோகமான வாக்குகள் கிடைக்க திமுக மீதான மக்களின் கடும் அதிருப்தியும், கோபமுமே காரணம். அதை சரியாக கணிக்காமல் தன்னுடைய கூட்டணிதான் இந்த வெற்றிக்கு காரணம் என நினைத்தது. 7. திமுகவை விட மேலான கட்சியாக தேமுதிக உருவெடுத்த போதிலும், சரியான எதிர் கட்சியாக சட்டமன்றத்தில் செயல் படாதது. 8. நடக்கும் ஜெ தலைமையிலான ஆட்சி குறித்து ஒரு வருடம் கழித்தே பேசுவேன் என்று தெனாவெட்டாக விஜயகாந்த் பேசியது. 9. ஒரு எதிர்க்கட்சியாக பொறுப்பாக நடந்து கொள்ளாமல் இருந்தது. 10. யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பாக ஒரு நல்ல அங்கீகாரத்தை மக்கள் கொடுத்தும் கூட அதை சற்றும் பொருட்படுத்தாமல் தேமுதிக செயல்பட்டதால் தான் மக்கள் ஒதுக்கிதள்ளியுள்ளனர். தேமுதிக ஒரு பொறுப்பான மக்கள் கட்சி, மக்களாகிய நம் குரலே தேமுதிகவின் குரல், நமக்கான கட்சிதான் தேமுதிக என்ற நிலை வரும் போதுதான் அந்தக் கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும். அந்த ஆதரவும் நிரந்தரமாகும், அப்போதுதான் தேமுதிக உண்மையான மாற்றுக் கட்சியாக மாற முடியும் என்பதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உணர வேண்டும்.
பதிவு
10 comments:
எனது பின்னூட்டத்தையும் தேர்வு செய்ததற்கு நன்றி.-சித்திரவீதிக்காரன்.
நிறைய பதிவுகள் அடையாளம் காட்டப்படுகிறதுநன்றி.
இது நல்ல முயற்சி மனசாலி. முன்பெல்லாம் வாசகர் கடிதங்கள்தான் பின்னூட்டங்களாக இருந்தன. அதில் புகழ் பெற்றிருதது குமுதம்தான். பதிலுக்கு பதில் என்று வாரக்கணக்கில் தொடரும். உ-ம்,
ஒரு பெண் எழுத்தாளர் நடுத்தர குடும்பங்களில் வாழ்வியல் முறை தெரியாமல் கதை எழுதுவதாக குற்றம் சாற்றினார் வாசகர்.
அதற்கு பெண் எழுத்தாளரின் பதில்- முதல் நாள் மீந்துபோன மாவில் மறுநாள் தாளிதம் செய்து தோசை சுட்டு, அதுவும் மீதமானால் மறுநாள் அதனை உப்புமாவாக கிண்டி சமாளிக்கும் பொறுப்பான நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள்தான் நான்
மறுவாரம் வாசகர் கேள்வி: மாவு வீணாகப் போகக்கூடாது என்பதில் இருக்கும் கவனம் அரிசியை அளவாகப் போடுவதில் இருந்திருக்கலாமே.
இங்கேயும் பின்னூட்டத்திற்கு வரும் பின்னூட்டங்களும் சில நன்றாக இருக்கின்றன. நன்றி.
நீங்க கலக்குங்க தோழர்...
என் பின்னுட்டத்தை வெளியிட்டதற்கு மிக்க நன்றி.
“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.
என்னுடைய பின்னூட்டத்தையும் வெளியிட்டதற்கு மிக்க நன்றி.
வித்யாசமான பதிவு. தொடருங்கள்.
நண்பரே,
உங்கள் புதுமையான முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நான் பதிவிட்ட பின்னூட்டத்தையும் ரசித்து தேர்வு செய்திருப்பதிற்கும் நன்றி.
இச்சமயம் என் பார்வையில் தமிழ் வலைதளத்தை பற்றிய கருத்துக்கள்:
நான் பார்த்தவரையில் almost எல்லா ப்ளாக் களும் ரசிகர் மன்றங்களைப்போல செயல் படுகின்றன மாற்று கருத்துக்களுக்கு அங்கு இடமில்லை அவை வரவேறகப்படுவதுமில்லை
நாம்(=இந்தியர்கள்)பெரிதும் விரும்புவது பிறரை விமரிசிப்பதை!
மிக வெறுப்பதோ நம்மை விமரிசிப்பவரை !!
அதேபோல பலபதிவர்கள் டயரி தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.அதற்கு அவர்கள் எந்த பின்னூட்டத்தையும் எதிர்பார்ப்பதும் இல்லை.
ஒரு பதிவர் அவர் பதிவுகளை பாராட்டும்போழுது நட்பு பாராட்டியவர்,ஒரு பதிவின் நடை சலிப்பை தருகிறது என்று பின்னூட்டம் இட்டதும் வெகுண் டெழுந்தாரே பார்க்கலாம்."உன் ரசனைக்கு நீ போகவேண்டியது முடி திருத்தும் கடைக்கு" என்று பண்பாக பதிலளிக்க நான் பெத்தேன் பிழைத்தேன் என ஓடினவன்தான்.அப்புறம் அந்த பக்கமே தலை வைத்து படுப்பதில்லை.
அதேபோல பெரும்பாலான பதிவர்கள் சுபாவம் காரணமாகவோ,எச்சரிக்கை காரணமாகவோ பிறருடன் நட்பு பாராட்ட விரும்புவதில்லை.ஒரு பெண்பதிவர் மிக நன்றாக சினிமா விமரிசனம் எழுதுவார்.அவர் தளத்தில் நான் அடிக்கடி பின்னூட்டம் போட்டு பாராட்டுவேன்.திடீரென்று மூன்று மாதங்கள் அவரிடமிருந்து எந்த பதிவும் காணோம் எதாவது உடல் நலக்குறைவா என விசாரித்து இட்ட பின்னூட்டத்திற்கும் பதில் எதுவும் இல்லை.திடீரென்று ஒரு பதிவுடன் அவர் மீண்டும் உதயமானார்.ஆனால் என் விசாரிப்புகளை அவர் கண்டு கொள்ளவே இல்லை.நானும் ஒதுங்கிவிட்டேன்.
இதற்கு விதி விலக்குகள்:
காவிரிமைந்தன்,அமுதவன்,கடுகு உண்மைத்தமிழன்,போன்றோர்.
நட்போடு பழகுவார்கள்.
பின்னூட்டத்தை acknowledge செய்யாத எந்த வலைதளதிற்கும் நான் தொடர்ந்து செல்வதில்லை.
இவ்வகையில் உங்கள் முயற்சி போற்றத்தக்கது.
நன்றி ,
நல்லதொரு முயற்சி சகோ
வாழ்த்துக்கள்
Post a Comment