முந்தைய பதிவில் 5 ல் முடியும் எண்களை அதே எண்ணால் பெருக்குவதை பார்த்தோம். இந்த பதிவில் வேறு சில எண்களை அதே எண்ணால் பெருக்குவதை எப்படி என்று பாப்போம்.
11 x 11 = ?
11+1 = 12 x 10 =120 + 1
answer 121
11 x 11
11 ஐ கடைசி எண்ணான 1 உடன் கூட்டவும்
11 + 1
விடை 12 கிடைக்கும்
இப்பொழுது 11 இரண்டாக பிரித்து கொள்ளவும் (அதாவது 11 என்றால் 1 1 , 181 என்றால் 18 1 )
அதன் பின் பிரித்த பொழுது கிடைத்த முதல் இலக்கத்தின் 10 ன் மடங்கை முதலில் கிடைத்த விடையுடன் பெருக்கவும். (அதாவது 11 என்றால் 1 x 10
18 என்றால் 18x10 )
12 x 10 =
விடை 120 கிடைக்கும்.
இப்பொழுது கிடைத்த விடையான 120 உடன் நாம் இரண்டாக பிரித்த எண்ணின் இரண்டாவது இலக்கத்தை அதே எண்ணுடன் பெருக்கும் பொழுது கிடைக்கும் விடையை (1 x 1 )
120 + (1 x 1)=
120 + 1 = 121
61 x 61 = ?
61+1=62 x 60 = 3760 + 1
answer 3761
181 x 181 = ?
181+1=182 x 180 = 32760 + 1
answer 32761
answer 32761
இந்த முறை மூலம் நாம் எல்லா எண்களின் பெருக்கல்களை கண்டு பிடிக்கலாம். இது எளிமையான முறை என்று நான் சொல்ல போவதில்லை . நாம் இந்த கணித முறை மூலம் என்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமை வரிசையை உணரலாம்.
36 x 36 = ?
36+6=42 x 30 =1260 + ( 6 x 6 )
answer 1296
answer 1296
1001 x 1001 =?
1001+1 =1002 x 1000 = 1002000+1
answer 1002001
1507 x 1507 =?
1507+7=1514 x 1500 =2271000 + (7 x 7)
2271049
இந்த கணக்குகளை மன கணக்காக செய்ய முடிந்தால் எப்படி இருக்கும். செய்யலாம் . அதற்கும் வழி இருக்கிறது .
அடுத்து அதை பற்றி பார்போம்
அடுத்த பதிவில் ஒரு சுவராஸ்யமான கணக்கு கதையை பார்போம்.
வாக்கிட்டி பின்னுட்டம் இடவும்.
2 comments:
மேத்'ல நான் கொஞ்ச வீக்காச்சே .. என்ன பண்ண ?
******************************'
குற்றம் செய்த பிள்ளைகளை போலிசில் கொடுத்த பெற்றோர்கள்
மீண்டும் "ஜாவா எச்சரிக்கை" - http://mytamilpeople.blogspot.in/2013/01/how-to-disable-java-in-browsers.html
Post a Comment