Sunday, June 19, 2011

கணிதம் கற்போம் - 01

ஆரம்பத்தில் ரஷ்யா சோவியத் யூனியனாக இருந்த போது பல நல்ல புத்தகம் மிக குறைந்த விலையில் நமக்கு கிடைத்தது.அதில் கம்யுனிசியம் மட்டுமில்லாது இலக்கியம், கணிதம், அறிவியல் மற்றும் எல்லா துறை சம்பந்தப்பட்ட நூல்களும் இருந்தன. நான் சிறு வயதாக இருந்த போது எங்கள் வீட்டிற்கு வரும் சோவியத் யூனியன் புத்தகங்கள் அதில் இருக்கும் சிறுவர் கதைகள் பலதும் எனதும் என் நினைவில் இருக்கின்றன. எங்கே சொல்லு என்றால் என்னால் உடனே சொல்ல முடியாது.

நான் அந்த நாளில் படித்த விளையாட்டு கணிதம் எண்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை என்னை யோசிக்க வைத்தது. அதன் பின் நான் கணிதத்தை கவினிக்க ஆரம்பித்தேன் ( கணித பாடம் தவிர்த்து )

நான் கற்று கொண்ட சில கணக்குகளை இங்கே தருகிறேன்.

முதலில் 5ல் முடியும் (5 x 5, 15x15 ) இதை போல உள்ள பெருக்கல்களை சுலபமாக பெருக்குவது பற்றி பாப்போம்.

205 x 205 = ? பார்ப்போமா
பழைய முறை
205
205 x
----
 1025
 000
410
-----
42025
-----

புதிய  முறை
205 x 205

20 5 இரண்டாக  பிரித்து  கொள்ளுங்கள் 
முதல் என்னை இவ்வாறு பெருக்கி கொள்ளுங்கள்
1) 20 x (20+1) = 20 x 21 = 420

2) 5 x 5 = 25
  முதல் விடையையும் இரண்டாவது விடையையும் சேர்த்தல் பெருக்கல் விடை கிடைத்து விடும்

42025


45 x 45 = ?
 4 x 5 = 20
5 x 5 =25
answer 2025


85 x 85 = ?
8 x 9 = 72
5 x 5 = 25
answer=7225

2) 11 x 11, 111 x 111, 1111 x 1111 ஒற்றுமையை  பாப்போம்

11
11 x
---
121
---

111
111 x
-------
12321
-------

1111
1111 x
---------
1234321
---------
இன்னும்  விளையாடலாம்
பின்னுட்டத்தை எதிர் பார்க்கிறேன்.




IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

வாஞ்ஜுர் said...

பயனுள்ள பதிவு.

வாழ்த்துக்கள்.

தொய்வில்லாமல் தொடருங்கள்

வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

சமுத்ரா said...

பயனுள்ள பதிவு.