Friday, June 24, 2011

மிஸ்டர் மணிரத்னம் அவர்களே ஆரண்ய காண்டம் பார்த்தீரா?

சிறந்த இயக்குனர் மணிரத்னம். 
நீங்கள் இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் முதன்மையானவர் என்று இந்த ஊர் இன்னமும் நம்பிக் கொண்டு இருக்கிறது. உங்கள் மார்கெடிங் உத்தியை எங்களுக்கும் கொஞ்சம் சொல்வீர்கள? விக்ரமை ஹிந்திக்கு கொண்டு போனீர்கள் . அவரும் உயிரை கொடுத்து நடித்து இருப்பார். அவர் மட்டும் அல்ல ராவன் படத்தில் பனி  புரிந்த எல்லோரும் அவர்கள் வேலையை சிறப்பாகவே செய்திருப்பார்கள் சுஹாசினியை தவிர.
ஆரண்ய காண்டம்



நீங்க நிச்சயமாக ஆரண்ய காண்டம் பார்த்து இருப்பிர்கள். பார்க்கவில்லை என்றால் பாருங்கள் . ராவன் படத்தை நீங்கள் எப்படி சொதப்பி இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒப்பீடு

நீங்களும் ராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தை தான் எடுத்தீர்கள்.குமார ராஜாவும் அதையே எடுத்தார்.  அனால் என்ன ஒரு வித்தியாசம். ஆரண்ய காண்டம் என்றால் காட்டில் தலை மறைவு வாழ்க்கை வாழும் ராமனை பற்றியது. உங்கள் காண்டத்தில் விக்ரமும் , இங்கே சம்பத்தும் தலைமறைவாக இருக்கிறாகள் ( புதிய ஆரண்யத்தில் ஒரே ஒரு பகல் மட்டுமே கதையின் சம்பவங்கள் நடக்கிறது )  சம்பத்தின் மனைவி கடத்தப் படுகிறாள். அவளை அவன் மீட்கிறான்.
குமார  ராஜாவின் கதை சொல்லும் தரம் நிச்சயமாக உங்களை பிரமிக்க வைத்து இருக்கும். பாத்திரப் படைப்பு . கதை மாந்தர்களின் பெயர்கள் மிருகங்களின் பெயர்களாக அமைத்தது. (இதற்கு முன் மகாநதியில் எல்லார் பெயர்களும் ஒரு நதியின் பெயராக இருக்கும்)
அப்புறம் கடைசியாக நீங்க குமார ராஜாவின் அடுத்த படத்தில் உங்களை அவரின் உதவி இயக்குனராக இணைத்து கொள்ளுங்கள். படியிங்கள். அதன் பின் படம் இயக்கலாம்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments: