Tuesday, September 13, 2011

சின்ன மாற்றத்துடன் மீண்டும் அதே புதிர்




ஷாலினி அவளுடைய பிறந்த நாள் கொண்டாட்டிற்கு 16 பேரை அழைத்திருந்தாள். அதில் 12 பேரை அவளுக்கு கல்லூரியில் பழக்கம். 9 பேர் அவள் செல்லும் ஸ்லிம் சென்டரில் பழக்கம்.

புதிர் : பிறந்த நாள் கொண்டாட்டிற்கு அழைக்கப்பட்டவர்களில், 'கல்லூரி மற்றும் ஸ்லிம் செண்டர்' இரண்டிலும் "இல்லாதவர்கள்" மொத்தம் எத்தனை பேர்?

இன்றைய புதிர் மிகவும் சுலபமானது விடையை உங்கள் குழந்தைகளிடம் தெரிந்து கொள்ளுங்கள்.

 

'மீண்டும் ஒரு புதிருக்கான' விடை: 5 

அ : கல்லூரி = க க க க க க க க க க க க  (12  பேர்)

ஆ :சிலிம் = சி சி சி சி சி சி சி சி சி  (9 பேர்)  

கல்லூரியில் படிப்பவர்களில் 12  பேரை  அழைத்துவிட்டாள். மொத்தம் அழைத்தது 16  பேரை.  மீதம் 4 பேரை சிலிம் சென்டர் வருபவர்களை அழைத்தாள். 9 பேரில் 4  பேர் போக மீதம் உள்ள ஐவர்  கல்லூரியில் படிப்பவர்களாக தானே இருக்க முடியும்.



IniyaTamil TopSites

'வயது வந்தவர்களுக்கு மட்டும்' பாகம் நான்கு

கி.ராஜநாராயணனின் 

'வயது வந்தவர்களுக்கு மட்டும்' 

பாகம் நான்கு

இது பாகம் மூன்றின் தொடர்ச்சி
பாகம் மூன்றை படிக்க சொடுக்கவும்.


காட்லெ, சம்சாரி விடியமின்னே உழப்போனான். ஏரேக் கட்டி கொஞ்ச நேரந்தான் உழுதிருப்பாம். தண்ணி கலையத்தெ காக்கா உருட்டிவிட்டுட்டது.

இது என்னடா சங்கடம். தண்ணியில்லாம என்ன செய்ய. வெயிலேறிட்டா தண்ணி குடிக்காம முடியாதென்னு ஏரெ நிறுத்திட்டு, கலயத்த எடுத்திக்கிட்டு விறுவிறுன்னு வீட்டப் பாக்க வந்தாம்.

வீட்டுக் கதவு சாத்தியிருக்கு. இந்நேரத்துக்கு வீட்டுக் கதவு சாத்தியிருக்க காரணமில்லியெ.

என்ன விஷயம்னு தொரவால்த் தொளை(சாவி துவாரம்) வழியா உள்ளுக்குப் பாத்தா, அவம் கண்ணுக்கு ஒரு காச்சி(காட்சி) தெரியுது.

கடைக்காரன் இவம் பொண்டாட்டி மார்ல வாயெ வச்சி சப்பிக்கிட்டிருக்கான்.

படபடவென கதவைக் தட்டுன்னான்.

கதவு தொறந்தது. இவம் பொண்டாட்டி இவனை பாத்ததும் ஒண்ணு கதறிக் கிட்டே,

நல்லவேளை இப்பவாவது வந்தீகலெ. ஏம் பாட்டெப் பார்ர்தீளா, இந்த கொடுமெ உண்டுமா, இவரு இல்லேன்னா நான் செத்துதாம் போயிருப்பேம். என்று சொல்லி அழுதாள்.

புருசன்காரனுக்கு ஒன்னும் வெளங்கலே.

கடைகாரன பார்த்தான் அவன் தலெயக் கவுந்துக்கிட்டு ஒன்னும் சொல்லாம நிக்காம்.

என்ன, என்ன சொல்லுதெ என்ன நடந்தது. வெவரமாச் சொன்னா தானே தெரியும்ன்னு  கேட்டான் சம்சாரி.

என்னத்த வெவரமாச் சொல்ல. வெக்கக்கேடு. பருத்தி மார்ப் படப்பிலெ போயி மாரு புடுங்கி அணைச்சி எடுத்துகிட்டு தான் வந்தேன், சுரீர்னு மார்லெ தீக்கங்கு வச்ச மாதிரி இருந்தது. கீழே போட்டுட்டு பார்த்தா.... சரியான கருந்தேளு! வலியான வலியில்லெ. தாங்க முடியலே. என்ன செய்யுறதுண்ணுட்டு தெரியலெ. இவரு தேள்விஷத்த உறுஞ்சி எடுத்துருவாருன்னு  சொன்னாங்க. இவரெப்போயி கூப்பிட்ட, நா ஆம்பிளை இல்லாத வீட்டுக்கு வரமாட்டேன்னுட்டாறு. பெறவு, நாந்தான் சொல்லி, எம் வீட்டுக்காரரு அப்படியெல்லாம் நேனைக்கக்கூடியவரு இல்லெ. அதோட ஆபத்துக்குப் பாவமில்லேன்னு கூப்பிட்டுகிட்டு வந்தெம். அப்தெக்கு இப்போ தேவலைன்னாலும் வலி போருக்க முடியேலுன்னு அழுதா.

சரி சரி அழுவாதே இதெல்லாம் யாருக்கும் வரக்குடியது தாம். நாம் என்ன செய்ய முடியும் அதுக்கு. பரவாயில்லே அவராவது சமயத்துல கூப்பிட்ட ஒடனே வந்தாரே.

நா அங்கே தண்ணிய காக்கா கொட்டித்ததுன்னு திரும்பவும் தண்ணி கொண்டு போறதுக்காக வந்தேன்னுட்டு சொல்லிட்டு, கலயத்துல தண்ணியே ரெப்பிகிட்டு போயிட்டான்.

---------------------------------------------------------------------------

 கொஞ்ச நாள் கழிஞ்சது.

 ஒரு நா திடீர்னு. அய்யோ தேள் கொட்டீட்டதேன்னு சம்சாரி கூப்பாடு போட்டான்.

அடுப்பங்கூடத்துல வேலையா இருந்த அவம் பொண்டாட்டி எங்கே எங்கே தேளுதாம்ன்னுட்டுப் பாத்திடீலா என்று பதச்சீப் போயி வந்தா.

தேளுதாம் பாத்துட்டேன். வசமா பிடிச்சி மாட்டீட்டது. நல்ல கருந்தேளு.

அய்யோ வலி பொறுக்க முடியலையே நீ ஓடி போயி அந்த கடைக்காரன கையேடு கூட்டிட்டு வா, ஓடு சீக்கிரம்னு அவசரப்படுத்தினான்.

அவளும் ஓட்டமும் நடையுமா போயி கடைக்காரனை பார்த்து, இன்ன மாதிரி சங்கதி ஒடனே புறப்பட்டு வா. நீ இப்போ வரலைன்னா அவரு சந்தேகப்  பட்டுருவாறு. எந்தின்னு சொன்ன.

வேற வழியில்லாம அவனும் வந்தாம்.

எங்கே, எந்த எடத்துலன்னு கடைக்காரன் கேட்டாம்.

சம்சாரி தச்சிலெ அவுத்துக் காட்டுனாம்!

தாத்தாவோடு சேந்து நாங்களும் சிரிச்சோம்!

"பெறவு?" என்று கேட்டான் கிட்டான்.

பெறவு என்னடா பெறவு. பெறவு பெறவு தான்.

கடைக்கார பய தப்ப முடியல; வசமா மாட்டிகிட்டான்.

அவங்கடை வியாபாரமெல்லாம் நிறுத்தி ரொம்ப நாளைக்கு பெறவு, அந்த கடை என்னாச்சுன்னு கேக்குற உங்களுக்கு ஊர்க்கார்கள் சொன்ன பதில இங்கே எழுத முடியாது.

IniyaTamil TopSites

Monday, September 12, 2011

'வயது வந்தவர்களுக்கு மட்டும்' பாகம் மூன்று


கி.ராஜநாராயணனின் 

'வயது வந்தவர்களுக்கு மட்டும்' 

பாகம் மூன்று

கல்மண்டபத்துக்கு மேல் உட்காந்துகொண்டு கம்மங்காட்டுக் காவல் இருந்த 'சீசன்' பூராவுமே தாத்தா எங்களுக்கு பாலியல்க் கதைகளாகவே சொல்லி வந்தார்.
அந்தக் கதைகள் பூராத்தையுமே அபபோவே எழுதி வைத்துருக்க வேண்டும். நான் பயித்தியாரயத்தனம் பண்ணிவிட்டேன்.
 ஒரு நாள் தாத்தாவிடம் கேட்டோம். 'இந்தக் கதைகளினால் ஏதாவது பிரயோஜனம் உண்டா யாருக்காகாவது?'
கொஞ்சம் யோசித்துவிட்டு, தொண்டையைச் சரி செய்து கொண்டார். பிறகு,  இந்த கதைகள் எல்லாத்தையுமே அப்படியே சொல்ல முடியாது. பிரயோஜனமுள்ளவை, அல்லாதவை, தெரிந்து கொள்ள வேண்டியவை, அறிந்து கொள்ள வேண்டியவை, மனுஷக் கற்பனைகள், அவனோட விகாரங்கள், ஆசைகள், கனவுகள், இப்படி இன்னும் என்னமும் எத்தனையோ அடங்கி இருக்கு இதுகளில்.
இந்த கதைகளை கேட்கிற காதுகளையும் ஏற்றுக்கொள்கிற மனசுகளையும் பொறுத்திருக்கிறது எல்லாம்.
ஓரளவு மனசுகளை இவை பாதிக்கலாம். என்றாலும், இவை அவன் என்றைக்கிருந்தாலும் எதிர்கொள்ள வேண்டியவன்தான்.
சில விசயங்களை சத்தங்காட்டாமல் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.
இவைகளை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய முன்னோர்கள் தெரியாதவர்கள்  அல்ல.  கோயில்களிலும், தேர்களிலும், கோவிலினுள் நுழையும் கூடாரவாசல் விதானங்களிலும், மரச்சிற்பங்கலாக தெரியட்டும் என்றுதான் செதுக்கி வைத்திருக்கிறார்கள், என்றார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------


இப்பொழுது 
கள்ளப்புருசனுக்கு 
புத்தி புகட்டிய 
சம்சாரியின் கதையை பார்க்கலாம்.

ஒரு ஊரில் ஒரு சம்சாரி(விவசாயி). அவம் பொண்டாட்டி அழகா இருப்பா. அவளோட மார் அழகே தனி. அவளை எப்படியாவது அடையனும்ன்னுட்டு ஒருத்தன் திட்டம் போட்டான்.

அதுக்கு என்ன பண்ணனும்னு யோசனை பண்ணிப் பார்த்தான்.

தெனமும் அவ அவம் வீட்டு வழியா தான் கடைக்கு சாமான் வாங்க போவா. ' நாம கடை வச்சா என்ன, நம்ம கடி வச்சா நம்ம கடைக்கு சாமான் வாங்க வருவா, அப்ப அவளோட பேசலாம்ன்னுட்டு தீர்மானிச்சு, தெருவுப்பாக்க இருந்த வீட்டுச் சுவர்லே  ஒரு வாசல் விட்டு கடையாக்கினானாம். வேண்டிய கடைச் சாமானெல்லாம் வாங்கியாந்து கடையக் தொவக்கீட்டான்.

சம்சாரி பொண்டாட்டி பாத்தா, தூரத்துல நடந்து போயி வாங்குறதைவிட இது கிட்டக்க இருக்கு. இதுலேயே வாங்குவம்ன்னுட்டு பருத்தி, கம்மம்புல்லு இதுகள கொடுத்து சாமான்க வாங்குனா கடைக்காரன் என்ன பண்ணுனான். ஒழுக்குத்தானியத்துக்கு  அரைப்படி தானியத்துக்கு கொடுக்கிற அளவுக்கு, ரண்டு மடங்கு சாமான்கள் தந்தான். ஒரு கூறு பருத்திக்கு ரெண்டு கூறு பருத்திக்கு உண்டான சாமான்கள் கொடுக்கிறது. இப்படியாக நடந்துகிட்டிருந்தது.

முதல்ல அவ நெனச்சது, இவம் புதுசாக் கடை வச்சிருக்கான். அதனால ஆட்களை தன்னோட கடைப்பக்கம் இழுக்குறதுக்காக இப்படி குடுக்கானு நினைச்சா.

ஆனா கவனிச்சு பார்க்கிறப்பொ, மத்த ஆளுகளுக்கு அவம் அப்படி கொடுக்கறதா தெரியல! இவ தானியமோ பருத்தியோ கொண்டு போக வேண்டியது. இன்ன சாமான் வேணும்னு கேப்பா;  அவனும் ரண்டு பங்கு 'தாராளமா' சாமான்கள் கொடுக்கிறது. இப்படியே நடந்துகிட்டு வந்தது. அவம் ஒரு வார்த்தை கூட இவகிடா பேசுறதில்ளே, அவ வந்த ஒடனே இவனுக்கு தொண்டை இறுகி போயிரும்! என்ன பேசுறதுன்னே தெரியாது.

இவளுக்குனாப்  பொறுக்கல.வாயத்  தொறந்தே கேட்டுட்டா. " இப்படி தாராளமா ரண்டு பங்கு சாமான்க கொடுக்கயெ கட்டுப்படி ஆகுமா ஒனக்கு?"

" நா எல்லாத்துக்கும் அப்படி கொடுப்பானா; ஒனக்கு மட்டுந்தான்" என்றான்.

"எதுக்கு அப்படி தரனும், கெரகசாரமா?" என்று கேட்டாள். அப்பத்தான் திக்கிதெணறி அவஞ் சொன்னாம் "ஒம்பேர்ல எனக்கு பிரியமா

 "சீ இந்த சோலியெல்லாம் வச்சுக்கிடாதே. நான் ஒங்கடைக்கு இனி வர மாட்டேன்"ன்னு  வெடுக்குன்னு சொல்லிட்டு போயிட்டா. அதுல இருந்து அவ அவங்கடைக்கு சாமான் வாங்க போகாம வழக்கமா வாங்குற இடத்துக்கே அவம் கடையத் தாண்டியே போயிக்கிட்டுருந்தா.

இவனுக்கு சங்கட மாயிட்டு. இதுக்காகவா நாம கடைய வச்சம். இப்படி ஆயிட்டதேன்னு  வருத்தமான வருத்தமில்லெ.

ஆனாலும் திடிர்னு கடைய மூடிற முடியுமா. சரி பாப்போம்ன்னுட்டு பேருக்கு கடைய நடத்திகிட்டே அவ போறத வர்றதப் பாத்து பாத்துப் பெருமூச்சு விட்டுகிட்டே இருந்தாம்.

கடையும் முந்தி மாதிரி, "கலாவலியா" நடக்கலெ. கூட்டமும் கொறஞ்சு போச்சி. அதோட பருத்தி சீசன் முடிஞ்சிறதும் ஒரு காரணம்.

 ஒரு நா ராத்திரி, சுக்கு வாங்குறதுக்காக அவ கடைக்கு போனா. அந்த கடைல சுக்கு இல்லெ. வர்ற வழியெல இவம் கடைல சுக்கு இருக்குதான்னுட்டு கேப்பமான்னு நின்னா. கடைக்கு முன்னாலே யாருமில்லே . அவந்தாம் தனியா உட்காந்துகிட்டு 'ஏங் குரங்கே'ன்னு வெளக்க இமைக்காம பார்த்துகிட்டிருந்தான். பார்க்க பாவமா இருந்துச்சு அவளுக்கு.

வாசல்ல போயி இவ நிக்கா. அப்பாவும் அவம் வெளக்கையே பாவமா பார்த்துகிட்டிருந்தாம். சுக்கிருக்கனிட்டுக் கேக்கா. அப்பாவும் அவம் காதுல விழுந்த மாதிரி தெரியல. திரும்பவுங் கேட்டா. முகத்த திலுப்பிப் பாத்தாம்; நிகா பிடிபட்ட மாதிரி தோனல. அதுவும் பொரவுதாம் இவான்னுட்டுத் தெரிஞ்சது போலருக்கு. பாத்தது பாத்தபடியே இருந்தாம்.

"என்ன, மேலுக்கு சேட்டமில்லியா?"ன்னுட்டு கேட்டா.

பயலுக்கு களகளன்னு கண்ணுலருந்து தண்ணி வருது. இவ பின்னாடி திரும்பி பாத்தா யாரும் வராகளன்னுட்டு; யாரையும் காணம்.

"எங் கங்கலங்குதீறு?"ன்னுட்டு கேட்டா. அவம் ஒன்னும் பேசல. கைய மட்டும் நீட்டுனாம். இவ கம்மம்புல்லு கொண்டுவந்த கொட்டாநெ அவங்கிட்டே நீட்டுனா, வாங்கி அளந்து பாத்துட்டு  என்ன வேணும்கிற மாதிரி பார்த்தான்.

"சுக்கு"

சுக்கெ நிறுத்திக் குடுத்தாம்.

காப்பிடி புல்லுக்கு அரப்பிடிக்கு அளவுக்கு இருந்துச்சு சுக்கு.

இவளும் மேக்கொண்டு ஒன்னும் பேசாம வாங்கிட்டு போயிட்டா.

அதிலே இருந்து அவ அவங்கடையிலேயே சாமான்க வாங்க ஆரம்பிச்சா.

 இப்படி கொஞ்ச நாப் போச்சு.

ஒரு பேச்சு வார்த்தை கிடையாது. அவலெ அவம் ஏறிட்டுக் பாக்கிறதுக்கூட கிடையாது.

 ஒரு நா ராத்திரி, அவ  சாமான்க வாங்க வர்றதுக்கு கொஞ்சம் நேரமாயிட்டு (கடை எடுத்து வைக்கிற நேரத்துக்கும் அதிகமா ஆயிருந்தது)

ஆனாலும் அவம் காத்திருந்தான்.

வளக்கம் போல கொட்டான்ல தவசம் (தானியம்) கொண்டு வந்தா. சாமான்க வாங்குனா.

புறப்புட்டு போறதுக்கு முன்னாடி, அவ தயங்குன மாதிரி இருந்துச்சு.

என்னங்கிற மாதிரி அவலெ ஏறிட்டுப் பார்த்தான். அப்பதாம் அவ சொல்லுவா,  'ஒடம்பு ஏம் இப்பிடி மெலிஞ்சிகிட்டே வாரீறு. வைத்தியரு கிட்டே கைய காமிச்சு மருந்து ஏதாவது சாப்பிடக் கூடாதா?'

அப்பதாம் அவம் தன்னோட ஆசைய தயங்கி தயங்கிச் சொன்னாம் .

இவ அதுக்கு ஒன்னும் சொல்லாம, வேற என்னத்தையோ பத்தி அவங்கிட்டே ஒரு தகவல் விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா. இவம் அதுக்கு இவம் அதுக்கு என்னத்தையோ பதில் சொன்னாம்.

கொஞ்ச நாள் போச்சி. அதுக்கு பெறவு என்ன பேசனுட்டுத் தெரியல. இவந்தாம் சொன்னாம். 'நாளைக்குக் காலையில ஓம் வீட்டுக்கு வரட்டா?'

அவ அதுக்கு ஒன்னுஞ் சொல்லாம ஒரு குருஞ்சிரிப்பாணி சிரிச்சிட்டு போயிட்ட.



'வயது வந்தவர்களுக்கு மட்டும்'  பாகம் ஒன்று '



இத டைப் அடிக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? கொஞ்சம் யோசிங்க. பதிவு "பிடிச்சிருந்தா" பின்னுட்டம் போடுங்க தப்பு இல்ல. உங்க ISP  பில்லில் கூடுதல் கட்டணமெல்லாம் போடமாட்டாங்க. "ஓட்டும் போடலாம்" யாரும் தப்ப நெனக்க மாட்டாங்க.
IniyaTamil TopSites

காற்றில் அவள் துப்பட்டா



காற்றில் அவள் துப்பட்டா
என்மீது விழுந்தது...
எனக்குபயங்கர சந்தோசம்..
பைக் துடைக்க துணி கிடைத்தது என்று ..!




ஒருவர் உங்களை கல்லை கொண்டு எறிந்தால்.,
நீங்கள் அவர்களை பூவை கொண்டு எறியுங்கள்.!

மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால் .,

பூ தொட்டியைக் கொண்டு எறியுங்கள் , சாவட்டும் .!


உலகின் 6 உண்மைகள் :

முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது ..!

இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் ..!

மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால ..!

நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க ..!

ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க ..!

ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் ..!



உயிர் இல்லாத மலரை கூட நாம் நேசிக்கிறோம் ...ஆனால் நமக்காக உயிரையும் கொடுப்பவர்களை நேசிக்கஏன் யோசிக்கிறோம் ..!? அதனால நேசிங்க ...
கோழி , ஆடு ,மீன் ...


 
"கொஞ்சமா பேசு ! அதிகமா கேள் " அப்படின்னு பெரியவங்க ஏன் சொன்னாங்க தெரியுமா ...?
incoming free.. outgiong kaasu.. அதனாலதான்
IniyaTamil TopSites

நான் ரசித்த மூன்று புகைப்படங்கள்

IniyaTamil TopSites

Sunday, September 11, 2011

தாராளமா சிரிங்க உடம்புக்கு நல்லது.

தாராளமா சிரிங்க உடம்புக்கு நல்லது.






IniyaTamil TopSites

மீண்டும் ஒரு புதிர்



ஷாலினி அவளுடைய பிறந்த நாள் கொண்டாட்டிற்கு 16 பேரை அழைத்திருந்தாள். அதில் 12 பேரை அவளுக்கு கல்லூரியில் பழக்கம். 9 பேர் அவள் செல்லும் ஸ்லிம் சென்டரில் பழக்கம்.

புதிர் : பிறந்த நாள் கொண்டாட்டிற்கு அழைக்கப்பட்டவர்களில், 'கல்லூரி மற்றும் ஸ்லிம் செண்டர்' இரண்டிலும் உள்ளவர்கள் மொத்தம் எத்தனை பேர்?

இந்த புதிர் கொஞ்சம் சிரமமாக இருக்கும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு நீங்களும் உதவுங்கள்.

விடை அடுத்த புதிருடன்.


சுப்பிரமணி அவனிடம் "உங்கள் ஊருக்கு எப்படி போவது?" என்று கேட்டிருப்பான். 
மெய்யூர்காரனாக இருந்தால் அவன் மெய்யுரை காட்டுவான்.
பொய்யூர்காரனாக இருந்தால் அவன் பொய்யாக மெய்யூரையே  காட்டுவான்.
IniyaTamil TopSites