மெய்யூர் பொய்யூர் என்று இரண்டு ஊர்கள் இருந்தன. இரண்டும் பக்கத்து பக்கத்து ஊர்கள். ஒரு பெரிய சாலை இரண்டாக பிரியும் இடத்தில் மெய்யுரும் பொய்யூறும் இருந்தன. இரண்டு ஊரை சேர்ந்தவர்களும் அவர்களுடைய ஊர்களின் பெயர்களை போலவே குணங்களும் கொண்டிருந்தனர். அதாவது மெய்யுரை சேர்ந்தவர்கள் எப்பொழுதும் உண்மையே பேசுபவர்கள். அதைப்போல பொய்யூரை சேர்ந்தவர்கள் எப்பொழுதும் பொய்யே பேசுவார்கள்.
ஒரு முறை நம்ம ராமசாமி மெய்யூர் செல்ல வேண்டி இருந்தது.இரு ஊர்களின் பிரிவு ஆரம்பாகும் இடத்தில் ஒருவன் அமர்ந்திருந்தான். அவனிடம் சென்று எந்த பிரிவு வழியே சென்றால் மெய்யூரை அடையலாம் என்று கேட்க நினைத்தான். பக்கத்தில் சென்றதும் அவன் ஒரு அறிவிப்பு பலகை வைத்து கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தான். அதில் ஒரு உதவிக்கு பத்து வராகன் என்று எழுதி இருந்தது. நம்ம ராமசாமி வைத்து இருந்தது வழி செலவு போக 16 வராகன். எனவே அவன் அங்கே அமர்ந்து இருந்தவனிடம் ஒரே ஒரு கேள்வி மட்டுமே கேட்க வேண்டிய நிலை.
அமர்ந்து இருந்தவன் எந்த ஊரை சேர்ந்தவன் என்று நம்ம ராமசாமிக்கு தெரியாது.
அமர்ந்து இருந்தவன் மெய்யூரை சேர்ந்தவனாக இருந்தால் உண்மை சொல்லி விடுவான். ராமசாமியும் வேகமாக மெய்யூர் சென்று விடலாம். ஒரு வேலை பொய்யூர் காரனாக இருந்தால் எப்படி வழியை கண்டு பிடிப்பது?.
ராமசாமி யோசித்தான் . சிந்தித்தால் விடை கிடைக்காமலா போய் விடும்?. அமர்ந்து இருந்தவனிடம் பத்து வராகன் கொடுத்தான். ஒரே ஒரு கேள்வி கேட்டான். சரியான விடையை கண்டுபிடித்து வேகமாக மெய்யூர் சென்றான்.
சரி நம்ம ராமசாமி அங்கே இருந்தவனிடம் என்ன கேட்டிருப்பான்?
இதற்கு ஒன்றிற்கு மேல் விடை கிடைக்கலாம். எனவே உங்கள் விடையை பின்னுட்டமாக கொடுக்கவும்.
விடை நாளை வழக்கம் போல் ஒரு புதிய புதிருடன்.
பொதுவாக இந்த புதிரை கொடுப்பவர்கள் கீழ்காணும் வடிவில் தான் கொடுப்பார்கள் நான் 90 டிகிரி சுழற்றி கொடுத்தேன்.
2 comments:
மெய்யூருக்கு செல்லும் வழி எது என்று பொய்யூரைச் சேர்ந்தவனைக்கேட்டால் எந்த வழியைக் காட்டுவான்?
இந்தக்கேள்விக்கு அவன் எந்த வழியைக் காட்டுகிறானோ அந்த வழியைத் தவிர்த்து அடுத்த வழியில் போகவேண்டியதுதான்.
DrPKandaswamyPhD said...
அய்யா அங்கே அமர்ந்திருப்பவன் எந்த ஊரை சேர்ந்தவன் என்று தெரியாதே.
Post a Comment