Friday, September 9, 2011

'வயது வந்தவர்களுக்கு மட்டும்' பாகம் ஒன்றுகி.ராஜநாராயணனின் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' ஓர் அறிமுகம் படிக்க சொடுக்கவும்  

கி.ராஜநாராயணனின் 

'வயது வந்தவர்களுக்கு மட்டும்' 

பாகம் ஒன்று


"அந்த தாத்தா இருக்கிற இடத்துக்குப் போகாத டோய்" என்றான் கீச்சுக்குரல் கிட்டான்.

"ஏண்டா?"

"பயங்கரமா கெட்ட வார்த்தைக் கதைகள் சொல்வார்டா."

இப்படி தான் அவரைப்பற்றி நான் கேள்விப்பட்டது. போகதே என்று சொன்னதினால் அங்கே அவரிடம் போகவேண்டும் என்று தோன்றியது!

பின்னாளில், எங்கள் மனசும் உடம்பும் வளர்ந்த அவரை சந்திக்க, பேச, தைரியம் ஏற்பட்டது. ரொம்ப பழகின பிறகுதாம் தெரிந்தது அவர் ஒரு கதை களஞ்சியம் என்று. கிட்டான் அவரை கதை கடல் என்றும், எத்தனை இறைப்பெட்டி போட்டாலும் வத்தாசமுத்திரம் என்றும் புகழ்ந்தான்.

 ஒரு நாள் அவன் அவரிடம், "ஏந் தாத்தா, கெட்ட வார்த்தைகளை கேட்டால் பிள்ளைகள் கேட்டு போவார்களா?" என்று கேட்டான்.

தாத்தா மீசைக்குலேயே சிரிக்கிறார் என்பதை அவர் கண்கள் சொன்னது.

அப்புறம் கொஞ்சம் கழித்து.

"கெட்டுப் போறவன் எப்படியும் கெட்டே போவான். யாராலும் அதை நிறுத்த  முடியாது. சொல்லப்போனா கெட்ட வார்த்தை கதைகள் நிறைய தெரிஞ்சு வச்சுக்கிட்டவன் அவ்வளவு சீக்கிரம் கெட்டு போயிறமாட்டான்" என்று சொல்லி நிறுத்தி, "உனக்கு ரிஷ்யசிங்கர் கதை தெரியுமா?" என்று கேட்டார். கேட்டுவிட்டு அவரே பதில் சொல்ல ஆரம்பித்தார்.

 ரிஷ்ய சிங்கனோட அப்பன் விபாண்டகமுனிவன் என்ன செஞ்சான். கோட்டிக்கார பயல்! பிள்ளையை பொம்பள முகம் தெரியாம வளர்த்தா கெட்டுப்போக மாட்டான்னுட்டு வளத்தான். அந்த கோட்டிக்கார பயபுள்ள என்ன செஞ்சது, தெரியுமா?  ஒரு பொம்பளைய பாத்தது தான் தாமதம், அவளுக்கு பின்னாடியே போயிட்டான்!" என்று சொல்லி சிரித்தார்.

இந்த இடத்தில் 'தாத்தா'வைப்பற்றி ரண்டு வார்த்தைகள் சொல்லணும்.

 தாத்தா என்றால் வயசாளி என்று அர்த்தமல்ல. தோற்றம் சிலரை அப்படி நினைக்கவும், கூப்பிடவும் வைத்து விடுகிறது. நம்ம தாத்தாவின் தோற்றம் அப்படி! அதோடு அவருடைய பெயரே தாத்தைய நாயக்கர்தான். சின்ன வயசிலிருந்தே அவரை ஊரில் தாத்தா தாத்தா என்று தான் கூப்பிடிகிறதெ.
தாத்தா பட்டணக்கரை ஊர்களிலெல்லாம் போய்த்தங்கி  இங்கிலீசுப்  படிப்பெல்லாம் படிச்சிட்டு வந்தவர்தான். ஆனால், அப்படி தெரியாது அவரை பார்க்கும்போது.

 தாத்தா சட்டை போட்டு நான் பார்த்ததில்லை. மாறு முதுகு எல்லாம் பொசபொச என்று வெண் ரோமம் மண்டிய உடம்பு.

 மங்கம்மா சாலையை விட்டுக் கொஞ்சம் தள்ளி ஒரு சின்ன கல் மண்டபம். அதுக்கு 'கஞ்சா மண்டபம்' என்று பெயர். லாட சந்நியாசிகள் இப்படி யாராவது வந்தால் தான் தங்குவார்கள். அவர்கள் அடுப்புக்கூட்டி சமைத்த அடுப்பங்கல்லுகளுக்குப்  பக்கத்தில் கிடக்கும் கரித்துண்டுகளை எடுத்து அந்த கல்மண்டபச் சுவகளிலும், தூண்களிலும் 'படங்கள்' போடப்பட்டிருக்கும். அவ்வளவும்  பெண் ஆண் அந்தரங்கப் படங்கள்! பிறகு மக்கள் படிப்பறிவு பெற்றதும் அதையே வசனத்தில் எழுதினார்கள்.

 எங்கள் பள்ளிக்கூட லீவு நாட்களில் நாங்கள் அதை வேடிக்கை பார்க்கவே மெனக்கிட்டு போவோம். தாத்தாவுக்கு அந்த கல்மண்டம் பக்கத்தில் காடு இருக்கிறது. கம்மம்புஞ்சை காவலுக்காக அவர் அந்த கல்மண்டபத்தின் மேலே ஏறி  உட்காந்திருப்ப்பர். ராணி மங்கம்மாள் அவருக்கு காவல் பரணுக்கு பதிலாக கல்மண்டபம் கட்டி கொடுத்திருக்கிறாள்!

அந்த கல்மண்டபத்தின் மேலே ஏறுவதும் கீழே இறங்குவதும் கொஞ்சம் சிரமம்.  பழகிக்கொண்டால் சுலபம். நாங்கள் போனபோது அந்த இளங்காலையில் தாத்தா கல்மண்டபத்தின் மொட்டை மாடியில் வெயில் காய்ந்து கொண்டிருந்தார். அந்த தளிர் வெயில் குளிருக்கு இதமாக இருந்தது.

 கிட்டான் தான் கேட்டான்:  ' ஒரு கதெ சொல்லுங்க தாத்தா'. வெயில் சுகத்தில்  'மயங்கி'யிருந்த தாத்தா கண்ணை திறந்து கிட்டானைப் பார்த்தார். 'நீதான் ஒரு கதை சொல்லேன்' என்றார்.பாகம் இரண்டை  படிக்க


உங்கள் கருத்துக்களை பகிர்ந்து  கொள்ளுங்கள்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

NAAI-NAKKS said...

ENNAAPPA PATHIYELA KATHAIYI NIRUTHITTEEINGA?
INEMALE ORU PARTKU ORU KATHAI MUZHSA PODAVUM!!!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல பயனுள்ள தொடர்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

பெரியவங்க என்ன சொல்றாங்கனா?