'சுபமங்களா' நேர்காணலில்....
பாலியல் கதைகள் எல்லா மொழியிலும் இருக்கு.
அதை திரட்டுவதாலும், வெளியிடுவதாலும் நம் ஆச்சாரம் போய் விடும் என்று அரற்றுவது பேதைமை.
மானுடவியலில் இதெல்லாம் இருக்கு.
மனுஷன் எங்கெல்லாம் இருக்கானோ அங்கெல்லாம் மனுஷ நாத்தம் இருக்கு.
இல்லாததை நான் சொல்லவில்லை.
இவை மக்களிடையே உள்ள கதைகள்.
ராஜநாராயணன் உண்டாக்கிய கதைகள் அல்ல.
அதை அவ்வளவையும் சேகரிக்கனும்.
ஆபாசம் என்பதை ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டால் கூட இதை தெரிந்து கொண்டால் ஒருவன் கெட்டு விடுவான் என்று சொல்ல முடியுமா?
நான் சிறு வயதில் இது போன்ற கதைகளை வண்டி வண்டியா கேட்டிருக்கேன். பாலியல் சம்பந்தமான விஷய ஞானம் கிடைத்திருக்கிறதே தவிர, கெட்டு போய் விடுவோம் என்பதல்ல.
பாலியல் கதைகள் அத்தனை விஷயங்களையும் படித்து பார்த்தால் அதன் காலகட்டம் கி.மு. - கி.பி என்பதுபோல - நம் சமுகத்தில் திருமணம் என்ற மரபு வருவதற்கு முன்னாள் - திருமணத்திற்கு பின்னால் என்று கொள்ளவேண்டும்.
மானுட வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் தான் திருமணம் வருகிறது.
ஒவ்வொரு வசவுகளுக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.
இப்போது இந்த வசவுகளை திரட்டி கொண்டு இருக்கிறேன்.
விஷயம் தெரியாதவன் சொல்வான். இந்த கி.ரா வுக்கு கிறுக்கா? வசவுகளை திரட்டிக்கிட்டு அலையறான் என்று நையாண்டி செய்வான்.
நான் கதை எழுதுவதை தள்ளி வைத்துவிட்டு இதை செய்ய யாரும் இல்லாததால் செய்கிறேன்.
நாளை முதல் கி.ராஜநாராயணனின் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' பார்க்கலாம்.
1 comments:
காம உணர்ச்சி அதிகமாகி, அதித் தீர்த்துக் கொள்ள வாய்ப்பே கிட்டாமல், உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் முடியாமல் போகும் போதுதான், ஒரு ஆண்மகன் சமுதாயக் கட்டுப்பாட்டை மீறிக் குற்றம் புரிகிறான்.
இப்படித் தவறு செய்து மாட்டிக் கொள்ளும்போதுதான் அவன் கெட்டுப் போனதாக நினைக்கப் படுகிறான்.
எத்தனை ஆபாசப் புத்தகங்கள் படித்தாலும், வீடியோக்கள் பார்த்தாலும் அனுபவிக்க வாய்ப்புகள் இருந்தால் கெட்டுப்போக வழியே இல்லை.
Post a Comment