முதல் இரண்டாம் பாகத்தில் நாம் மௌன ராகம் மற்றும் இந்தியன் படத்தின் ஒரிஜினல் படத்தை பார்த்தோம். பின்னுட்டம் இட்ட ஒரே ஒருவருக்கு நன்றி. பின்னுட்டம் வரும் என்று எதிர் பார்த்தேன். வரவில்லை .ஒரு வேலை இந்த இடுகைகள் பிடிக்கவில்லையோ? சரி எப்படியும் இருந்து விட்டு போகட்டும். என் ஆதங்கத்தை நான் இங்கே வெளிப்படுத்துகிறேன். பத்திரிக்கைகள் காட்டிய மௌனத்தை நானும் ஏன் காட்ட வேண்டும்?.
இங்கே நான் பாலசந்தர் இயக்கிய ஒரு படத்தின் மூலத்தை எழுதப்போகிறேன். அதற்க்கு முன்னால் ஒரிஜினல் படத்தை பாப்போம். இது தமிழ் படம் அல்ல. ஹிந்தி படம். சாஜன். சாஜன் ஒன்றும் மூன்றாம் தர படம் அல்ல.மிகவும் நல்ல படம். சாஜன் என்றவுடன் பலருக்கும் அந்த படத்தை விட அதன் பாடல்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். மேரா தில் பி கித்துனா பியார், ஜியே தூ ஜியே, பகுத் பியார் கர்தே ஹைன் மற்றும் படத்தின் எல்லா பாடல்களும் . பிரபல்யமானவை மற்றும் இனிமையானவை. நதீம் ஷ்ரவன் (பல இனிய மெட்டுக்கள் உருவான மனதிற்குள் கொலை வெறி இருந்தது என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது) இருவர் இசையில் பாடல்கள் கேட்ட எல்லோரும் நிச்சயமாக ரசித்திருப்பார்கள்.
பாடலைப் போலவே படமும் கவித்துவமான படம். ஹிந்தி அரைகுறையாக தெரிந்திரிந்தும் சப்டைட்டில் இல்லாமலும் தான் படம் பார்த்தேன். இருந்தும் படம் எனக்கு புரிந்தது பிடித்தது. கதையை பார்போம
கதை
அமன்(சஞ்சய்தத்) ஒரு அனாதை. நல்ல குணம் கொண்டவன். கவிஞன் . எல்லாவற்றிர்க்கும் மேல் ஊனம் உள்ளவன். அவன் சிறு வயது முதல் பணக்கார வீட்டு பையன் ஆகாஷ் வர்மாவின் (சல்மான் கான்) நண்பன். ஆகாஷின் தாய் தந்தையர் அமனையும் ஒரு மகனாக வளர்க்கிறார்கள் . இருவரும் அண்ணன் தம்பிகளாக எந்த பிரிவினையும் இல்லாமல் வளர்கிறார்கள்.
ஆகாஷ் விடலை பையனாக வளருகிறான். பெண்களை ரசிக்கிறான்.
அமன் கவிதையை ரசிக்கிறான், சாகர் என்ற புரை பெயரில் கவிதை எழுதுகிறான். அவனுடைய கவிதைகள் பிரசுரமாகிறது. அவன் பலரால் ரசிக்கப்படுகிறான். பிரபல்யமாகிறான். அவனுடைய பல ரசிகைகளில் இனிய அழகான பூஜா சாக்சனாவும் (மாதுரி தீக்சித்) ஒருத்தி. அமன் தான் சாகர் என்று தெரியாமலேயே அவள் அவனுடன் பழகுகிறாள் .
ஆகாஷ் பூஜாவை பார்த்தவுடன் காதல் கொள்கிறான். அவன் அமனிடம் அவன் காதலுக்கு உதவி கேட்கிறான். மனதில் பூஜாவை காதலிக்கும் அமன் மனதில் அழுதவாறே அவனுக்கு யோசனை சொல்கிறான். ஆகாஷை கவிஞன் சாகர் போல நடிக்க சொல்கிறான். பூஜாவும் ஆகாஷும் காதல் கொள்கிறார்கள்.
இதை பார்த்து அமன் மனதுடைந்து போகிறான். தன்னுடைய கவிதையை பல பெண்கள் ரசித்தாலும் தன்னுடைய ஊனத்தால் தன்னை யாரும் காதலிக்க மாட்டார்கள் என்று மனதிற்குள் வருத்தப்பட்டு கொள்கிறான்.
முடிவில் அமன் பூஜாவை காதலிப்பதும், அமன் தான் கவிஞன் சாகர் என்றும் தெரிந்து கொள்கிறான். அமனுக்காக ஆகாஷ் காதலை தியாகம் செய்கிறான்.
இப்போ டூயட்
இங்கே பிரபு ஏழை கிடையாது அனாதை கிடையாது ஊனம் கிடையாது. கவிஞன் கிடையாது . அனால் குண்டு சாக்ஸபோன் கலைஞன். அவனை எந்த பெண்ணும் பார்க்க மாட்டார்கள் கிண்டலடிப்பார்கள். அனால் அவனுடைய இசையை ரசிக்காதவர்களே கிடையாது. அவனும் அவன் தம்பி ரமேஸ் அரவிந்தும் சேர்ந்து ஒரு இசை குழு வைத்து கல்யாணதுக்கு வாசிக்கிறார்கள்.
இங்கே ரமேஸ் அரவிந்த் ஒரு விடலை பையன். பெண்களை ரசிப்பவன். இவர்கள் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் வசிப்பவர் மீனாக்ஷி சேஷாத்திரி. மீனாக்ஷி சேஷாத்திரியை பார்த்தவுடன் தம்பிக்கு காதல் வந்து விடுகிறது. பக்கத்து வீட்டிலிருந்து வரும் இசையை வசிப்பது தம்பி தான் என்று நினைத்து தம்பியை காதலிக்கிறாள். இதை அறிந்து அண்ணன் துக்கப்பதுகிறான் துயரப்படுகிறான். தான் குண்டாக இருப்பதால் தன்னை யாரும் காதலிக்கவில்லை என்று வருத்தப்படுகிறான்.
முடிவில் இசையமப்பவன் அண்ணன் என்று தெரிகிறது . அண்ணன் காதல் வெற்றியடைகிரது
அடுத்த பாகத்தில் நடிகன் படம் எந்த தமிழ் படத்தில் இருந்து உருவியது என்று பார்ப்போமா........

3 comments:
இது சாஜன் படத்தின் காப்பி என்று ஏற்க்கனவே தெரியுமே!
முதலில் வேர்ட் வெரிபிகேசன் எடுத்து விடுங்கள்.கமென்ட் போடுவதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது.
மைதீன் said...
முதலில் வேர்ட் வெரிபிகேசன் எடுத்து விடுங்கள்.கமென்ட் போடுவதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது.
THANKS FOR YOUR INFORMATION. IMAGE VERIFICATION REMOVED
Post a Comment