Thursday, June 23, 2011

கணிதம் கற்போம் - 03

ஒரு விளையாட்டு கதை.



மிக பெரிய செல்வந்தர் ஒருவர் ஒரு நாள் உற்சாகமாக வீடிற்கு வந்தார்.வீட்டிற்கு வந்ததும் அவர் எல்லாரையும் அழைத்து தன் உற்சாகதிற்கான காரணத்தை சொன்னார்.

நான் இன்று ஒருவனை சந்தையில் பார்த்தேன். நான் பார்த்த மனிதர்களிலேயே இவரை போல வேறு கிறுக்கன்கள் இருக்க முடியாது என்றார்.எங்களுக்குள்  ஒரு மாதத்திற்கான ஒப்பந்தம் ஒன்றை நாங்கள் போட்டு கொண்டோம் . அது தான் என் மகிழ்ச்சிக்கான காரணம் என்றார்.வீட்டார் என்ன ஒப்பந்தம் என்று கேட்டார்கள்.

தினமும் அவன் என்னிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் நான் அவனுக்கு முதல் நாள் ஒரு பைசா காசும், இரண்டாம் நாள் இரண்டு பைசாவும், மூன்றாம் நாள் நாலு பைசாவும் இது போல் ஒரு மாதம் நான் பைசாவிளும் அவன் லட்சமாகவும் கொடுக்க வேண்டும் இது தான் ஒப்பந்தம் என்றார்.
வீட்டில் உள்ளவர்களுக்கு நம்ப முடியவில்லை. சிறுது நேரம் பேசி தூங்கி விட்டார்கள். ஆனால் நம் செல்வந்தருக்கு தான் தூக்கம் வரவில்லை.தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை எண்ணி சந்தோச பட்டுக் கொண்டார்.
சேவல் கூவ தொடங்கி விட்டது .யாரோ கதவை தட்டினார்கள்.திறந்து பார்த்தார்.வெளியே ஒப்பந்தகாரர். அவர் கையில் ஒரு  பெட்டி. 
இவரிடம் அந்த பெட்டியை தந்தார் 
எண்ணிக்கொள்ளுங்கள் என்று நூறு ரூபாய் கட்டுக்கள் பத்தை தந்தார். இவர் அதை எண்ணி சரி பார்த்து கொண்டார். 
மிகச் சரியாக இருந்தது.
இவரிடம் என் பங்கு என்று கேட்டார். இவரும் கொடுக்க வேண்டிய ஒரு நயா பைசாவை தந்தார்,. 
அதை வாங்கிக்கொண்டு நாளை வருகிறேன் என்று அவர் சென்று விட்டார்.  

நம் செல்வந்தருக்கு பயங்கர சந்தோசம் ஒரு பக்கம் சந்தேகம். ஒரு வேலை திருட்டு பையனாக இருப்பானோ . நம் கஜானா எங்கே இருக்கிறது என்று நோட்டம் விட வந்து இருப்பானோ என்று.
மறு நாள் வந்தது 
சேவல் கூவியது
பொழுது புலர்ந்தது 
பொழுது தளர்ந்தது
அந்தி வந்தது 
இவர் எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருந்தார் . ஒப்பந்தம் போட்டவர் வரவே இல்லை. சரி இனி அவன் வரமாட்டான் , பையன் சுதாசிருப்பான் என்று எண்ணிக்கொண்டார் அப்பொழுது கதவு தட்டப்பட்டது. வெளியே ஒப்பந்தகாரர் . லட்சம் கொடுத்தார் , இரண்டு பைசா வாங்கிகொண்டு சென்றார். மூன்றாம் நாள் ட்சம் கொடுத்தார் , நான்கு  பைசா வாங்கிகொண்டு சென்றார். நான்காம் நாள் எட்டு பைசா என்ற கணக்கில் ஒரு மாதம் வாங்கிகொண்டு சென்றார். நடுவில் நம் செல்வந்தர் இந்த ஒப்பந்தத்தை ஒரு மாதம் என்று போடாமல் இரண்டு மாதம் போட்டு இருக்கலாமே என்று வருத்தப்பட்டு கொண்டார்.


சரி இப்போ நீங்க சொல்லுங்க இதுல யார் கிறுக்கன்?


 ஊழலை ஒழிக்க பிறந்த ரஜினிக்கும், ஷங்கருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலால் கிடைத்த பணத்தில் எத்தனை  சதம் பங்கிருக்கும் என்று யாரவது சொல்ல முடியுமா?

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Peter John said...

he will get Rs 1,27 crore. but the bizman will get 30 lacs only

மனசாலி said...

Thank You

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி!

Jayadev Das said...

\\ஊழலை ஒழிக்க பிறந்த ரஜினிக்கும், ஷங்கருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலால் கிடைத்த பணத்தில் எத்தனை சதம் பங்கிருக்கும் என்று யாரவது சொல்ல முடியுமா?\\

ரஜினி தன்னுடைய சம்பளத்தைப் பெரும்போதே TDS [Tax deducted at Source] பிடித்தம் போகவே மீதப் பணத்தை மட்டுமே எந்திரன் படத்திற்கு பெற்றார். இந்த ஷங்கர் ஏதாவது வருமான வரி எய்ப்பு, தன்னுடைய படங்களை பிளாக்கில் டிக்கெட் விற்க வைத்து காசு பார்த்தார என்று கண்டு பிடிக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொள்ளை போன பணத்தில் முக்கால் வாசிக்கும் மேல் ஸ்பெக்ட்ரத்தை வாங்கிய Company -களுக்குத்தான் லாபமாகக் கிடைத்திருக்கும். அதில் பத்து அல்லது இருபது சதவிகிதம் கமிஷன் தான் அரசியல் வாதிகளுக்கு வந்திருக்கும். அதிலும் காங்கிரஸ், திமுக என்று நான்கைந்து கட்சிகள் பங்கு போட்டு பிரித்து தின்ற மீதிதான் சன் டி.வி.யின் KD பிரதர்சுக்கே வந்திருக்கும் [அது கூட சந்தேகம்தான்], அந்த மொடா முழுங்கிகள் தங்கள் கையில் கிடைத்ததை எதற்காக இன்னொருத்தருக்குத் தரப்போகிறார்கள்? ஆக, அந்த ஊழலுக்கும், இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.