Friday, October 21, 2011

டாப் டென் பின்னுட்டங்கள் மனசாலி பார்வையில் 01


"பதிவுகள் காப்பியடிக்கப்படலாம் ஆனால் பின்னுட்டங்கள் காப்பியடிக்கபடுவதில்லை"
 
இன்று பெரும்பாலும் எழுதப்படும் பின்னுட்டங்கள் பொத்தாம் பொதுவாகவே எழுதப் படுகின்றன. தன்னுடைய வலைக்கு இழுக்கும் தூண்டிலாகவே பதிவர்கள் பின்னுட்டத்தை பயன் படுத்த நினைக்கிறார்கள். அதில் மற்றொரு வகை "கொடுத்தல் வாங்கல்". நீ எனக்கு எழுது நான் உனக்கு எழுதுகிறேன். நான் இங்கே எல்லாரையும் குறிப்பிடவில்லை. ஆனால் நல்லதொரு சதவிகிதத்தில் இருக்கிறார்கள். 

பதிவை படித்து நிறை குறைகளை அலசுபவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். 

மூத்த பதிவர் திரு N.R.பிரபாகரன் குறிப்பிட்டது போல (இங்கே ஒரு பதிவர் எழுதக்கூடிய கருத்தில் மாற்றுக்கருத்து இருந்தாலும் அவரிடம் பழையபடி நட்பு மாறாமல் பழகுவது வெகு சிலரே. மற்றபடி பெரும்பாலானவர்கள் ஒருவர் எழுதிய கருத்துக்களை மட்டுமில்லாமல் அவரையே எதிரியாக பார்க்கும் மனநிலையில் தான் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நான் கருத்தைச் சொல்கிறேன் பேர்வழி என்று சில நல்ல நண்பர்களை இழக்க விரும்பவில்லை.) பதிவர்கள் ஏன் இவ்வாறு இருக்கிறார்கள் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.


நான் இங்கே அவ்வாறு பதிவை பற்றி பின்னுட்டம் எழுதுபவர்களை பெருமை படுத்தவே இந்த 'டாப் டென்'  தொடர் பதிவை தொடங்குகிறேன். இது ஹிட்ஸ் பெறுவதற்காக தொடங்கப்பட்டது அல்ல. இந்த பதிவு நான் ஒருவனே படிக்கும் என் நாட் குறிப்பு போல் இருந்தாலும், இதை நான் தொடருவேன். எல்லா வெள்ளியன்றும் மனசாலியில் இதை நீங்கள் படிக்கலாம்.

அடுத்த வாரம் முதல் இந்த பதிவை இன்னும் நேர்த்தியாக்குகின்றேன்.
நன்றி
 
           10 
 
Babu said...
“பாசச்தலைவனுக்கு” நடக்கபோகிற பாராட்டு விழாவில் சூப்பர்ஸடார் சொல்ல .. 2021ல் சூப்பர்ஸடார் - arasiyalukku varapogirar endru valakkampol news irukkum 2021ல் சூப்பர்ஸடார் - New movie's heroin is Meena's daughter. Meena plays role of rajini's mother. Tamilan - eppo mudiyum intha 12 hours power cut ??!!!! பதிவின் தலைப்பு  

திருச்சி இடைத்தேர்தல் முடிவும், உள்ளாட்சித் தேர்தலும் 

09  

NAAI-NAKKS said...
பேசாம பயோ டேட்டா -வுக்கு ஒரு BLOGSPOTஆரம்பிசிடுவோமா ??? 
 
பதிவின் தலைப்பு 
 

நடிகர் விஜய் பய(ங்கர) டேட்டா

 

08 

கார்த்தி said... 
அம்மா இதெல்லாம் செய்வது ஏதேனும் தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக இருக்கும் (சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தப்புவதற்காக இருக்கும், இப்படி வழக்குகளிருந்து தப்ப எடியூரப்பா கோவில் கோவிலாக சுற்றி கடைசியில் களியை பிரசாதமாக வாங்கியது நாடறியும்).கோவில் அன்னதான திட்டம், யானைகள் காப்பகம் திட்டம் போன்றவற்றை செய்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம் (திருடலாம்,பேரம் பேசலாம்) என்று யாரேனும் சொல்லி இருப்பார்கள். ஏற்கனவே ,கேரள சோதிடர் ஒருவர் பேச்சைக் கேட்டு பழனி முருகன் மூலவர் சிலை முன்னால் பழைய உற்சவரை அகற்றி விட்டு புதிய சிலையை நிறுவினார் ,எதற்கு அப்படி திடீரென்று செய்தார் என்று விளங்கவில்லை. நாளை கோவில்களில் எல்லாம் வாழைப்பழத்திற்கு பதில் பலாப்பழத்தை படைக்க வேண்டும் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை. இவர் நல்லா இருக்கணும்னு அரசு பணத்தை செலவழிக்கிறது கேணத்தனமான செயல்.. 
 
 
பதிவின் தலைப்பு 

 

யானையை காக்கும் வானம்பாடி!

 

07 

அம்பலத்தார் said...
வணக்கம், கொலைக்கு உடந்தையாக இருந்ததற்கு தண்டனை கொலைதான் என்றால், அப்புறம் இந்த மூன்று அப்பாவி இளைஞரையும் கொலை செய்ய உடந்தையாக இருக்கும் காங்கிரஸ் அடிவருடிகளிற்கு தண்டனை என்ன?  

 

பதிவின் தலைப்பு 
 

பாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்தின் கோரப் பற்கள்

  

 06

 

தி. ரா. ச.(T.R.C.) said...
அதேபோல் அவரவர்களுக்கு வேண்டிய ஆதார சுருதியை அதில் அமைத்துக் கொள்வதற்கு உதவ தக்கப்படி வார்களால் இழுத்து கட்டப் பெற்றிருக்கின்றது என்னுடைய சங்கீத ஜாதிமுல்லையிலும் இதைப்பற்றி சொல்லியிருந்தேன் பாகவதர் நன்றாகப்பாடிக்கொண்டிருந்தார்.ஆனால் பக்க வாத்யம் பக்கா வாத்தியமாக இல்லை.மிருதங்கம் தகராறு.மிருதங்கத்தில் தோலை இழுத்து பிடித்து (வார் பிடித்தல்) சரி செய்தால்தான் சுருதி சரியாக இருக்கும் செய்யாமல் விட்டுவிட்டு கச்சேரியின் போது நடுவில் அவ்வப்போது செய்துகொண்டு இருந்தார்.பாகவதர் பொறுமை இழந்து இரண்டாவது முறை சரி செய்யும்போது சொன்னார்"என்ன அண்ணா போன வார்லே வார் பிடிச்சதா அடுத்த வார் வந்தா தான் சமாதானம் ஆகும்' என்றவுடன் அரங்கமே அதிர்ந்தது

 

 

பதிவின் தலைப்பு 
 

புதன் ஸ்வரம் - ' ரி '

 

 05

 www.rasanai.blogspot.com said:

Dear karundhel
still i am supporting your actions / efforts on plagiarism. keep it up. whatever be the result we will protest and fight. for sake : indian independence struggle started in 1857 and got independence on 1947 only. this is just a start whether failure or success that does not matter. we will keep on unmasking these cheap copiers who makes fame and money from others' hard work and creativity. we have not got independence on a single day or overnight but few incidents like vellore mutiny, meerut mutiny, kattabomman etc and non violence. these kind of activities become a snowball in future and will do the good thing for tamil cinema. for me still tamil has very good novels and short stories aplenty for filming but our directors are mostly drop outs / copying students so we can expect this much. one day surely deserving people will come into the tamil cine field making a tamil cinema worldwide. keep it up. thanks

anbudan
sundar g
பதிவின் தலைப்பு 
 

வேலாயுதம் திரைப்படம் மீது Ubisoft வழக்கு வருகிறது

 04

நெல்லி. மூர்த்தி said...
உண்மையைச் சொல்லவேண்டுமெனில், சங்கீதம் குறித்து அதிகம் தெரியாததினால் எப்படி விமர்சிப்பது என தெரியவில்லை. தங்கள் எழுத்துபிரவாகம் பிரமாதம். தங்களிடம் நான் எப்போதும் வலியுறுத்துவது போல் ’வலைப்பூ எனும் வட்டத்திற்குள் மட்டும் விட்டமிடாது எல்லையை பெருக்க’ முயற்சிக்கவும். இது பரந்து பட்ட உலகத் தமிழ் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

 

 

பதிவின் தலைப்பு 
 

தேநீர்ப்பேச்சு- 2

 03

 

தனிமரம் சொன்னது…
பூலான் தேவி கதைக்காக அந்தப்பேப்பர் தொடராக வாங்கியவன்! ரேவதி நடிகை மட்டுமல்ல நல்ல இயக்குனர்     ஹிந்தியில் சல்மான்கானை இயக்கியவர் மட்டுமல்ல மித் ர மை பிரெண்டு மூலம் எயிட்ச் நோயாளியின் உலகை காட்டியவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை !  துணிந்து எழுதுங்கள் கூட வருகின்றோம் வாசகனாக!

 

பதிவின் தலைப்பு 
 

(பகுதி-4)எனக்குப்பிடித்த பெண்கள்

 02 

இராஜராஜேஸ்வரி said... ஆக, என்ன தான் இருந்தாலும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இன்னமும் நான்கு அல்லது ஐந்து தலைமுறையின் பின் தமது அடையாளங்களை முற்றாக இழந்துவிடுவார்கள் என்பது மட்டும் கசப்பான உண்மை.

பதிவின் தலைப்பு 

புலம்பெயர்ந்த தமிழரும்,பச்சோந்திகளும்..!


01

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...
ஒரு எமர்ஜென்சி நேரத்தில் நடந்துகொள்ளவேண்டிய குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் வேடிக்கை பார்க்கும் பிரகஸ்பதிகளை என்ன சொல்ல ;-( இனிமேலாவது அவர்கள் இப்படிச்செய்து ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகளுக்கு இடைஞ்சல் செய்யாமல் இருக்கும்படி பயிற்சி கொடுக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடனே முன்வரவேண்டும். நல்ல. தொகுப்பு. நேரே இருந்து பார்த்ததுபோல் திகிலாகவும் கலவரமாகவும் இருந்தது. நல்லவேளை. உயிர்ச்சேதம் இல்லை. கும்பகோணமே இன்னும் மறந்தபாடில்லை ;-(
பதிவின் தலைப்பு 

மயிலாடுதுறை தீவிபத்து!!

 டிஸ்கி : "பதிவுகள் காப்பியடிக்கப்படலாம் ஆனால் பின்னுட்டங்கள் காப்பியடிக்கபடுவதில்லை" என்று சொல்லி விட்டு பின்னுட்டங்களை 'காப்பி பேஸ்ட்' செய்து ஒரு பதிவா என்று நீங்கள் கேட்க கூடாது.

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

23 comments:

தனிமரம் said...

பின்னூட்டங்கள் தான் ஒரு பதிவாளர் தன் பதிவினை செம்மையாக்கவும் கருத்து மற்றவர்களுக்கு புரியவைக்கவும் சிறப்பாக்குவது என்பதால் தான் நான் அதிகமான பதிவுகளை படித்தே கருத்திடுவது .
நன்றி தனிமரத்தையும் அவையில் மகுடம் சூட்டியதற்கு மனசாலி . மிகவும் காத்திரமானவர்கள் நீங்கள் கூறியவர்கள் அவர்களுடன் என்னையும் இனைத்ததற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்! 

Minmalar said...

எத்தனையோ பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டிருந்தாலும், எத்தனையோ பின்னூட்டங்களுக்குபதில் பின்னூட்டம் இட்டிருந்தாலும், பின்னூட்டம்பற்றிய பதிவுக்கு முதல் முறையாக பின்னூட்டம்இடுகிறேன். நல்லா இருக்கு!

இராஜராஜேஸ்வரி said...

மனதில் பட்டதை அருமையாய் பகிர்ந்திருக்கிறீகள். பாராட்டுக்கள்...

Mohamed Faaique said...

தொடரட்டும் உங்கள் சேவை..

அவிய்ங்க ராசா said...

வித்தியாசமான பதிவு..எனக்கு வந்த சில பின்னூட்டங்கள் பல, யோசிக்கவைத்திருக்கின்றன..பல மாட்டி விட்டுருக்கின்றன..பல சிரிக்கவைத்திருக்கின்றன..பல கோபப்படுத்தியிருக்கின்றன..பதிவுகளை விட பின்னூட்டங்களுக்கு அந்த சக்தி இருப்பதாகவே கருதுகிறேன்..

கார்த்தி said...

அருமை நண்பரே..வித்தியாசமான முயற்சி.. வாழ்த்துக்கள்..ஆயிரம் நன்றிகள் தங்களுக்கு உரித்தாகுக..

NAAI-NAKKS said...

நன்றி ...நன்றி ....

NAAI-NAKKS said...

நாம ரோம்ப பிரபலம் ஆய்ட்டோமொ ???

Anonymous said...

ஸலாம் சகோ.மனசாலி,
மிக நல்ல முயற்சி. பாராட்டுக்கள். ஆனால், இது மெய்யாகவும் சிறப்பாகவும் இருக்க, நீங்கள் அனைத்து பதிவுகளையும் அதில் அனைத்து பின்னூட்டங்களையும் படிக்க வேண்டி இருக்குமே..? எந்த அடிப்படையில் எப்படி தொகுக்கிறீர்கள் சகோ..?

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

ஸலாம் சகோ.மனசாலி,
மிக நல்ல முயற்சி. பாராட்டுக்கள். ஆனால், இது மெய்யாகவும் சிறப்பாகவும் இருக்க, நீங்கள் அனைத்து பதிவுகளையும் அதில் அனைத்து பின்னூட்டங்களையும் படிக்க வேண்டி இருக்குமே..? எந்த அடிப்படையில் எப்படி தொகுக்கிறீர்கள்..?

அம்பலத்தார் said...

என்னையும் மதித்து எனது பின்னூட்டத்தை கௌரவித்திருப்பதற்கு நன்றி மனசாலி. நான் எப்பொழுதுமே பதிவுகளை படிக்கும்போது பின்னூட்டங்களையும் தவறாமல் படிப்பேன். அப்பொழுதுதான் வாசகர்களை, மக்களை புரிந்துகொள்ளமுடியும்.
மக்கள் மனங்களை அறிந்துகொள்ளாமல் அந்த மனங்களை வசப்படுத்தமுடியாது.

MANASAALI said...

'தனிமரம்' அவர்களே,
உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

MANASAALI said...

மின்மலர் அவர்களே,
விசு படம் பார்த்து நாட்கள் அதிகம் ஆகி விட்டன என்ற குறையை உங்கள் பின்னுட்டம் தீர்த்து வைத்து விட்டது. நன்றி.

MANASAALI said...

///இராஜராஜேஸ்வரி said... மனதில் பட்டதை அருமையாய் பகிர்ந்திருக்கிறீகள். பாராட்டுக்கள்...\\\

நீண்ட நாட்களுக்கு பிறகு என் தலைப்பின் நோக்கத்தை தொடங்கியிருக்கிறேன்.

MANASAALI said...

\\\\Mohamed Faaique said... தொடரட்டும் உங்கள் சேவை..////

நீங்க தாங்க தினமும் நம்ம கடைக்கு தினமும் டீ சாப்பிட வர்றீங்க. ரொம்ப நன்றிங்க. புத்தாண்டு வரட்டும் காலண்டர் வாங்கிக்கலாம்.

MANASAALI said...

\\\அவிய்ங்க ராசா said...///

உண்மை தான். வருகைக்கு நன்றி ராசா.

MANASAALI said...

\\\கார்த்தி said... அருமை நண்பரே..வித்தியாசமான முயற்சி.. வாழ்த்துக்கள்..ஆயிரம் நன்றிகள் தங்களுக்கு உரித்தாகுக..////

நன்றி. தொடர்ந்து நல்ல பின்னுட்டங்களை இடுங்கள்.

MANASAALI said...

\\\NAAI-NAKKS said... நாம ரோம்ப பிரபலம் ஆய்ட்டோமொ ???///

இவரும் அடிக்கடி நம்ம கடைக்கு வர்ற ஆள் தான். நீங்களும் காலண்டர் வாங்கிக்கலாம்.

MANASAALI said...

\\\pinnoottavaathi said...
ஸலாம் சகோ.மனசாலி,
மிக நல்ல முயற்சி. பாராட்டுக்கள். ஆனால், இது மெய்யாகவும் சிறப்பாகவும் இருக்க, நீங்கள் அனைத்து பதிவுகளையும் அதில் அனைத்து பின்னூட்டங்களையும் படிக்க வேண்டி இருக்குமே..? எந்த அடிப்படையில் எப்படி தொகுக்கிறீர்கள் சகோ..?///

இப்பொழுது தொடக்கத்தில் நான் என்னால் முடிந்த வரை எனக்கு பிடித்ததை வரிசையிடுகிறேன். விரைவில் என் பதிவிடும் நண்பர்களை இணைத்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். பதிவர்கள் அனைவரையும் அவர்களுக்கு வரும் பின்னுட்டங்களில் அவர்களை கவர்ந்ததை எனக்கு தெரிவுக்குமாறு கேட்டு கொள்ளலாம் என்றிருந்தேன். ஆனால் அது நான் என் பதிவை பிரபலப்படுத்த நான் மேற்கொள்ளும் மூன்றாந்தர செயலாக(விளம்பரமாக) அவர்கள் கருதிவிடும் அபாயம் இருப்பதால் அதை தவிர்த்து விட்டேன்.

MANASAALI said...

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

ஸலாம் சகோ.மனசாலி,
மிக நல்ல முயற்சி. பாராட்டுக்கள். ஆனால், இது மெய்யாகவும் சிறப்பாகவும் இருக்க, நீங்கள் அனைத்து பதிவுகளையும் அதில் அனைத்து பின்னூட்டங்களையும் படிக்க வேண்டி இருக்குமே..? எந்த அடிப்படையில் எப்படி தொகுக்கிறீர்கள் சகோ..?///

இப்பொழுது தொடக்கத்தில் நான் என்னால் முடிந்த வரை எனக்கு பிடித்ததை வரிசையிடுகிறேன். விரைவில் என் பதிவிடும் நண்பர்களை இணைத்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். பதிவர்கள் அனைவரையும் அவர்களுக்கு வரும் பின்னுட்டங்களில் அவர்களை கவர்ந்ததை எனக்கு தெரிவுக்குமாறு கேட்டு கொள்ளலாம் என்றிருந்தேன். ஆனால் அது நான் என் பதிவை பிரபலப்படுத்த நான் மேற்கொள்ளும் மூன்றாந்தர செயலாக(விளம்பரமாக) அவர்கள் கருதிவிடும் அபாயம் இருப்பதால் அதை தவிர்த்து விட்டேன்.

MANASAALI said...

\\\அம்பலத்தார் said... ///
நன்றி. தொடர்ந்து நல்ல பின்னுட்டங்களை எழுதுங்கள்.

நெல்லி. மூர்த்தி said...

தாங்கள் எழுத்தையும், வாசிப்பையும் நேசிப்பதனால் தான் இது போன்ற கரு உருவாகியுள்ளது. பதிவுகளைப் போன்றே பின்னூட்டத்தினையும் ஆய்வு செய்து வகைப்படுத்தியுள்ளது பின்னூட்டாளர்களையும் உற்சாகப்படுத்தும். இதன் வழியாக அவர்களை மட்டும் அல்ல பதிவுகளையும் அண்ணாந்து பார்க்க வைக்கும்.

MANASAALI said...

நெல்லி. மூர்த்தி said...

உண்மை. பின்னுட்டங்கள் கவனிக்கப்படுகின்றன.மதிப்பிடப்படுகின்றன எனும்போது. நிச்சயமாக அதை எழுதுபவர்கள் சிறந்த முறையில் எழுதவே நினைப்பார்கள் என்றே நினைக்கிறேன்.