Friday, October 21, 2011

டாப் டென் பின்னுட்டங்கள் மனசாலி பார்வையில் 02

இந்த பதிவின் அவசியம் என்ன என்று பலர் நினைக்கலாம். பின்னுட்டங்கள் கவனிக்கப்படுகின்றன.மதிப்பிடப்படுகின்றன எனும்போது. நிச்சயமாக அதை எழுதுபவர்கள் சிறந்த முறையில் எழுதவே நினைப்பார்கள் என்றே நினைக்கிறேன். மனசாலி சென்ற வாரம் தெரிவு செய்த பத்தில் ஒருவர் இந்த வாரம் அவர் இட்ட பல பின்னுட்டங்கள் அவருடைய பழைய பின்னுட்டங்களை விட நல்ல வழமையாக இருந்தன. இந்த முயற்சி வெற்றி பெற்றால் நல்ல பதிவுகள் பல நமக்கு கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சிறந்த பின்னுட்டங்கள் மூலம் நாம் நல்ல சிறுகதைகளை உருவாக்கலாம் பல நல்ல கருக்கள் பின்னுட்டத்தில் உறுதியாக கிடைக்கும். உதாரணமாக மெகா சீரியல் பின்னுட்டத்தில் இருந்து நாம் ஒரு சிறுகதையை உருவாக்கலாம்.

சிறந்த பின்னுட்டங்களை தேடுவதற்கு நிறைய படிக்க வேண்டியிள்ளதால் எழுதுவது குறைந்து விட்டது. எனவே நண்பர்களே நீங்கள் பதிவில் காணும் நல்ல பின்னுட்டங்களை எனக்கு பின்னுட்டத்தில் தெரிவிக்கவும். நன்றி

இனி தர வரிசை


10

சாகம்பரி said...
அவசர யுகத்தில் இது மிகவும் தேவையான பதிவு. எலுமிச்சை சாறும் இஞ்சி சாறும் பலன் தரும்
வயிற்றில் பொங்கும் அமிலத்தின் அவஸ்தை

09

bandhu said...

//ஓட்டு சதவீதம் அதிகரிக்க கூட்டணி இல்லை என்பது தான் காரணமா?


அதைக் காரணமாக சொல்ல முடியாது.

ஆம்...காங்கிரஸ் எங்ககூட இல்லாததால் வாக்குகள் கொஞ்சம் அதிகமாக எங்களுக்கு கிடைத்துள்ளது.//
இது எனக்கு புரியவில்லை. சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டது குறைந்த இடங்கள். இப்போது மாநிலம் முழுவதும். கிட்ட தட்ட இரு மடங்கு அதிக இடங்கள். அப்படி பார்த்தால், இரு மடங்கு ஒட்டு கிடைத்தால் கூட சதவிகிதம் அதிகரிக்க வில்லை என்றே சொல்ல வேண்டும். அப்படி இருக்கையில், அதிகரித்தது வெறும் ஐந்து சதவிகிதம் (இல்லை, அதற்க்கும் கீழா?) என்றபோது, உண்மையிலேயே குறைந்தது என்று தானே சொல்ல வேண்டும்?

இது எல்லா கட்சிக்கும் பொருந்தும்.


08

சித்தாரா மகேஷ். said... நீங்க நல்லாவே நாடகங்கள் பார்ப்பீர்கள் போலிருக்கே.அருமையான உணர்வு.
மெகா சீரியல் ஒன்றை இயக்குவது எப்படி?

07
சேட்டைக்காரன் said...
நண்பரே! சர்தார்ஜீகள் மட்டுமல்ல! குஜராத்திகளைப் பற்றி குஜ்ஜு ஜோக்ஸ்; வங்காளிகளைப் பற்றி போங்க் ஜோக்ஸ்; மராட்டியர்களைப் பற்றி காட்டி ஜோக்ஸ்! மலையாளிகளைப் பற்றிய மல்லு ஜோக்ஸ்; தமிழர்களைப் பற்றிய மதறாசி ஜோக்ஸ் என்று பலரகமான ஜோக்குகள் இணையம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் கற்பிக்க யாரும் இன்னும் கிளம்பவில்லை! :-) மேலும் பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் எழுதிய புத்தகங்களை வாசித்திருக்கிறீர்களோ? ஜஸ்பால் பட்டி என்ற நகைச்சுவை நடிகர் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களோ? இவர்களெல்லாம் சர்தார்ஜீ ஜோக்ஸ் புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களே எழுதியவர்கள். இத்தோடு சான்டாசிங் பான்டாசிங் இணையதளத்தை நடத்துபவர்களே சீக்கியர்கள் தான்! சீக்கியர்களுக்குத் தங்களைக் குறித்தே நகைச்சுவை செய்கிற பெருந்தன்மை உண்டென்று வேண்டுமானாலும் கூறலாம்.
சர்தார் ஜோக்குகளில் உள்ள வக்கிர வரலாறு!
06
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
அமெரிக்காவின் அடுத்ததாக்குதல் மகிந்த மீதா? ஒருபோதும் இல்லை. நம்மை நாமே , மகிழ்விக்க, தேற்ற வேண்டுமானால் இதைச் சொல்லிக் கொள்ளலாம்; பதிவின் ஏனைய பிரான்ஸ் சம்பந்தமான விடயங்களுக்கு மிகுதியையும் எதிர்பார்க்கிறேன்.

அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் - மஹிந்தவின் மீதா?


05

எனக்கு தெரிந்த ஒரு பயன்
நித்திரை முழித்து பழகலாம். இதன் மூலம் என்ன பயன் எண்டு கேட்பவர்களுக்கு. இரவில் எங்காவது களவுக்கு சென்றால் தூங்காது தப்பலாம்

பதிவராக இருப்பதால் என்ன பயன்!

04
வவ்வால் said...

பி.பி,

ஏ.ஆர்.எம் படத்தில போய் லாஜிக் பார்க்கலமா? அவர் என்னிக்கு சொந்த சரக்க படமா எடுத்தார்.

இந்த படம் மொக்கையாக இருக்கும்னு எனக்குள் ஒரு எண்ணம் உங்கள் விமர்சனம் ஊர்ஜிதப்படுத்திவிட்டது. பேச்சுக்கு நல்லா இருக்குனு சொல்லாம உண்மைய சொல்லி இருக்கிங்க.

பல்லவர்கள் வரலாறு, களப்பிறர்கள்,சிவகாமியின் சபதம் எல்லாம் படிச்சிட்டு இப்படம் பார்க்க போனால் கொடுமையாகவே தெரியும்னு ,இன்னும் பார்க்கவில்லை.

போதி தர்மன் தமிழர் என்பது சும்மா தூண்டில் புழு, போலத்தான். போய் மாட்டிப்போமா என்ன?

ஏழாம் அறிவும் ஏமாற்றமும்

03

கீதப்ப்ரியன்|Geethappriyan| said:

நண்பா
நலமா?
நானும் இதை வரவேற்கிறேன்.பர்மா பஜாரில் டிவிடி வாங்கி படம் எடுக்கும் விஜய் போன்ற இழிபிறவி ஈயடிச்சான் காப்பி இயக்குனர்களால் கற்பனைவளமும் நல்ல ஆக்கதிறனும் கொண்ட இளம் இயக்குனர்களுக்கு அழிவு காத்திருக்கிறது,


வேலாயுதமும் ஏழாம் அறிவும்: ஒரே மூலத்தின் இரண்டு காப்பிகள்?

02
shri Prajna said...

சுவாரசியமாகவும் இல்லாமலும் விஷயங்கள் நடந்தாலும் அந்த window seat மட்டும் கிடைத்து விட்டால் அந்த ரயில் பயனம் தான் எவ்ளோ இனிமையானது.பயனிக்கும் அத்துனை பேரையும் தாலட்டும் சுகமே தனிதான்.சில விஷயங்களில் ரயில்வே துறையும் சிலவிஷயங்களில் பொதுஜனமும் அக்கரை கொண்டால்(புகைப்பது,ரிசர்வேஷனில் உட்கார்ந்து எழமறுப்பது) tension இல்லாமல் நன்றாய் இருக்கும்..good sharing ...

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்

01
Saravanan MASS said...

ஆட்சியாளர்கள் மீது மட்டும் குறை சொல்ல முடியாது. தனக்கென்ன வந்துச்சுன்னு பொறுப்பற்ற மக்கள் பலர் குப்பைகளை கண்டகண்ட இடங்களில் வீசுவதை தவிர்த்தாலே இப்படி தண்ணீர் தேங்குவது குறையும்

இரத்த கரை படிந்த நாப்கின், குண்டுகுண்டா கருப்பு பிளாஸ்டிக் பைகள், எச்சில் இலைகள் இவை அனைத்தும் இன்று சேப்பாக்கம் கிருஷ்ணப்பா தெருவில் முழங்கால் அளவு தண்ணீரில் மிதந்து சென்றன.

குப்பை தொட்டியில் உள்ள குப்பைகளை எடுக்காமல் இருந்தால் அது ஆட்சியாளர்கள் தவறு

குப்பைகளை குப்பை தொட்டியில் போடாமல் பக்கத்து வீட்டுக்காரன் வாசல் தான் குப்பை தொட்டின்னு நினச்சு ஒவ்வொருவரும் வீசிட்டுபோனா

இந்த கொடுமையை தவிர்க்க முடியாது என்பது என் கருத்து!

சென்னை மழை


IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

bandhu said...

பின்னூட்டங்களை கவனித்து அதை வரிசைபடுத்தியது பிரமாதம். அதில் என் பின்னூட்டம் ஒன்றும் கவனிக்கப்பட்டதால் இரட்டை சந்தோஷம்! மிக்க நன்றி!

MANASAALI said...

bandhu said...

நன்றி உங்களை கவர்ந்த பின்னுட்டத்தை மனசாலிக்கு தெரியப்படுத்தவும்.

Minmalar said...

பின்னூட்டத்தை முன்னுக்கு கொண்டு உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

சாகம்பரி said...

இது ஒரு பாராட்டத்தக்க முயற்சி. என்னுடைய பின்னூட்டமும் வந்திருப்பதால் சொல்லவில்லை -(தரப்படுத்தியதற்கு நன்றி). பின்னூட்டம் என்பது நல்ல எழுத்துடனான பதிவினை ஊக்குவிப்பது. நம்முடைய பதிவினை படித்து மதிப்பிட்டு ஒருவர் பின்னூட்டமிடுவது பதிவுகளை தரம் உயர்த்தும் உண்மையான அக்கரையினை காட்டுகிறது.

சாகம்பரி said...

இது ஒரு பாராட்டத்தக்க முயற்சி. என்னுடைய பின்னூட்டமும் வந்திருப்பதால் சொல்லவில்லை -(தரப்படுத்தியதற்கு நன்றி). பின்னூட்டம் என்பது நல்ல எழுத்துடனான பதிவினை ஊக்குவிப்பது. நம்முடைய பதிவினை படித்து மதிப்பிட்டு ஒருவர் பின்னூட்டமிடுவது பதிவுகளை தரம் உயர்த்தும் உண்மையான அக்கரையினை காட்டுகிறது.

வவ்வால் said...

மனசாலி,

நல்ல முயற்சி,எத வச்சு பதிவு போடுறதுனு சப்ஜெக்ட் கிடைக்காம பலர் காபி ,பேஸ்ட் பண்ணி கொலை பண்றாங்க,இப்படி அடுத்தவர் பின்னுட்டங்களை தேடிப்பிடித்து பட்டியல் இடுவது புதிய முயற்சி. இது வரைக்கும் உங்கள் பட்டியலை நான் பார்த்தது இல்லை.

நம்ம பின்னூட்டத்தையும் கவனிச்சு பட்டியலில் சேர்த்தமைக்கு நன்றி!(அவன் அவன் பின்னூட்டம் போட்ட வெளியிட கூட மாட்டாங்கிறான், என்னமோ பிராபலமாம் அவங்கல்லாம்)

suryajeeva said...

மறுமொழிக்கு ஒரு டாப் டென், சூப்பர் கான்செப்ட்

இராஜராஜேஸ்வரி said...

சிறந்த பின்னுட்டங்கள் மூலம் நாம் நல்ல சிறுகதைகளை உருவாக்கலாம் பல நல்ல கருக்கள் பின்னுட்டத்தில் உறுதியாக கிடைக்கும். உதாரணமாக மெகா சீரியல் பின்னுட்டத்தில் இருந்து நாம் ஒரு சிறுகதையை உருவாக்கலாம்/

ஆழ்ந்த அருமையான சிந்தனை.
சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

சித்தாரா மகேஷ். said...

என் பின்னூட்டத்தினையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றி.இதுகூட நல்ல ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கே.வாழ்த்துக்கள்.

MANASAALI said...

\\\Minmalar said...///


பின்னுட்டத்தை முன்னுக்கு கொண்டு வருவதற்கு மட்டும் முயற்சிக்கவில்லை மின்மலர் அவர்களே அதன் மூலம் நல்ல பதிவுகளையும் எதிர்பார்கிறேன்,

MANASAALI said...

\\\சாகம்பரி said... ///


புரிந்து கொண்டமைக்கு நன்றி. மேலும் பல நல்ல பின்னுட்டங்களை இடுங்கள்.

MANASAALI said...

\\\வவ்வால் said...///

என் பட்டியலை பார்த்தது இல்லை என் வருந்தவேண்டாம். சென்ற வாரம் தான் தொடங்கியிருக்கிறேன். நீங்கள் சொல்லும் அந்த பிரபல பதிவர் யார் என பலருக்கும் தெரியும். பின்னுட்டத்தை approval பண்ணாததற்கு என்ன காரணம் என்பதையாவது அவர் மின்னஞ்சல் செய்திருக்கலாம்.

MANASAALI said...

\\\suryajeeva said..///

நன்றி. இந்த concept மேலும் சிறக்க உங்கள் கண்ணில் தென்படும் நல்ல பின்னுட்டத்தை எனக்கும் தெரியபடுத்துங்கள். பின்னுட்டம் இலக்கியதரம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்ற வரையறை எல்லாம் இல்லை. சும்மா நம்ம அட சொல்ல வைத்தாலே போதும்.

MANASAALI said...

\\\இராஜராஜேஸ்வரி said...

சிறந்த பின்னுட்டங்கள் மூலம் நாம் நல்ல சிறுகதைகளை உருவாக்கலாம் பல நல்ல கருக்கள் பின்னுட்டத்தில் உறுதியாக கிடைக்கும். உதாரணமாக மெகா சீரியல் பின்னுட்டத்தில் இருந்து நாம் ஒரு சிறுகதையை உருவாக்கலாம்/

ஆழ்ந்த அருமையான சிந்தனை.
சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..///

உடன்பட்டதற்கு நன்றி.இந்த சிறுகதையை உங்கள் வலையில் எதிர்பார்க்கலாமா?

MANASAALI said...

\\\சித்தாரா மகேஷ். said...///

உங்கள் பின்னுட்டம் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள். நீங்கள் காணும் நல்ல பின்னுட்டத்தை மனசாலிக்கு பரிந்துரைக்கவும்.

Saravanan MASS said...

மிக்க மகிழ்ச்சி மனசாலி, சந்தோசமா இருக்கு..

எனக்கு இருந்த ஆதங்கத்தைதான் சொன்னேன், அது இந்த அளவுக்கு கவனிக்கபடும்போது சந்தோசமா இருக்கு..

வெளிய தெரியாம செய்யும் நன்மைகளுக்கு பலன் இல்லாவிட்டாலும் தெரிந்தே தப்பு செய்பவர்களுக்கு தண்டனை கடுமையா இருக்கனும்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பின்னூட்டங்கள் பல பதிவுகளுக்கு மேலும்
வலுச்சேர்ப்பவை.
நன்கு தொகுத்துள்ளீர்கள்.
அதில் நமது ஒன்றேன்பது மகிழ்வே!

சேட்டைக்காரன் said...

எனது பின்னூட்டத்தையும் இங்கு குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி! பணிப்பளு மற்றும் வெளியூர் பயணம் காரணமாய் உடனடியாக வந்து எனது நன்றியைத் தெரிவிக்க இயலவில்லை. உங்கள் பணி தொடர எனது வாழ்த்துகள்!