Sunday, October 2, 2011

ஆ தி மு க ஆட்சி கலைஞர் மகிழ்ச்சி.


சென்ற ஆட்சியில் தி மு க சந்தித்த பல பிரச்சனைகளில் முக்கியமானது மின் தடை. அது தோற்றதற்கு மின்சாரம் நிச்சயமாக ஒரு காரணமாக இருந்தது. சென்னையை தவிர்த்து பிற ஊர்களில் நான்கு மணி நேரம் முதல் பத்து மணி நேரம் வரை மின் தடை அமலில் இருந்தது. 
பொதுவாக நம்மவர்களுக்கு ஒரு பொது குணம். நான் சீட்டு கம்பெனியில் ஏமாந்தால் துக்கம். அதுவே நீயும் ஏமாந்திருந்தால் ஆறுதல். அப்படி நான் மட்டும் இல்லை அவனும் என்று. சென்னையில் மின்சார தடை இல்லாத போது மற்ற ஊர்க்காரர்களுக்கு எரிச்சல். நாம் என்ன இரண்டாம் தர குடிமக்களா சென்னையை சேர்ந்தவர்கள் முதல் தரமா என்று.
தேர்தல் வந்தது 
ஆட்சி மாறியது.
ஆ தி மு க ஆட்சி வந்தது. ஜெயலலிதா என்ன செய்தாரோ மின்தடை முற்றிலும் இல்லாமல் போனது.
மக்களுக்கு மகிழ்ச்சி. பின்னே இருக்காதா ? இதற்கு தானே ஒட்டு போட்டோம்.
உடனே கலைஞர் என்ன சொன்னார் . "எங்கள் ஆட்சியில் நாங்க போட்ட திட்டங்கள் இப்பொழுது செயல்பட தொடங்கி விட்டது. இனி மின் பற்றாக்குறை இருக்காது" 

அனால் பெரும்பானவர்கள் இதை ஏற்கவில்லை இல்லை இல்லை கேட்கவே இல்லை.

மீண்டும் காட்சி மாறியது.
மீண்டும் மின் வெட்டு.
அதுவும் ஆறு மணிநேரம்.
அறிவிக்கப்பட்டது இரண்டு மணிநேரம்.
இலவசமாக நான்கு மணிநேரம்.
இப்பொழுது வீட்டில் கலைஞர் என்ன செய்து கொண்டிருப்பார்.
குரு சிஷ்யன் படத்தில் வரும் வினு சக்கரவர்த்தி போல் :இப்போ என்ன செய்வீங்க" என்று சந்தோசமாக இருப்பார்.

டிஸ்கி: இதற்கு எதற்கு நமீதா என்று யோசிக்காமல். அழக ரசிங்கப்பா. போன ஆட்சியில கலைஞர் செஞ்ச மாதிரி.  

ஒரு சின்ன சந்தேகம் மனசாலி template சரியில்லை மாத்துடா என்று நண்பன் சொல்கிறான். நீங்க என்ன சொல்றீங்க?
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

கோகுல் said...

அடிக்கடி கரண்டு போகுதுங்க,மக்கள் எல்லாம் தவிக்றாங்க, காரணம் என்ன கேட்டாக்க, தெலங்கானா பிரச்சினையாம் அதுதானாம்-அம்மா சொன்னா........... ங்க//

கோகுல் said...

template நல்லாத்தான் இருக்கு,வெள்ளையா
வெளிப்படையாயா நீங்க எழுதற மாதிரியே

மனசாலி said...

கோகுல் said... அடிக்கடி கரண்டு போகுதுங்க,மக்கள் எல்லாம் தவிக்றாங்க, காரணம் என்ன கேட்டாக்க, தெலங்கானா பிரச்சினையாம் அதுதானாம்-அம்மா சொன்னா........... ங்க//

தெலுங்கானா பிரச்சனை என்றால் சென்னை கானா வச்சு அட்ஜஸ்ட் பண்ண முடியாதா?

மனசாலி said...

கோகுல் said... template நல்லாத்தான் இருக்கு,வெள்ளையா வெளிப்படையாயா நீங்க எழுதற மாதிரியே

நிசமா தான் சொல்றீங்களா? இதுல ஏதும் உள்குத்து இல்லையே?