Wednesday, December 28, 2011

ப்ரியாவுக்காக ஒரு கவிதை

தப்பபா நெனச்சுராதீங்க . இது சும்மா எழுதி பார்த்தது.



விதைக்கும் போது விதைத்தவனும்!
பெய்யும் போது மழையும் !
நெய்யும் போது  நெசவாளியும்!
மகிழ்ந்தே மிக மிக மகிழ்ந்தே இருந்தார்கள்!
இவர்களுக்கு தெரிந்திருக்குமோ?
பணக்கார பயிரிலிருந்து 
உற்பத்தியாகம்
ஒரு எளிய ஆடையை 
இந்த பருத்தி சேலையை
எங்கள் தோழி அணியப் போகிறாள் என்று!!

இருட்டை கூந்தலாக்கி
மூன்றாம் பிறையை நெற்றியாக்கி
அகன்று சுழன்று நேர் நோக்கும் வசீகரத்தை கண்களாக்கி
அளவெடுத்தது போல் நாசியாக்கி
சந்தன கிண்ணத்தை கன்னமாக்கி
பவளக் கொடியை இதழாக்கி
முத்துச்சரத்தை பல்வரிசையாக்கி
முரட்டுக்காளையின் திமிரை திமிலாக்கி

இல்லாததை இடையாக்கி
நீளக் குழல் விளக்கின் பளபளப்பை வழவழப்பை கால்கலாக்கி
படைக்கப்பட்ட இவள்
இந்த பருத்தி சேலையை
உடுத்தப் போகும் சேதியறிந்து தான்.
விதைத்தவனும், மழையும்,நெசவாளியும்
மகிழ்ந்து பணி புரிந்தார்களோ?
என்று எண்ணிய பருத்தி
இவள் உடுத்தியவுடன்
அலைந்து திரிந்து
பட்ட ரணம் மாறி
சுகப்பட்டது
இவள் வசப்பட்டது


பருத்தி சேலையில்
இவளை பார்த்த பட்டுப்பூச்சியோ
பட்டிற்கு பதிலாக
பருத்தி எடுக்க செய்த
முயற்சி தோற்றதால்
மாய்த்து கொண்டது பரிதாபம்.

புவியில் இவள் லட்சத்தில் ஒருத்தி
இங்கோ இன்னும் ஒருத்தி
பெண்களால் பூமி அழகாகிறது
தமிழச்சியோ அழகிற்கு அளவாகிறாள்.
பிறரெல்லாம் அழகு படுத்தி கொள்கிறார்கள்
இவளோ அழகாகவே பிறக்கிறாள்    
பிறர் அழகாய் தெரிய
பட்டும் துட்டும் தேவை
தமிழச்சிக்கோ
பக்கத்து தெரு
மூன்றாம் வீட்டு கிழவன்
பழைய தறியில் நெய்யும்
பருத்தி சேலை போதும்
பருத்தி என்று அல்ல
இவள் உடுத்தி கொள்ளும்
எல்லாம் இவளால் அழகாகிறது



பெண் எப்பொழுது முழுமையான பெண்ணாகிறாள்?
கேட்டுப் பாருங்கள் சொல்வார்கள்.
தாயாகும் போது என்று.
இருக்கலாம்.
அது பொதுவான உண்மையாக இருக்கலாம்.
அதே பெண் இங்கே
நம் தமிழ்நாட்டில் பிறந்தால்
பிறக்கும் போதே முளுமையாகிறாள்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

Minmalar said...

why this கொலவெறி!

மனசாலி said...

\\\Minmalar said...

why this கொலவெறி!///


முழுசா ஒரு டாக்டர் ஆகணும்னா நூறு பேர கொன்னா தானே முடியும்.

சசிகலா said...

உண்மை தான் தமிழ் பற்று இன்னும் அழகாக

Minmalar said...

தமிழ்மணம் Top Tamil Blogs of 2011 ல்
முதல் 100 இடங்களுக்குள் மனசாலி வந்ததிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மனசாலி said...

நன்றி மின்மலர்

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்!பஞ்சை அழகாய் நுாலாக்கிபாடு பட்டுத் துணியாக்கிநஞ்சை புஞ்சை கண்மணிகள்நாடும் வண்ண உடையாக்கிதஞ்சைக் கோயில் உயரமெனத்தந்த தமிழை என்னென்பேன்!நெஞ்சைக் கவரும் கவிதையினைநெய்த உன்னை வாழ்த்துகிறேன்!கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சுkambane2007@yahoo.fr

http://bharathidasanfrance.blogspot.com/ said...
This comment has been removed by the author.
http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்!பஞ்சை அழகாய் நுாலாக்கிபாடு பட்டுத் துணியாக்கிநஞ்சை புஞ்சை கண்மணிகள்நாடும் வண்ண உடையாக்கிதஞ்சைக் கோயில் உயரமெனத்தந்த தமிழை என்னென்பேன்!நெஞ்சைக் கவரும் கவிதையினைநெய்த உன்னை வாழ்த்துகிறேன்!கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சுkambane2007@yahoo.fr