இந்த இடுகை ஒரு பயனுள்ள இடுகையாக இருக்கும் என்று நம்பி இதை எழுதுகிறேன்.
முதலில் ஒன்றை சொல்லி விடுகுகிறேன் இது பெண்டியம் 3 கணினி வைத்திருப்பவர்களுக்கு எனவே மற்றவர்கள் ஜூட் .
முதலில் நாம் கவனிக்க வேண்டியது கணினியின் நினைவகம். பொதுவாக 128MB வைத்திருப்போம் அதிகம் போனால் 256 . நாம் முதலில் இதை மாற்ற வேண்டும் SD RAM இன்று சந்தையில் கிடைப்பது அரிதாகிவிட்டது. அப்படியே கிடைத்தாலும் அதன் விலை கூடுதலாக இருக்கும் எனவே நாம், இப்பொழுது சந்தையில் நடைமுறையில் உள்ள DDR2 அல்லது DDR3 நினைவகத்தை வாங்கிக் கொள்வோம்.
உதாரணமாக DDR2 2GB வாங்குவதாக வைத்துக்கொள்வோம். விலையும் மலிவாக இருக்கும் கொள்ளளவும் கூடுதலாக இருக்கும். இப்பொழுது வீட்டிற்கு வந்து நம் கணிப்பொறியில் அதை எப்படி பொருத்துவது என்று ஒரு சிறிய விளம்பர இடைவெளிக்கு பின் பாப்போம்.
இப்பொழுது ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் இரண்டு நினைவகங்களும் அளவிலும் அமைப்பிலும் வித்தியாசமாக இருக்கும். நாம் புதிதாக வாங்கிய நினைவகத்தை நம்மிடம் உள்ள பழைய அம்மா வாரியத்தில் (மதர் போர்டு) இணைக்க முடியாது. எனவே நாம் DDR2 நிறுவ அதற்குறிய புதிய அம்மா வாரியத்தை வாங்க வேண்டும்.
சந்தையில் DDR2 பொருந்த கூடிய அம்மா வாரியம் பல கிடைக்கிறது. பற்பல நிறுவனங்கள் இதை தயாரிக்கின்றன. ஏதேனும் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பெண்டியம் பொருந்த கூடிய வாரியத்தை வாங்குங்கள். இதை எப்படி நம் கணினியில் நிறுவுவது என்பதை அடுத்த பாராவில் பாப்போம்.
நாம் ஏற்கனவே வாங்கிய பழைய DDR2(சர்விஸ் ஆளுங்க அப்படி தான் சொல்லுவாங்க) நினைவகத்தை நாம் புதிதாக வாங்கிய அம்மா வாரியத்தால் சுலபமாக பொருந்தும் அடுத்து நாம் செய்ய வேண்டியது அதன் செயலியை இணைப்பது. புதிய வாரியத்தில் செயலி வைக்கும் இடம் சிறிதாக இருக்கும் நம்முடைய பழைய வாரியத்தில் உள்ள செயலி பெரிதாக இருக்கும். எனவே நாம் இப்பொழுது புதிய வாரியத்தில் பொருந்த கூடிய செயலியை வாங்க வேண்டும்.
நல்ல வேலையாக நம் வாரியம் DUAL CORE செயலி பொருந்துவதாக இருப்பதால் நாம் சில ஆயிரங்களை மிச்சப் படுத்தலாம். அடுத்த படியாக நாம் மாற்ற வேண்டியது எஸ் எம் பி எஸ். இப்பொழுது நாம் எல்லா மென் பொருளையும் நம் வன்தட்டில் நிறுவி பயன் படுத்தலாம்.
இப்பொழுது அதன் வேகத்தை பாருங்கள். யாரிடமாவது இது P3 என்றாம் நம்பவே மாட்டார்கள்.
நாம் மீண்டும் ஒரு நாளில் சைக்கிளை எப்படி காராக மாற்றுவது என்று பாப்போம்.
12 comments:
பயனுள்ள தகவல்.
அடங்கொய்யாலே!P3 யை தூக்கிப்போட்டுட்டு Dual core வாங்குன்னு சொல்ல வேண்டியது தான!'அம்மா வாரியம்'னு பூச்சாண்டி காட்டினா பயந்துருவோமா?
சரி தான்... ஒரே வரியில் எழுத வேண்டியதை இப்படி கட்டுரையாக போடலாமா? உங்க கிட்ட மைக் மட்டும் கிடைச்சுச்சு என்ன பண்ணுவீங்க அப்படின்னு நினைச்சுகிட்டு இருக்கேன்
இவ்வளவு சீரியஸா மொக்க போட்ர ஆள நான் பார்த்ததே இல்ல பாஸ்..
Arun J Prakash said...
யாருக்கு?
Minmalar said...
அடங்கொய்யாலே!P3 யை தூக்கிப்போட்டுட்டு Dual core வாங்குன்னு சொல்ல வேண்டியது தான!'அம்மா வாரியம்'னு பூச்சாண்டி காட்டினா பயந்துருவோமா?
நீங்கள் ஒன்றை கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன் நண்பரே. நாம் பழைய மந்திரி சபையை (cabinet) மாற்றாமல் தான் உபயோகிக்கிறோம். எனவே இது பழைய கணினியே.
suryajeeva said.
அப்போ இது உபயோகமான தகவல் இலையா?
Mohamed Faaique said..
என்ன ரொம்ப நாளா ஆளக் காணோம்.? எங்கே போனீங்க? (இந்த கேள்விய நீங்களும் கேட்கலாம்)
mokkka....
don't waste our valuable time....
try good informative post...
Ganesh said...
கோபித்து கொள்ளாத அண்ணா. சும்மா ஒரு ஜாலிக்கு தானே. எல்லாமே 'சீரியஸா' எழுதணுமா 'சிரியஸா' அப்போப்போ எழுதக்கூடாதா?
கொஞ்ச நாள் பொறுங்க....அப்புறம், //முதலில் ஒன்றை சொல்லி விடுகுகிறேன் இது இன்டெல் core i3 கணினி வைத்திருப்பவர்களுக்கு எனவே மற்றவர்கள் ஜூட்// என்று சொல்வீங்க!!
என்னதான் சொல்ல வரிங்க
Post a Comment