சங்கமத்தில் சங்கமிக்க வேண்டும் என்று அதிகமான ஆவலில் இருந்தேன். வேலை பளு காரணமாக வர இயலாத சூழல். எனவே இங்கிருந்தே சங்கமம் சிறக்க வாழ்த்துகிறேன். சங்கமத்திற்கான முயற்சி எடுத்தவர்களுக்கு நன்றி. சென்னையில் பதிவர்கள் சந்தித்து கொள்ளும் போது 'மதுரையில் இது போல்' ஒரு சந்திப்பை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். நண்பர்கள் துணையுடன் 11-11-11 அன்று சங்கமிக்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. மீண்டும் சிறிது நாட்களுக்கு பிறகு முயலலாம் என்று தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றோம்.
மதுரை பதிவர்கள் சந்திப்பு பற்றி யோசிக்கும் போது. ஏன் சந்திக்கிறோம்? எதற்காக சந்திக்கிறோம்? என்பதே முக்கிய யோசனையாக இருந்தது. நட்பு வட்டம் பெருகும் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அதற்கும் மேலாக எதாவது இருக்க வேண்டும் அல்லவா? மதுரை பதிவர்கள் சந்திப்பில் கை கோர்ப்பவர்களிடம் கலந்து ஆலோசிக்கலாம் என்றிருந்தோம்.
இங்கேயும் எனக்கு இதே கேள்வி. ஈரோடு சங்கமத்தில் என்ன செய்யப் போகிறார்கள்?
நான் எதிர்பார்ப்பது.
- முக்கியமா சண்டை போடாம இருங்க.
- யாராவது உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா என்று போர்ட் கொண்டு வந்தா. என்ன? ஏது?னு விசாரிங்க. ஏன் என்றால் இங்கே உதவனுமானு கேட்கிறவங்க யாரும் இல்லை.
- புதிதாக கிடைத்த பதிவு நண்பர்கள உங்க பதிவுக்கு ஒட்டு போட மட்டும் உபயோகப் படுத்தாதீங்க.(படுத்தாதீங்க)
- முக்கியமா பதிவர்கள் பதிவு மூலமா எதாவது 'வருமானம்' வர்ற வழி இருந்தா பகிர்ந்துக்கோங்கோ. அதை சங்கமத்திற்கு வராதவர்களுக்கும் சொல்லுங்க.
- சங்கமம் நடத்துபவர்கள் ஈரோடுக்காரர்கள் 'விருந்தோம்பலுக்கு' பேர் போனவர்கள். வந்தவர்கள் மனம் நோகாமல் சங்கமத்தை சிறப்பாக நடத்துவார்கள் என்று எல்லோரும் அறிவார்கள். அவர்களை ஏதாவது ஒரு விதத்தில் சந்தோச படுத்துங்கள்.
நன்றி
நிறைந்த மனதுடன்
மனசாலி
4 comments:
மதுரையில சந்திப்பா? தள்ளிப் போச்சா?தள்ளி வச்சிருக்கிங்களா?
அறிந்து கொண்டேன் நன்றி.......
\\\தமிழ்வாசி பிரகாஷ் said... மதுரையில சந்திப்பா? தள்ளிப் போச்சா?தள்ளி வச்சிருக்கிங்களா? அறிந்து கொண்டேன் நன்றி.......///
உங்கள் பின்னுட்டத்தின் தொனி புரிகிறது. உண்மை தான். உங்களை போன்ற மூத்தவர்களிடமும் கொஞ்சம் கலந்திருக்கலாம்.
சங்கமம் சிறக்க நானும் வாழ்த்துகிறேன்.
விருந்தோம்பலுக்கு' பேர் போனவர்கள் என்று நிருபித்து விட்டார்கள்
Post a Comment