Friday, July 13, 2012

திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்தினால் உலகம் அழிவது உறுதி.

உலகத்தின் அழிவை பற்றி பலர் பல விதமாக சொல்லி இருக்கிறார்கள். சமிப காலமாக உலகம் அழியப் போகிறது என்று பொத்தாம் பொதுவாக சொல்லி கொண்டு இருந்தது போய் மாயன்கள்  புண்ணியத்தில் உலகம் அழியும் நாளிற்கு தேதியும் குறித்து விட்டோம். இதனால் பலர் பீதியில் இருப்பது உண்மையே.சிலர் தனக்கு பயமில்லை என்று சொல்லி கொண்டு பயப்படுபவர்களை   கேலி பேசினாலும் உள்ளுக்குள் பயந்து கொண்டு தான் இருக்கிறார்கள். 

காலம் காலமாக நம்மை பயமுறுத்தும் புண்ணியவான்கள் யார்?

இதை போல் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதன் காரணகர்த்தா யார் என்று பார்த்தால் அதில் முதல் இடத்தில் வருவது Nostradamus.

அவர் பூகம்பம்,சுனாமி,வெள்ளம்,புயல்,சுழற்காற்று,பஞ்சம் போன்ற காரணிகளால் உலகம் அழிவை நெருங்கும் என்கிறார். யோசித்து பார்த்தால் இவை யாவும் இப்பொழுது அதிகமாகவே இருக்கிறது.


அடுத்து கிறிஸ்தவம் . இதன் படி ஏற்கனவே ஒரு முறை உலகம் நீரினால் அழிந்து விட்டது. 2012 ல் சூரிய வெப்பம் அதிகமாகி அதனால் ஏற்படும் வெப்பத்தால் பெரும் நாசம் உண்டாகி உலகம் அழியும்.

அடுத்து இந்து மதம். நாம் இப்போது இருப்பது கலி காலம். கலி காலம் என்பது கடைசி காலம்.

சமிபமாய் மாயன்கள்  'எல்லா கிரகமும் 2012 டிசம்பர் 21 அன்று எல்லா கோள்களும் நேர் கோட்டில் சந்திக்க இருப்பதால் காந்த சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு உலகம் அழியும்' என்று சொல்கிறார்கள். இவர்களும் பூமியின் அழிவு புதிதல்ல என்று கூறுகிறார்கள்.


இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா?

இருக்கிறது. மிகவும் சுலபமான வழி .


குபேரனிடம் கடன் வாங்கிய திருப்பதி எழுமலையான் இத்தனை நாள் வட்டி கட்டி வந்தாராம், இப்பொழுது குவியும் காணிக்கையால் கொஞ்சம் கொஞ்சமாக அசல் கட்ட தொடங்கி இருக்கிறாராம். அவர் அசல் முழுவதையும்  கட்டி விட்டார் என்றால், உலகம் அழிந்து விடுமாம்.

இதனால் தெரிவிப்பது  என்னவென்றால் இனி திருப்பதிக்கு காணிக்கை செலுத்தாமல் இருந்தால் நாம் உலகத்தில் அழிவில் இருந்து தப்பிவிடலாம்.
(எவ்வளவோ நம்பியாச்சு இத நம்ப மாட்டோமா?)

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

அருணன் கோபால் said...

இது என்ன புதுவிதமாக இருக்கின்றது ? எப்படியோ திருப்பதிக் காரன்களோட பிழைப்பில் கைவைத்து விட்டீர்கள் !!!

கோவை நேரம் said...

ஏற்கனவே பத்பநாபா கோவில் தான் அதிக பணக்கார கோவில் பேரு வாங்கிடுச்சு..இனி திருப்பதில வசூல் வேட்டை குறைய போகுது...

Cpede News said...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

Cpede News said...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

இராஜராஜேஸ்வரி said...

எவ்வளவோ நம்பியாச்சு இத நம்ப மாட்டோமா?

s suresh said...

அடடே! இது புதுசா இருக்கே!

senthil kumar said...

??? ????????? ?????? ????? ??????????? ?????? ???? ?????????? ??????? ????? ????????? ????? ?????? ??????????? ???????????????? ??????? ??????????.

senthil kumar said...

ஏன் ஜெருசேலம் மெக்கா போன்ற இடங்களுக்கு போனால் உலகை காப்பாற்றி விடலாமா ஏண்டா பரதேசிகளா இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கின்றிர்களா போங்கடா பன்னாடைகளா

போதிவனம் said...

சபிச்சிட போறார்( நம்ம வெங்கி அல்ல .நம்ம குருக்கள்)

திண்டுக்கல் தனபாலன் said...

புதிய தகவலா இருக்கே...
பகிர்வுக்கு நன்றி...

Anonymous said...

மிதம் மிஞ்சிய உங்கள் அறிவி(லியி)னால் நான் வியந்து விட்டேன்... மதத்தை கூறி விஷத்தை யார் மனதிலும் விதைக்க வேண்டாம் பதிவாளரே.

Manickam sattanathan said...

இதுபோன்ற பதிவினை இட வேறு தெய்வங்களோ அல்லது வேறு கடவுளரே உமக்கு கிடைக்க வில்லையா? இந்துகடவுள் என்றால் அவர் கண்டுகொள்ளமாட்டார் என்ற எண்ணமா ?ஸ்டுபிட்.

சிரிப்புசிங்காரம் said...

இது ஏதோ நாத்திகனுங்களோ இல்ல ஹிந்து மதத்துமேல பொறாமை கொண்ட வேற்று மதத்துக் காரனுங்களோ கட்டிவிட்ட கதைமாதிர் இல்ல இருக்கு....

சிரிப்புசிங்காரம் said...

இது ஏதோ நாத்திகனுங்களோ இல்ல ஹிந்து மதத்துமேல பொறாமை கொண்ட வேற்று மதத்துக் காரனுங்களோ கட்டிவிட்ட கதைமாதிர் இல்ல இருக்கு....

Good citizen said...

இது ஏதோ நாத்திகனுங்களோ இல்ல ஹிந்து மதத்துமேல பொறாமை கொண்ட வேற்று மதத்துக் காரனுங்களோ கட்டிவிட்ட கதைமாதிர் இல்ல இருக்கு....

அரம்பிச்சிடான்கயா !!!!
எற்கனவே செந்தில் குமாரு கொதிச்சி பொயிட்டாரு
எல்லா மதத்திலும் இருக்கிற கேனத்தனங்களையும் எப்போடா விடப்போறிங்க