Thursday, February 17, 2011

பத்திரிகைகள் ஏன் அமைதி காத்தன?

நெஞ்சத்தை கிள்ளாதே
              நான் என்னுடைய 10வது வயதில் பார்த்த படம். சுஹாசினி நடித்த முதல் படம். கிரேட் மகேந்திரன் இயக்கத்தில் அருமையான படம். ஒரே ஒரு முறை தான் பார்த்திருப்பேன். என் நெஞ்சில் பச்சக் என்று ஒட்டி கொண்டது. 30 வருடம் கடந்த பின்னும் பல காட்சிகள் எனக்கு நினைவில்  உள்ளது. அதுவும்  சுஹாசினியின் துடுக்குத்தனம்.
         அதில் பலருக்கும் பிடித்த 'பருவமே' பாடலை விட எனக்கு 'உறவெனும் புதிய வானம்'  நல்லதொரு தாலாட்டாக இருந்திருக்கிறது. அதுவும் அந்த ஹம்மிங் வாவ் அதை எப்படி சொல்வது.


            கதை சுருக்கம் (என் ஞாபகத்தில் உள்ளவை)

               சுகாசினி துடுக்குத்தனம் நிறைந்த பெண். அவள் ஏழை மெக்கானிக் மோகனை காதலிக்கிறாள். அவளுடைய அண்ணனின் நண்பன் பிரதாப் போத்தன் ஒரு போட்டோகிராபர் .அவன் அவளின் சுட்டித்தனத்தால் அவளை ரசிக்கிறான். இவ்வேளையில் மோகன் சுகாசினியை சந்தேகப்படுகிறான். எனவே அவள் அவனை வெறுத்து அண்ணனின் ஆலோசனைப்படி பிரதாப்பை திருமணம் செய்து கொள்கிறாள். அவர்கள் வேறு ஊருக்கு மாறி விடுகிறார்கள். 
          
           இருவரும் வெளி உலகிற்கு தம்பதிகளாகவும், வீட்டில் வேறு விதமாகவும் வாழ்கிறார்கள். சுஹாசினி துடுக்குத்தனம் இல்லாமல் அமைதியாகவே இருக்கிறாள். பிரதாப் அவளுக்கு உபசரிக்கிறான். நாட்கள் செல்ல செல்ல பிரதாப் மீது அவளுக்கு காதல் வருகிறது. அனால் அதை அவள் வெளியே சொல்லாமலே இருக்கிறாள். இருவரும் பிரிந்து விடுவோம் என்று முடிவு செய்கிறார்கள். க்ளைமாக்சில் ஏர்போர்டில் கடைசி சமயத்தில் ஒன்று சேருகிறார்கள். ( இந்த படத்தின் கதையை நன்று தெரிந்தவர்கள் அதை பின்னுடமாகவோ அல்லது அவர்களின் ப்ளாகிலோ எழுதுங்கள் )
            
       நெஞ்சத்தை கிள்ளாதே வெளி வந்த சில வருடங்களுக்கு பிறகு வேறு ஒரு திரைபடத்தை பார்த்தேன்.  இதிலும் நாயகி துடுக்குத்தனம் நிரந்த பெண். அவள் திருமணத்தை வெறுக்கிறாள் . வீட்டில் ஒருவனை அவளுக்கு மனம் முடிக்கிறார்கள். அவன் நல்ல நிலையில் டெல்லியில் வேலை பார்க்கிறான். நெஞ்சத்தை கிள்ளாதே போலவே இதிலும் இவர்கள் வெளி உலகிற்கு தம்பதிகளாகவும், வீட்டில் வேறு விதமாகவும் வாழ்கிறார்கள். நெஞ்சத்தை கிள்ளாதே போலவே கணவன் அவளுக்கு உபசரிக்கிறான். இவள் ஏன் இவ்வாறு இருக்கிறாள் என்று ஒரு பிளாஷ் பேக் வருகிறது. அதில் நாயகி ஒருவனை காதலிக்கிறாள் . நெஞ்சத்தை கிள்ளாதே போல அவளுடைய காதலன் மெக்கானிக் அல்ல .ரௌடி.  ஒரு சமயம் நடந்த ஒரு வன்முறையில் போலிஸ் ரௌடியை தேடுகிறது. 
     இந்த சமயத்தில் இவர்கள் திருட்டு கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். நாயகி பதிவு அழுவலகத்தில் காத்திருக்கிறாள் . போலிசிடமிருந்து தப்பித்து வரும் போது நாயகியின் கண் முன்னே அவனை போலிஸ் சுட்டு கொள்கிறது. இத்துடன் பிளாஷ் பேக் முடிகிறது.  
          நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் காதலன் சந்தேகப்படுகிறான். இதில் காதலன் சாகிறான். வித்தியாசம் அவ்வளவே. பின்னர் நெஞ்சத்தை கிள்ளாதே போலவே நாட்கள் செல்ல செல்ல கணவன் மீது அவளுக்கு காதல் வருகிறது. அனால் அதை அவள் வெளியே சொல்லாமலே இருக்கிறாள். இருவரும் பிரிந்து விடுவோம் என்று முடிவு செய்கிறார்கள். க்ளைமாக்சில் புகை வண்டி நிலையத்தில் கடைசி சமயத்தில் ஒன்று சேருகிறார்கள். சிகப்பு நிறத்தில் உள்ளதை நான் copy paste செய்து இரண்டு இடத்தில மட்டும் மாற்றம் செய்திருக்கிறேன்.
         நான் இரண்டாவதாக பார்த்த படத்தை பெரும்பாலும் எல்லாரும் கண்டு பிடித்து இருப்பீர்கள் . ஆமாம் அது இந்தியாவின் மிகப்பெரும் இயக்குனர் என்று (அப்படியா) மார்க்கெட் உத்தியின் மூலம் சொல்லப்படும் மணிரத்னம் இயக்கிய மௌன ராகம். 

            மௌன ராகம் வெளி வந்து இன்று வரை இதை எந்த அச்சு ஊடகமோ அல்லது வேறு வகை ஊடகமோ சொல்ல வில்லை . அது ஏன் என்று புரியாத புதிராகவே இருக்கிறது. சொல்லவில்லை என்பதை விட தலையில் தூக்கி வைத்து ஆடுகிறது.
           காரணம் தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

பனிமலர் said...

மணிரத்தினம் எடுக்கும் அத்துனை படங்களும் ஏதாவது ஒரு படத்தின் திரைகதையை அப்படியே தமிழில் மாற்றி இருக்கிறார் என்று தான் இன்று வரை நினைத்தேன். உதாரணமாக அவரது கடைசி தாயாரிப்பான இராவணன் பிரஞ்சு கதையை அப்படியே ஈ அடிச்சான் பிரதி எடுத்து வைத்திருப்பார். எனது பதிவில் விபரமாக எழுதியுள்ளேன். ஆனால் தமிழ் படத்தில் இருந்து கூடி திருப்பி அடித்து இருக்கிறார் என்று நினைக்க இல்லை.

சேக்காளி said...

வானத்தை போல படத்திற்கும்- ஆனந்தம் படத்திற்கும் என்ன வித்தியாசம்.காக்கி சட்டை படத்திற்கும் போக்கிரி படத்திற்கும் என்ன வித்தியாசம். வசீகரா படத்திற்கும் காவலன் படத்திற்கும் என்ன வித்தியாசம்.குறிப்பாக ஜோடி-பூவெல்லாம் கேட்டுப்பார்-மின்சார கண்ணா படங்களுக்கிடையே என்ன வித்தியாசம்?

MANASAALI said...

////வசீகரா படத்திற்கும் காவலன் படத்திற்கும் என்ன வித்தியாசம்////


நிச்சயிக்கப்பட்ட பெண் நாயகனை காதலிக்கிறார் என்பதை விட ஒற்றுமை என்ன இருக்கிறது? அப்படி பார்க்கபோனால் 'மின்னலே,காதல் மன்னன் எல்லாம் ஒரே படமா?

நிலா said...
This comment has been removed by the author.
நிலா said...

நல்ல பகிர்வு also please change your blog archive type (by month). it'll help to read old posts.

MANASAALI said...

நிலா said... நல்ல பகிர்வு also please change your blog archive type (by month). it'll help to read old போஸ்ட்ஸ்

வருகைக்கு நன்றி.
மாற்றிட்டேன்
அப்புறம் உங்களுக்கு ஒரு சின்ன தகவல் என் மகள் பெயர் நிலா.