வணக்கம். இது எனது முதல் ப்ளாக். எனது நடை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை . இது வரை வாசகனாக மட்டுமே இருந்திருக்கிறேன் . முதல் முறையாக எழுதுகிறேன். தவறு இருந்தால் தயவு செய்து சுட்டி காட்டவும். நன்றி
இரண்டு நாட்களுக்கு முன்பு டிவியில் சீடன் ட்ரைளர் பார்த்தேன். பார்த்தவுடன் அது நான் ரசித்த மலையாள சினிமாவான நந்தனம் படத்தின் தமிழ் பதிப்பு என்று தெரிந்தது . ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த படம். இன்றும் நந்தனம் படத்தின் பாடலை கேட்கும் போது என்னையும் அறியாமல் நான் அதனுடன் ஒன்றி விடுவேன். அதில் ப்ரித்விராஜ் , நவ்யா நாயர் இருவரும் அறிமுகம் ஆனார்கள் என்று நினைக்கிறன் . நவ்யா அதில் கொள்ளை அழகாக இருப்பார்.
கதை
அனாதை பெண்ணான நவ்யா குருவாயூரில் வீட்டு வேலை பார்க்கும் பெண். அவள் ஒரு கிருஷ்ணன் பக்தை. அவள் குருவாயூர் கோவிலுக்கு போக நினைக்கும் போது எல்லாம் எதாவது ஒரு தடை வந்து விடும் அவளால் . கோவிலுக்கு செல்ல முடியாது. அவள் வேலை பார்க்கும் வீட்டில் ஒரு வயதான அம்மா மட்டும் இருப்பார். அந்த அம்மாவின் செல்ல வேலைகாரியாக நவ்யா இருப்பார். நன்றாக பாடுவாள். விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் பேரன் ப்ரித்விராஜ் நவ்யாவை காதலிப்பார் (வேற என்ன பண்ணுவாங்க)

அனால் அவனுக்கு அம்மா ரேவதியின் கட்டாயத்தால் வேறு ஒரு பெண்ணிற்கு நிச்சயம் ஆகிறது . நவ்யாவால் ஒன்றும் செய்ய இயலாத நிலை. இந்த சமயத்தால் நவ்யாவின் பால்ய காலத்து நண்பனும் ஊரிலிருந்து வருகிறான். நவ்யாவின் நிலையை அறிந்து அவன் அவளுக்கு உதவி செய்கிறான் . அவனின் உதவியால் நவ்யவிற்கும் ப்ரித்விரஜ்ஜிற்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது. இதற்கு நன்றி சொல்ல அவள் அவன் நண்பனை பார்க்க அவன் வீட்டிற்கு செல்கிறாள். நண்பனின் அக்காவிடம் நண்பன் எங்கே என்று கேட்கிறாள் . உள்ளே இருப்பதாக சொல்லி அவனை அழைத்து வர செல்கிறாள். வரும் போது ஒரு புதியவனை அழைத்து வருகிறாள். இவன் தான் என் தம்பி என்று சொல்கிறாள். அனால் இது வரை அவனிடம் பழகியதும் அவளுடைய காதலுக்கு உதவியதும் வேறு ஒருவன். அவன் யார் என்று இவளுக்கு தெரியவில்லை . அதன் பின் அவன் வருவதுமில்லை . ப்ரித்விராசுடன் திருமணம் நடக்கிறது. குருவாயூர் கோவிலுக்கு செல்கிறார்கள்.வழக்கம் போல் இவளால் உள்ளே செல்ல முடியவில்லை. காரணம் யாரோ ஒரு மந்திரி கோவிலுக்கு வருவதால் பொது மக்களை அனுமதிப்பதில்லை என்று . இவள் கோவில் வெளியே நின்று சாமி கும்பிடுகிறாள். அப்பொழுது நவ்யாவின் காதலுக்கு உதவியவன் கோவில் உள்ளே இருந்து இவளுக்கு கை காட்டுகிறான். அப்படியே கர்ப்ப கிரகத்தின் உள்ளே சென்று மறைகிறான். படம் முடிகிறது.
பல நல்ல மலையாள படங்கள் தமிழுக்கு வரும் போது. அதன் தரத்தை அது இழக்கிறது . உதாரணம் : முத்து , சந்திரமுகி , சுந்தரா ட்ராவல்ஸ் , குசேலன், காவலன்.
இப்பொழுது சீடன் வருகிறது .எப்படி இருக்க போகிறதோ ? . நந்தனம் பார்க்கும் போது இது போல ஒரு படத்தை நிச்சயமாக தமிழில் யோசனை கூட பண்ண மாட்டார்கள் என்று நினைத்தேன். நந்தனம் ரீ மேக் பண்ண நினைத்தவர்கள் நிச்சயம் அதன் பாடலை கேட்காமல் இருக்கா மாட்டார்கள். தினாவால் நந்தனம் பாடலை போல மனதை வருடும் பாடலை கொடுக்க முடியாது. கொடுத்தாள் மகிழ்ச்சி. முடியவில்லை என்றால் அதே பாடலை கூட பயன் படுத்தலாம். தமிழில் கீழ் கண்ட படங்களை ரீ மேக்கிடலாம்.
௧. மீச மாதவன்
௨ பெருமழக்காலம்
௩ மம்மி அண்ட் மீ
௪ கல்யாணராமன்
௫ யாத்ராகரோடசுரத்தைக்கு
1 comments:
ஒரு கூடுதல் செய்தி தமிழில் தனுஷ் கிரிஷ்ணர்க்கு பதிலாக முருகனாக நடிக்கிறார்.
Post a Comment