நாம் சில படங்களை மிகவும் மோசமான திரையரங்கில் சென்று பார்க்க வேண்டியிள்ளது. சமிபத்தில் வாடா போடா படத்தை மதுரை அலங்கார் தியேட்டர் சென்று பார்க்க வேண்டி இருந்தது. உன்னை யார் அந்த படத்திற்கு போக சொன்னா? அதுவும் அலங்கார்ல என்று நண்பர்கள் கேட்டார்கள். நானும் ஒரு பதிவர் ஆகி விட்டேன் என்றெல்லாம் அவர்களிடம் சொல்லவில்லை. தமிழகத்தின் புதிய திரைப்படத்தின் கட்டண கொள்(கை)ளையால் டிக்கெட் விலை 50 ரூபாய் . 50 ரூபாய் அதிகம் என்று நான் நினைக்கவில்லை . பிக் சினிமா கணேஷில் 40 ரூபாய் தான் . ஆனால் 60 கூட கொடுக்காலாம். (சமிபத்தில் அர்ஷில் 85 கொடுத்து பயணம் போனேன் . சுகமான பயணமாக இருந்தது) எனவே நான் சொல்வது என்னவென்றால் விலை முக்கியம் இல்லை. அதற்கேற்ற வசதி தான் நான் விரும்புவது.
சரி நாம் அலங்காருக்கு வருவோம் . திரையரங்கில் கூட்டம் கிடையாது. ஆங்காங்கு சிலர் அமர்ந்து இருந்தார்கள். அதில் அனேகர் ஹோமோ பார்டிங்க. பெரும்பாலும் உள்ளே இருந்தவங்க எல்லாம் பொட்டலம் அடிக்கிறவங்க. தியேட்டர் முழுவதும் கஞ்சா மணம்(நாற்றம்). நான் தனியாக தான் படம் பார்க்க போயிருந்தேன். நான் புகை பழக்கத்தை நிறுத்தி 9 ஆண்டுகள் ஆகி விட்டது. நான் புகைத்த போது கூட பொது இடத்தில புகைக்க மாட்டேன்( சாலையை சொல்லவில்லை) .
படம் முடியம் கடைசி நிமிடம் வரை கூட தியேட்டரை சேர்ந்த பணியாளர்கள் யாரும் வரவில்லை . இது போன்ற திரையரங்கு உரிமையாளர்கள் தயவு செய்து டிக்கெட் விலையை 200 ரூபாயாக உயர்த்துங்கள். அப்போது தான் என் போன்றவர்கள் உங்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள். ஹோமோ பார்டிங்க எப்படியும் வந்துடுவாங்க. என்னை போன்றவர்கள் வராமல் இருந்தால் அவர்கள் நிம்மதியாக அவர்கள் வேலையை செய்வார்கள் . ஆண் பாவம் பொல்லாதது. வீனா பல ஆண் ஜோடிகள் பாவத்தை சம்பாதிக்காதீங்க .
என்ன? படம் எப்படி இருக்கா? உண்மையை சொன்னா படம் பரவாயில்லை . ஒரு தடவை பார்க்கலாம். டைரக்ஷன் சொதப்பல். மத்தபடி பரவாயில்லை.
0 comments:
Post a Comment