Tuesday, July 12, 2011

பள்ளிக்கூட கட்டணம்- அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது?

பள்ளிக்கூட கட்டணம்- அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது?



என் மகள்  மதுரையில் தனியார்  பள்ளியில் படித்து கொண்டு இருக்கிறாள். சென்ற ஆண்டு இறுதி தேர்வு முடிந்தவுடன் இந்த ஆண்டிற்கான கட்டண விபரங்களையும் புத்தகம் மற்றும் நோட்டிற்கான தொகையையும் எழுதி அனுப்பி இருந்தார்கள் ( எந்த கமிஷன் வந்தால் என்ன) காலாண்டு கட்டணம் -2000 ; சிறப்பு கட்டணம்- 3000 ;அப்புறம் புத்தகம் மற்றும் பேருந்து கட்டணம். பிறகு ஆட்சி மாறியது. அரசு நிர்ணயித்த கட்டணம் மாறியது .ஆனால் இவர்கள் எதையும் மாற்ற வில்லை . கேட்டால் அரசு கட்டணம் எல்லாம் கிடையாது . நாங்கள் நிர்ணயித்ததை தான் நீங்க கட்ட வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.
சரி   காலாண்டு கட்டணம் -2000 என்பதை ஏற்று கொள்கிறோம். அது என்ன சிறப்பு கட்டணம். என்று கேட்டால் அது தான் அவர்கள் பள்ளி நடத்த உதவுகிறதாம். என் மகள் படிக்கும் பள்ளியில் pallikalvi .com  தகவலின் படி 2394 மாணவர்களும் 75 ஆசிரியர்களும் உள்ளனர். ஒரு வருடத்திற்கு சராசரியாக அவர்கள் ஒவ்வொரு மாவர்களிடம் இருந்து 13,௦௦௦ வசூலிகின்றனர்.   13000 x 2394 =  31122000  அதாவது மூன்று கோடியே பதினோரு இலட்சத்து இருபத்தி இரண்டாயிரம் ரூபாய்  வசூலிகின்றனர்.
75  ஆசிரியர்கள் மற்றும் 33 இதர பணியாளர்கள் ஆக மொத்தம் 108 பணியாளர்கள் . இவர்களுக்கு சராசரி சம்பளம் 4000 என்று வைத்து கொண்டால் வருடதிற்கு  48000 மொத்தம்  5184000 ரூபாய் கொடுக்கிறார்கள். பள்ளியை பொறுத்த வரை எல்லாவற்றிலும் கமிசன் தான் இருக்கும் என்று தெரியும். அதை எல்லாம் நாம் கணக்கில் எடுக்க வேண்டாம். மேலும் கரண்ட் செலவு பார்த்தால் மாதம் 2000 யூனிட் என்று வைத்து கொண்டால் கூட வருடத்திற்கு 16000  யூனிட் ( பள்ளி விடுமுறை நாட்கள் நீங்கலாக) ஒரு யூனிட்டிற்கு 480 காசுகள் (ஆதாரம்:  தமிழக அரசு மின் வாரிய இணையதளம்) 76800 ருபாய் .பிற சிலவினங்கள் 15 இலட்சம் என்று வைத்து கொண்டால் கூட மொத்த செலவு -    6760800 ரூபாய் . ஆக சராசரியாக வருடத்திற்கு இரண்டரை கோடி ரூபாய் இலாபம் அடைகிறார்கள்.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை பெற்றால் கூட ( சராசரியாக ஒரு மாணவனுக்கு 7000 ரூபாய்)  ஒரு கோடி ரூபாய் இலாபம் வருகிறது.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை தான் வாங்க வேண்டும் என்று பள்ளிகளை நிர்பந்திக்க போவது யார். எந்த தைரியத்தில் பள்ளிகள் அரசை மீறுகிறது. இவ்வாறு பள்ளிகள் அரசை மீறுவது அரசாங்கத்திற்கு தெரியாதா? தெரியாதென்றால் நாம் எவ்வாறு அரசின் கவனித்திற்கு இதை கொண்டு செல்வது?
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments: