புதிரை எண்களை கொண்டோ அல்லது எழுத்துக்களை கொண்டு தான் கேள்வி கேட்க வேண்டுமா? படங்களை கொண்டும் கேட்கலாமே என்று நான் எண்ணியவுடன் எனக்கு தோன்றியது logo தான். நாம் பல logo பார்திரிபோம். நம்மில் எத்தனை பேர் அதை ரசித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.
logo டிசைன் என்பது மிகப் பெறும் கலை. அதற்கு ஓவிய பயிற்சி இருந்தால் மட்டும் போதாது. சிந்திக்க தெரிய வேண்டும். மற்றவர்களிடமிருந்து விலகி தனித்துவமாக சிந்திக்க தெரிய வேண்டும்.
மீசை வைத்தவன் எல்லாம் பாரதி இல்லை. தாடி வைத்தவன் எல்லாம் வள்ளுவன் இல்லை நாம் சொல்வது போல லோகோ எல்லாம் லோகோ அல்ல.
நாம் இங்கே பார்க்க போகும் லோகோக்கள் நிச்சயமாக உங்களை கவர்வது மட்டுமல்லாமல் இனி புதிய லோகோ பார்க்கும் போது உங்களை யோசிக்க வைக்கும்.
சில லோகோ பல அர்த்தங்களை வைத்திருக்கும். சிலது குறும்புதனத்தை.
இன்று இரண்டு லோகோவை பாப்போம்.
FEDEX
FEDEX லோகோவில் மறைத்திருக்கும் அம்பு fedex நோக்கத்தை சொல்லும்.
VAIO
VAIO என்பது Video Audio Integrated Operation என்பதன் முதல் எழுத்துக்களால் உண்டான பெயர். இந்த லோகோ மறைமுகமாக சொல்வது என்னவென்றால் VA என்பது ANALOG (தொடர்முறை) மற்றும் IO என்பது DIGITAL (எண்முறை) யும் குறிக்கிறது.
சரி நண்பர்களே நாளை எண் புதிரோ எழுத்து புதிரோ அல்லது படப் புதிரோ ஏதேனும் ஒன்றுடன் உங்களை சந்திக்கிறேன். நேற்றைய புதிருக்கான விடையை நாளை சொல்கிறேன்.
5 comments:
சரி. நாளை>
vaio புது தகவல் நன்றி
இன்று
வாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்
தகவலுக்கு நன்றி
லோகோக்களை பற்றிய அருமையான விளக்கம்!
Post a Comment