Saturday, July 30, 2011

இன்று என்று நினைப்பது இன்றே அல்ல அது நேற்று

2000-ல் என்ன நடந்தது








டிசம்பர் 31 1999 . போன நூற்றாண்டின் கடைசி நாள். அடுத்த நாளான ஜனவரி 01 2000லிருந்து உலகமே செயல்படாது என்று பலர் நினைத்தார்கள் உலகம் அழிந்து விடும் என்று சிலர் பயந்தார்கள் . அந்த பல பேர் பயத்திற்கு காரணம் ஒரு மூன்றெழுத்து சொல் . y2k . 

y2k . என்றால் என்ன என்று தெரியாமலே இன்றும் பலர் இருக்கிறார்கள் . அதைப்பற்றி மறந்தே விட்டார்கள். படித்தவர்கள் , படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் இவர்கள் 2000 ஆண்டு வருவதற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டிற்கு முன்பே இந்த y2k பிரச்சனையை  பற்றி பேச  ஆரம்பித்து .விட்டார்கள் . வயித்துக்கே வழி இல்லையென்றாலும் y2k தான் பேச்சு. மென்பொருள் தயாரிப்பவர்கள் இதை வைத்து பணம் சம்பாதித்தனர். y2k ரெடி என்று அதே மென்பொருளை விற்ற பல தயாரிப்பாளர்கள் பலர்.
 
286 , 386 ரக கணினிகள் இரண்டு இலக்க கடிகாரங்களை கொண்டிருந்தன. அது 1999ஐ 99 என்று காட்டி கொண்டு இருந்தன. 2000 ஆவது  ஆண்டை அது ௦௦ என்று சொல்லியது (சில கணினிகள் மட்டுமே) மேலும் சில 99ற்கு பின் 61 ஆக மாறியது . இந்த இரண்டு பிரச்சனைகள் சில கணினகளுக்கு மட்டுமே இருந்தன . அதை பயாஸ் மேம்படுத்துதல் மூலம் சரி செய்ய முடிந்தது. எனவே மக்கள் நினைத்தது போல y2k என்பது ஒரு பிரச்சனையே இல்லை.

 டிசம்பர் 31 1999 . போன நூற்றாண்டின் கடைசி நாள். பலர் பயந்தார்கள. சன் டிவீ  என்று நினைக்கிறேன். இரவு 12 ஆவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு . இந்தியாவிற்கு முன்பே 12 மணியாகும் சில நாட்டிலிருக்கும் தமிழர்களை நேரலையில் பேட்டி கண்டது. அவர்களும் இங்கே y2k  காரணமாக ஒன்றும் பிரச்சனை இல்லை. எங்கள் கணினிகள் வழக்கம் போலவே செயல் படுகிறது . நீங்களும் பயப்பட வேண்டாம் என்று நம்மை தைரியப்படுத்தினார்கள். அதை போலவே 2000 ஆண்டு வந்தது. டிசம்பர் 31 1999 அன்று கணினியில் இருந்ததை போல் இல்லாமல் ஒரு சிறிய மாற்றமே இருந்தது. அது நாள் மாறி இருந்தது.  மற்றப்படி ஒன்றும் நேரவில்லை.
 
    சரி அப்போ y2k என்ற ஒரு பிரச்ச்சனியே இல்லையா? இருக்கிறது . நம்மிடம் அதை சொல்லாமலே இந்த உலகம் மறைத்து விட்டது. அதானால் நாம் இன்று தப்பான நாளில் வாழ்ந்து வருகிறோம். இந்த பிரச்னை உண்மையிலேயே இரண்டு பேர்களுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தியது
1 ) காலண்டர் தயாரிப்பவர்கள் 
௨) டைரி (நாட்குறிப்பு) தயாரிப்பவர்கள்.

சரி இவர்கள் எப்படி பாத்திக்கப்பட்டர்கள் என்று பாப்போம். அதற்க்கும் முன்னாள் சில விஷயங்கள்.பூமி தன்னை தானே சுற்றி வர 24 மணி நேரம் ஆகிறது . அதை ஒரு நாளாக கணக்கிடிகிறோம். பூமி சூரியனை சுற்றி வர 365நாட்கள் 6 மணிநேரம் மற்றும் சில நொடிகள் ஆகிறது. நாம் இதை ஒரு வருடம் என்பது 365 நாட்கள் என்று கணக்கிட்டு வைத்துள்ளோம். இந்த 6 மணி நேரத்தை தான். 4 வருடத்திற்கு ஒரு முறை லீப் வருடம் என்று ஒரு நாள் சேர்த்து  பிப்ரவரியில் 29 நாட்கள் என்று கணக்கிட்டு வருகிறோம்.(நான்கு 6 மணி நேரங்கள் பாய்ந்து வருவதை தான் லீப் என்று அழைக்கிறோம்) சரி அப்போ மிச்சம் இருக்கும் அந்த சில நொடிகளை என்ன செய்வது. அதற்க்கும் நம் முன்னோர்கள் வழி கண்டுள்ளனர். அது தான் மில்லினம் ஆண்டு . அந்த சில நொடிகளைஎல்லாம் ஒன்று சேர்த்து 1000 ஆண்டிற்கு ஒரு முறை பிப்ரவரியில் 30 நாட்கள் என்று கணக்கிட்டிருந்தனர்.  

இங்கே தான் பிரச்சனையே ஆரம்பம் ஆகிறது. இங்கே தான் டைரி மற்றும் காலண்டர் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர். பிப்ரவரியில் எத்தனை நாட்கள் என்று பிரின்ட் செய்வது என்று குழப்பம். கணினியில் 29 நாட்களே இருந்தன . கணினி என்பது நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் சக்தியாக மாறி விட்டது. நாம் அதை பகைத்து கொள்ளவே வழியில்லை. எனவே நாம் கணினிக்காக சமரசம் செய்து கொண்டோம் .அதன் படி பார்த்தால் 29 பிப்ரவரி 2000 ஆண்டு வரை தான் நாட்கள் சரியாக இயங்கின. அதற்கு அடுத்த நாள் என்று நாம் நினைத்த மார்ச் 01 என்பது தவறான நாளாகும்.  சரியான நாள் 30 பிப்ரவரி. 
எனவே நாம் ஒரு நாள் தவறுதலாக வாழ்ந்து வருகிறோம். நாம்  வாழும் இன்றான இன்று நினைப்பது இன்றே அல்ல அது நேற்று. மேலும் நீங்க நுமராலாஜி பார்ப்பவரா? நாட்களின் எண்களை வைத்து அவர்கள் சொல்லும் ஆருடத்தை இன்னும் நம்ப போகிறீர்களா

இதை பற்றி இன்னும் எழுதலாம். ஆனா வேண்டாம். ஓவரா போன போர் அடிக்க ஆரம்பித்து விடும்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

சக்தி கல்வி மையம் said...

ஓவரா போன போர் அடிக்க ஆரம்பித்து விடும்.// போர் எதுவும் அடிக்கல சகோ.. எழுதுங்க சகோ..

மனசாலி said...

வேடந்தாங்கல் - கருன் *! said...


நன்றி நண்பரே.

Unknown said...

இதற்கு என்ன தீர்வு