நாம் பைனரி எங்களை பற்றி அறிந்திருப்போம். மொத்தம் இரண்டு எண்களே உள்ளன.
எனவே நாம் 4 என்னும் தசம எண்ணின் சமமான பைனரி என்னை 100 என்று அறிகிறோம். இதுவே 32 என்னும் தசம எண்ணின் பைனரி எண் 100000
சரி இப்பொழுது சங்கதிக்கு வருவோம். மிக குறைந்த இலக்கங்களை கொண்ட பைனரியில் நாம் பத்து இலக்க தசம எண்ணை எழுதும் பொது அது நீண்டு கொண்டே போகிறது. இது நாம் பேசும் மொழிக்கும் பொருந்தும்.
உதாரணாக 26 எழுத்துகளே கொண்ட ஆங்கில மொழியுள் 247 எழுத்துகளை கொண்ட தமிழ் மொழியை எழுதும் பொது. தமிழ் வார்த்தைகளில் உள்ள எழுத்துகளின் மொத்த இலக்கத்தை விட ஆங்கில வார்த்தைகள் அதிகமாக இருக்கிறது.
உதாரணமாக
மனசாலி- 4
manasaali - 9
இளையராஜா - 5
ilaiyaraja - 10
புதுமைபித்தன் - 8
pudhumaipithan - 14
எனக்கு தெரிந்த வரை தமிழ் மொழியே அதிக எழுத்துகளை கொண்டது. அகிலமெல்லாம் வாழும் தமிழர்களே உங்களுக்கு தெரிந்து அதிக எழுத்துக்கள் கொண்ட மொழி எது?
1 comments:
சீன மொழி இன்னும் அதிக எழுத்துக்கள் கொண்டது (மூன்றாயிறத்துக்கும் அதிகம்!) குறைந்த எழுத்துக்களை வைத்து நிறைய வார்த்தைகளை உருவாக்குவதே மொழிக்கு அழகு என்று நினைக்கிறேன்! தமிழிலும் கூட்டு எழுத்துக்கள் இருந்தால் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை குறையும்!
Post a Comment