நேர்மைக்கு தண்டனை ?
திருவனந்தபுரத்தில் பத்மநாப ஸ்வாமி ஆலயத்தில், சில ரகசிய அறைகள் இருக்கின்றன என்ற செய்தி அல்ல – வியப்புக்குரியது;
அந்த ரகசிய அறைகளில் குவிந்து கிடக்கின்ற எண்ணற்ற தங்க நகைகளும், நாணயங்களும், ரத்தினம், வைரம் போன்றவை பதித்த ஆபரணங்களும் அல்ல – ஜொலிக்கின்றவை;
அந்த நகைகள், நாணயங்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்களையும் மீறுகிறது என்ற மதிப்பீடு அல்ல – பிரமிப்பைத் தருவது.
பத்மநாப ஸ்வாமி ஆலயம்
கற்பனைக்கு அப்பாற்பட்ட இந்த பொக்கிஷத்தில் கை வைக்க வேண்டும் என்கிற ஆசையே இல்லாத, கோவில் சொத்தை அபகரிக்கும் எண்ணமே இல்லாத, நெருப்பு போன்ற நேர்மை கொண்ட ஒரு மன்னர் பரம்பரை, 250 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே இருந்து வந்திருக்கிறதே... அதுதான் ஜொலிக்கிறது ;
அதுதான் வியப்பைத் தருகிறது; அதுதான் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
1750ஆம் ஆண்டில், முதல் மார்த்தாண்டவர்மன் என்ற மன்னர்தான், இந்த விலை மதிப்பிட முடியாத நகைகளையும், தங்க நாணயங்களையும், பத்மநாப ஸ்வாமிக்கே சமர்ப்பித்ததாகவும், அந்த மன்னர் தன்னை ‘பத்மநாப தாஸன்’ என்றே குறிப்பிட்டுக் கொண்டதாகவும் வருகிற செய்திகள் திருவிதாங்கூர் சமஸ்தான சரித்திரத்தை எடுத்துச் சொல்கின்றன.
வாயளவில் சமத்துவம் பேசாமல், தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோவில்களைத் திறந்து விட்ட, ‘சித்திரைத் திருநாள்’ என்று அழைக்கப்பட்ட பலராம வர்மன், இந்தப் பரம்பரையைச் சார்ந்தவர்; அதற்கு உறுதுணையாக இருந்தவர் ஸர்.ஸி.பி.ராமஸ்வாமிஐயர். அதே போல, மனித உரிமை பற்றி மேடை போடாமல், மரண தண்டனையை ரத்து செய்த இந்தியாவின் முதல் ராஜ்யமாக திருவிதாங்கூரை திகழச் செய்ததும், இதே சித்திரைத் திருநாள் மன்னர்தான்.
இப்படிப்பட்ட உண்மையான முற்போக்குச் சிந்தனை உடைய இந்த மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் அனைவருக்கும், பத்மநாப ஸ்வாமி கோவில் பொக்கிஷத்தைப் பற்றித் தெரிந்துதான் இருந்தது. 1930ல் இந்த ரகசிய அறை ஒன்றில் இருக்கின்ற நகைகள் பற்றிய கணக்குக் கூட எடுக்கப்பட்டது. 1941ல் மலையாளக் கவிஞர் பரமேஸ்வர ஐயர், தனது புத்தகத்தில் இந்தப் பொக்கிஷம் பற்றிய விவரங்களைக் கூறியிருக்கிறார். பின்னர் 12 பகுதிகளாக வந்த, திருவிதாங்கூர் அரண்மனை சரித்திரத்திலும், இது பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கோவில், தொடர்ந்து மன்னர் பரம்பரையின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. அங்கு இவ்வளவு பெரிய பொக்கிஷம் இருப்பதை அறிந்திருந்தும், அந்தப் பரம்பரையில் வந்த ஒரு மன்னர் கூட, இத்தனை பொக்கிஷத்தையோ, இவற்றில் ஒரு பகுதியையோ எடுத்து அயல் நாடுகளில் பதுக்கிக் கொள்ளவோ, ஸ்விட்சர்லாந்த் வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ளவோ, வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ளவோ முனையவில்லை.
அவர்கள் பகுத்தறிவாளர்கள் அல்ல. கோவில் கோபுரத்தை பீரங்கி வைத்துப் பிளப்போம் என்று முழக்கமிட்ட, பகுத்தறிவுக் கூட்டத்தைச் சாராத இந்த மன்னர் பரம்பரை, ‘கோவில் சொத்து, குல நாசம்’ என்று நம்பியது. பொதுச் சொத்து விஷத்திற்குச் சமமானது என்று உணர்ந்தது. அன்று முதல் இன்று வரை – இன்று உள்ள உத்திராடத் திருநாள், மார்த்தாண்ட வர்மன் உட்பட – எந்த மன்னரும், இந்த பொக்கிஷத்தை கபளீகரம் செய்யவில்லை.

மக்கள் சொத்து எனில், அது தங்கள் குடும்ப சொத்து; நாட்டின் வளமை என்றால், அது வாரிசுகளின் வளமை... என்று செயல்படுகிற இந்திய அரசியல்வாதிகள் – அதாவது இன்றைய அரசர்கள் – கையில் இந்த பொக்கிஷம் சிக்கியிருந்தால், என்ன கதி ஆகியிருக்கும்!
இப்போதும் சில ‘சமூக பிரக்ஞை’ உள்ளவர்கள், இதை அரசியல்வாதிகளிடம் கொண்டு போய் சேர்த்து விட வழி தேடுகிறார்கள். ‘மக்களின் ஏழ்மையை, மக்களின் துயரைப் போக்கி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இந்த பொக்கிஷம் பயன்படுத்தப்பட வேண்டும்’ என்பது அவர்கள் வாதம். அதாவது, இந்தப் பொக்கிஷத்தில் உள்ள விலையுயர்ந்த நகைகளை விற்று, கிடைக்கிற பணத்தில், ஏழைகளின் துயரை இவர்கள் தீர்த்து விடுவார்களாம்!
ஆமாம், தீர்த்து விடுவார்கள்; பொக்கிஷத்தைத் தீர்த்து விடுவார்கள். அதில் ஒரு சிறு துளி, ஏழைகளுக்குப் போய்ச் சேர்ந்தாலே அதிசயம்தான்! அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பங்கு போட்டு கொண்டு ‘இருந்ததில், பாதிக்கு மேல் பித்தளை’ என்று அறிக்கை விட்டால் கூட வியப்பதற்கில்லை.
250 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கோவில் பொக்கிஷம் – பெருமாள் சொத்து – அப்படியே இருப்பதுதான் முறை. ஆனால் அதை இனி விட்டு வைப்பார்களா என்பது சந்தேகம்தான். ஸ்விட்சர்லாந்திலும், மற்ற சில நாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு வருகிற யோக்கியதை இல்லாத அரசியல்வாதிகளிடம், இந்த கோவில் சொத்தை ஒப்படைக்கக் கூடாது.
ஏன்?

நாட்டில் உள்ள அரசியல்வாதிகளின் சொத்துக்கள் கணக்கெடுக்கப்படட்டும்; அவற்றிலிருந்து சட்டவிரோதமாகக் கிட்டியவை ஒதுக்கப்பட்டு, அவை விற்கப்படட்டும்; அந்தப் பணம் பொது மக்களுக்குப் பயன்படுத்தப்படட்டுமே!
ஏன் அதை யாரும் வற்புறுத்தவில்லை?
சட்டம், சமூகம், தர்மம், நியாயம், பச்சாதாபம், பரிதாபம் – எல்லாம் அங்கே ஒளிந்து கொண்டு விடுகின்றனவே – ஏன்?
ஸ்விட்சர்லாந்திலும், பல அயல் நாடுகளிலும், பல அரசியல்வாதிகளிடமும், அவர்களுடைய பினாமிகளிடமும் புகுந்திருக்கிற பொக்கிஷங்கள், ஏழைகளுக்குப் பயன்படட்டும்.
சுப்ரீம் கோர்ட்டில், இன்றைய மன்னர் வாரிசு உத்திராடத் திருநாள், ‘இந்தச் சொத்து தன்னுடையதோ, தன் குடும்பத்தினரையோ சார்ந்தது அல்ல’ – என்று கூறியிருக்கிறார். ‘கோவில் சொத்தாகிய அது, தெய்வ கைங்கர்யங்களுக்கும், மக்கள் நலனுக்கும் பயன்பட வேண்டியது’ என்ற அவருடைய நேர்மையான கருத்து ஏற்கப்பட வேண்டும்;

- என் அண்ணன் அனுப்பிய மெயிலில் இருந்து. -
6 comments:
மிகவும் அற்புதமான பதிவு பெரும்பாலோர் எண்ணத்தை அப்படியெ பிரதிபலித்துள்ளீர்கள்...கட்வுளுக்கு நன்றி சொல்ல்வோம்...கருணாநிதியை கேரளாவில் பிறக்கவிடாமல் செய்ததற்கு
அருமையான நியாயமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்
நன்றாகக் கூறியுள்ளீர்கள்.
ஸ்விட்சர்லாந்திலும், மற்ற சில நாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு வருகிற யோக்கியதை இல்லாத அரசியல்வாதிகளிடம், இந்த கோவில் சொத்தை ஒப்படைக்கக் கூடாது. ஏன்?
நாட்டில் உள்ள அரசியல்வாதிகளின் சொத்துக்கள் கணக்கெடுக்கப்படட்டும்; அவற்றிலிருந்து சட்டவிரோதமாகக் கிட்டியவை ஒதுக்கப்பட்டு, அவை விற்கப்படட்டும்; அந்தப் பணம் பொது மக்களுக்குப் பயன்படுத்தப்படட்டுமே! ஏன் அதை யாரும் வற்புறுத்தவில்லை?
எல்லோரும் அதை ஒப்புக்கொள்கிறோம். மனசாட்சி உள்ளவர்கள் ஒட்டு போடட்டும். வாய்மையே வெல்லும். இன்றும்... என்றும்.....
Post a Comment