Thursday, September 8, 2011

காதல் - பிரபலங்கள் கருத்து


 குஷ்பு:
திருமணத்திற்கு முன்பு பெண்கள் காதல் செய்வது த‌ப்பு, த‌ப்பு,மகா தப்பு. (ச‌ரின்னு சொல்லி, இதுக்கும் கோர்ட் கேஸுன்னு நம்பலால அலைய முடியாதுப்பா. ஆள விடுங்க)

 
பாரதிராஜா:என் இனிய தமிழ் மக்களின் மண்வாசனை. கல்லுக்குள் உண்டகும் ஈரம். 16 வயதினிலே ஏற்படும் கடலோர கவிதைகள். சிகப்பு ரோஜாக்களை கொடுத்து, தாஜ்மஹாலை வளைக்கும் மந்திரம். புதிய வார்ப்புகளின் வாலிப விருந்து.புது நெல்லுக்கும் புது நாத்துக்கும் உள்ள உறவு.
விஜய T.ராஜேந்தர்:
ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவது காதல்
ஆரம்பமாகும் இடமோ இருவரின் மோதல்
அது கைக் கூடவில்லை எனில் சாதல்
அல்லது இருவரும் இணைந்து ஒருவராய் ஆதல்.
ரஜனிகாந்த்:இது பற்றி இப்போது எதுவும் கருத்து சொல்லக் கூடாது. ரானா படம் முடியும் வரை எதையும் பேச விரும்பவில்லை. அதற்குப் பிறகு இமயமலை அடிவாரம் சென்று ஓய்வெடுத்து லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக கருத்தைச் சொல்கிறேன்.
கம‌ல்:
காதல்‍. ஒரு நல்ல விஷயந்தான். அது மருதநாயகம் மாதிரி ஜவ்வாக இழுத்துக்கொண்டு இருக்கவும் கூடாது, மும்பை எக்ஸ்பிரஸ் மாதிரி வந்ததும் தெரியாமல் போவதும் தெரியாமல் போகவும் கூடாது. காதல் பெயரில் ஏற்கனவே திரைப்படம் வந்து விட்டதால் அந்த சப்ஜட்டுக்கு ஏற்ற பிரச்சனை ஏற்படுத்தாத தமிழ் தலைப்பு தேடிகிட்டு இருக்கிறேன். அது கிடைத்ததும் துவக்க விழாவுக்கு டோனி பிளேயரை அழைக்கலாமென்று இருக்கிறேன்.
சிம்ரன்:காதலுக்கு எல்லாரும் ஓட்டுப் போடுங்கோ. நான் இன்னும் அம்மாவைத்தான் லவ் பண்ணுது. எங்க அம்மாவை இல்லே, ஜெயா அம்மாவை.காதல் சின்னமாக ஹார்ட்டை எடுத்துட்டு ரெட்டை இலையை வச்சா , விரல காமிச்சு ஓட்டு கேட்க ஈஸியா இருக்கும்.


வைரமுத்து:
அது ஓர் இனிய அனுபவம்.
அது இளமையின் வைபவம்.
கரிசல் காட்டின் காவியம்.
தண்ணீர் தேசத்து ஓவியம்.
சுஜாதா:
ஆணின் மூளை யிலுள்ள நியூரான்களில் ஒரு குறிப்பிட்ட பெண்ணைக் கண்டதும் சுரக்கும் ஒருவித chemicalலினால் ஏற்படும் மின் அதிர்வே காதல்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Mathuran said...

கலக்கிட்டிங்க போங்க

test said...

கலக்கல்! :--)

தமிழ்வாசி பிரகாஷ் said...

பதிவும், படங்களும் சூப்பர்