நான்கு கிலோமீட்டர் நீளம் உள்ள பாலம். அதன் மொத்த எடை தாங்கும் திறன் 10000 கிலோகிராம் . அதற்கு மேல் ஒரு கிராம் கூட அந்த பாலம் தாங்காது. அந்த பாலத்தை 18 சக்கரங்களை கொண்ட பெரிய 'container' லாரி கடக்க முயற்சிக்கிறது. பாலத்தில் அது பயணிக்க தொடங்கும் போது அதன் எடை 10000 கிலோகிராம். அதாவது பாலம் தாங்கும் எடையின் அதிகபட்ச அளவு. அது மெதுவாக ஊர்ந்து பாலத்தின் மைய பகுதியை அடையும் போது 50 கிராம் எடை கொண்ட ஒரு பறவை container மேல் அமர்ந்தது. ஆனால் பாலத்திற்கு எதுவும் நிகழவில்லை. இது எவ்வாறு சாத்தியப்பட்டது?
எத்தனை 'F' புதிருக்கான விடை : 6
பெரும்பாலும் 3 என்ற விடையே முதலில் வந்திருக்கும். காரணம் நம் மூளை 'OF' ல் உள்ள 'F' ஐ எண்ணாது.
2 comments:
பாலத்தின் மையத்தை அடையும் போது, 18 சக்கரங்களின் தேய்மானம் 50 கிராமா????
தெரியலயே!!
பாலத்தின் மையத்தை அடையும் போது 50௦ கிராம் எரிபொருள் எரிந்திருக்கும். அதனால் பாலத்திற்கு ஒன்றும் ஆகவில்லை.....நாங்கெல்லாம் யாரு ?????
Post a Comment