Saturday, September 10, 2011

சகிப்புத்தன்மைக்கு ஒரு ஜோக்.

 

ஒருவர்: வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.
மற்றவர்: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?
ஒருவர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.
மற்றவர்: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.
ஒருவர்: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!
மற்றவர்: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.
ஒருவர்: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.
மற்றவர்: எப்படிச் சொல்றீங்க?
ஒருவர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.
மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.
ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!
மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பாவும் வித்தியாசம் தெரியாது.!


IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

Mohamed Faaique said...

ஒரு ஜோக்`குனு பார்த்தா கதைல டுவிஸ்டுக்கு மேல டுவிஸ்டு வந்த்டுட்டே இருக்கு...

பொ.முருகன் said...

ஒரு ஜோக்குல இத்தன டுவிஸ்டா!!!!.சூப்பர்.ஆமா இத எங்க சுட்டீங்க.[சும்மா ஒரு டுவிஸ்டுக்காக]

மனசாலி said...

Mohamed Faaique said...

நன்றி


பொ.முருகன் said..

ஆமா இத எங்க சுட்டீங்க
இது நான் சின்ன வயசுல கேட்டது.( அதாவது போன வாரம்)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நகைச்சுவை அருமை...

நாய் நக்ஸ் said...

Good joke