Tuesday, September 13, 2011

'வயது வந்தவர்களுக்கு மட்டும்' பாகம் நான்கு

கி.ராஜநாராயணனின் 

'வயது வந்தவர்களுக்கு மட்டும்' 

பாகம் நான்கு

இது பாகம் மூன்றின் தொடர்ச்சி
பாகம் மூன்றை படிக்க சொடுக்கவும்.


காட்லெ, சம்சாரி விடியமின்னே உழப்போனான். ஏரேக் கட்டி கொஞ்ச நேரந்தான் உழுதிருப்பாம். தண்ணி கலையத்தெ காக்கா உருட்டிவிட்டுட்டது.

இது என்னடா சங்கடம். தண்ணியில்லாம என்ன செய்ய. வெயிலேறிட்டா தண்ணி குடிக்காம முடியாதென்னு ஏரெ நிறுத்திட்டு, கலயத்த எடுத்திக்கிட்டு விறுவிறுன்னு வீட்டப் பாக்க வந்தாம்.

வீட்டுக் கதவு சாத்தியிருக்கு. இந்நேரத்துக்கு வீட்டுக் கதவு சாத்தியிருக்க காரணமில்லியெ.

என்ன விஷயம்னு தொரவால்த் தொளை(சாவி துவாரம்) வழியா உள்ளுக்குப் பாத்தா, அவம் கண்ணுக்கு ஒரு காச்சி(காட்சி) தெரியுது.

கடைக்காரன் இவம் பொண்டாட்டி மார்ல வாயெ வச்சி சப்பிக்கிட்டிருக்கான்.

படபடவென கதவைக் தட்டுன்னான்.

கதவு தொறந்தது. இவம் பொண்டாட்டி இவனை பாத்ததும் ஒண்ணு கதறிக் கிட்டே,

நல்லவேளை இப்பவாவது வந்தீகலெ. ஏம் பாட்டெப் பார்ர்தீளா, இந்த கொடுமெ உண்டுமா, இவரு இல்லேன்னா நான் செத்துதாம் போயிருப்பேம். என்று சொல்லி அழுதாள்.

புருசன்காரனுக்கு ஒன்னும் வெளங்கலே.

கடைகாரன பார்த்தான் அவன் தலெயக் கவுந்துக்கிட்டு ஒன்னும் சொல்லாம நிக்காம்.

என்ன, என்ன சொல்லுதெ என்ன நடந்தது. வெவரமாச் சொன்னா தானே தெரியும்ன்னு  கேட்டான் சம்சாரி.

என்னத்த வெவரமாச் சொல்ல. வெக்கக்கேடு. பருத்தி மார்ப் படப்பிலெ போயி மாரு புடுங்கி அணைச்சி எடுத்துகிட்டு தான் வந்தேன், சுரீர்னு மார்லெ தீக்கங்கு வச்ச மாதிரி இருந்தது. கீழே போட்டுட்டு பார்த்தா.... சரியான கருந்தேளு! வலியான வலியில்லெ. தாங்க முடியலே. என்ன செய்யுறதுண்ணுட்டு தெரியலெ. இவரு தேள்விஷத்த உறுஞ்சி எடுத்துருவாருன்னு  சொன்னாங்க. இவரெப்போயி கூப்பிட்ட, நா ஆம்பிளை இல்லாத வீட்டுக்கு வரமாட்டேன்னுட்டாறு. பெறவு, நாந்தான் சொல்லி, எம் வீட்டுக்காரரு அப்படியெல்லாம் நேனைக்கக்கூடியவரு இல்லெ. அதோட ஆபத்துக்குப் பாவமில்லேன்னு கூப்பிட்டுகிட்டு வந்தெம். அப்தெக்கு இப்போ தேவலைன்னாலும் வலி போருக்க முடியேலுன்னு அழுதா.

சரி சரி அழுவாதே இதெல்லாம் யாருக்கும் வரக்குடியது தாம். நாம் என்ன செய்ய முடியும் அதுக்கு. பரவாயில்லே அவராவது சமயத்துல கூப்பிட்ட ஒடனே வந்தாரே.

நா அங்கே தண்ணிய காக்கா கொட்டித்ததுன்னு திரும்பவும் தண்ணி கொண்டு போறதுக்காக வந்தேன்னுட்டு சொல்லிட்டு, கலயத்துல தண்ணியே ரெப்பிகிட்டு போயிட்டான்.

---------------------------------------------------------------------------

 கொஞ்ச நாள் கழிஞ்சது.

 ஒரு நா திடீர்னு. அய்யோ தேள் கொட்டீட்டதேன்னு சம்சாரி கூப்பாடு போட்டான்.

அடுப்பங்கூடத்துல வேலையா இருந்த அவம் பொண்டாட்டி எங்கே எங்கே தேளுதாம்ன்னுட்டுப் பாத்திடீலா என்று பதச்சீப் போயி வந்தா.

தேளுதாம் பாத்துட்டேன். வசமா பிடிச்சி மாட்டீட்டது. நல்ல கருந்தேளு.

அய்யோ வலி பொறுக்க முடியலையே நீ ஓடி போயி அந்த கடைக்காரன கையேடு கூட்டிட்டு வா, ஓடு சீக்கிரம்னு அவசரப்படுத்தினான்.

அவளும் ஓட்டமும் நடையுமா போயி கடைக்காரனை பார்த்து, இன்ன மாதிரி சங்கதி ஒடனே புறப்பட்டு வா. நீ இப்போ வரலைன்னா அவரு சந்தேகப்  பட்டுருவாறு. எந்தின்னு சொன்ன.

வேற வழியில்லாம அவனும் வந்தாம்.

எங்கே, எந்த எடத்துலன்னு கடைக்காரன் கேட்டாம்.

சம்சாரி தச்சிலெ அவுத்துக் காட்டுனாம்!

தாத்தாவோடு சேந்து நாங்களும் சிரிச்சோம்!

"பெறவு?" என்று கேட்டான் கிட்டான்.

பெறவு என்னடா பெறவு. பெறவு பெறவு தான்.

கடைக்கார பய தப்ப முடியல; வசமா மாட்டிகிட்டான்.

அவங்கடை வியாபாரமெல்லாம் நிறுத்தி ரொம்ப நாளைக்கு பெறவு, அந்த கடை என்னாச்சுன்னு கேக்குற உங்களுக்கு ஊர்க்கார்கள் சொன்ன பதில இங்கே எழுத முடியாது.

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

நாய் நக்ஸ் said...

Story writer ROCKS !!!!

Anonymous said...

புத்திசாலி புருஷன்...

karivayplli said...

ஆகா ஆகா அருமை

பாலு said...

சூப்பர்! நல்ல முடிவு!