Monday, September 12, 2011

'வயது வந்தவர்களுக்கு மட்டும்' பாகம் மூன்று


கி.ராஜநாராயணனின் 

'வயது வந்தவர்களுக்கு மட்டும்' 

பாகம் மூன்று

கல்மண்டபத்துக்கு மேல் உட்காந்துகொண்டு கம்மங்காட்டுக் காவல் இருந்த 'சீசன்' பூராவுமே தாத்தா எங்களுக்கு பாலியல்க் கதைகளாகவே சொல்லி வந்தார்.
அந்தக் கதைகள் பூராத்தையுமே அபபோவே எழுதி வைத்துருக்க வேண்டும். நான் பயித்தியாரயத்தனம் பண்ணிவிட்டேன்.
 ஒரு நாள் தாத்தாவிடம் கேட்டோம். 'இந்தக் கதைகளினால் ஏதாவது பிரயோஜனம் உண்டா யாருக்காகாவது?'
கொஞ்சம் யோசித்துவிட்டு, தொண்டையைச் சரி செய்து கொண்டார். பிறகு,  இந்த கதைகள் எல்லாத்தையுமே அப்படியே சொல்ல முடியாது. பிரயோஜனமுள்ளவை, அல்லாதவை, தெரிந்து கொள்ள வேண்டியவை, அறிந்து கொள்ள வேண்டியவை, மனுஷக் கற்பனைகள், அவனோட விகாரங்கள், ஆசைகள், கனவுகள், இப்படி இன்னும் என்னமும் எத்தனையோ அடங்கி இருக்கு இதுகளில்.
இந்த கதைகளை கேட்கிற காதுகளையும் ஏற்றுக்கொள்கிற மனசுகளையும் பொறுத்திருக்கிறது எல்லாம்.
ஓரளவு மனசுகளை இவை பாதிக்கலாம். என்றாலும், இவை அவன் என்றைக்கிருந்தாலும் எதிர்கொள்ள வேண்டியவன்தான்.
சில விசயங்களை சத்தங்காட்டாமல் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.
இவைகளை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய முன்னோர்கள் தெரியாதவர்கள்  அல்ல.  கோயில்களிலும், தேர்களிலும், கோவிலினுள் நுழையும் கூடாரவாசல் விதானங்களிலும், மரச்சிற்பங்கலாக தெரியட்டும் என்றுதான் செதுக்கி வைத்திருக்கிறார்கள், என்றார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------


இப்பொழுது 
கள்ளப்புருசனுக்கு 
புத்தி புகட்டிய 
சம்சாரியின் கதையை பார்க்கலாம்.

ஒரு ஊரில் ஒரு சம்சாரி(விவசாயி). அவம் பொண்டாட்டி அழகா இருப்பா. அவளோட மார் அழகே தனி. அவளை எப்படியாவது அடையனும்ன்னுட்டு ஒருத்தன் திட்டம் போட்டான்.

அதுக்கு என்ன பண்ணனும்னு யோசனை பண்ணிப் பார்த்தான்.

தெனமும் அவ அவம் வீட்டு வழியா தான் கடைக்கு சாமான் வாங்க போவா. ' நாம கடை வச்சா என்ன, நம்ம கடி வச்சா நம்ம கடைக்கு சாமான் வாங்க வருவா, அப்ப அவளோட பேசலாம்ன்னுட்டு தீர்மானிச்சு, தெருவுப்பாக்க இருந்த வீட்டுச் சுவர்லே  ஒரு வாசல் விட்டு கடையாக்கினானாம். வேண்டிய கடைச் சாமானெல்லாம் வாங்கியாந்து கடையக் தொவக்கீட்டான்.

சம்சாரி பொண்டாட்டி பாத்தா, தூரத்துல நடந்து போயி வாங்குறதைவிட இது கிட்டக்க இருக்கு. இதுலேயே வாங்குவம்ன்னுட்டு பருத்தி, கம்மம்புல்லு இதுகள கொடுத்து சாமான்க வாங்குனா கடைக்காரன் என்ன பண்ணுனான். ஒழுக்குத்தானியத்துக்கு  அரைப்படி தானியத்துக்கு கொடுக்கிற அளவுக்கு, ரண்டு மடங்கு சாமான்கள் தந்தான். ஒரு கூறு பருத்திக்கு ரெண்டு கூறு பருத்திக்கு உண்டான சாமான்கள் கொடுக்கிறது. இப்படியாக நடந்துகிட்டிருந்தது.

முதல்ல அவ நெனச்சது, இவம் புதுசாக் கடை வச்சிருக்கான். அதனால ஆட்களை தன்னோட கடைப்பக்கம் இழுக்குறதுக்காக இப்படி குடுக்கானு நினைச்சா.

ஆனா கவனிச்சு பார்க்கிறப்பொ, மத்த ஆளுகளுக்கு அவம் அப்படி கொடுக்கறதா தெரியல! இவ தானியமோ பருத்தியோ கொண்டு போக வேண்டியது. இன்ன சாமான் வேணும்னு கேப்பா;  அவனும் ரண்டு பங்கு 'தாராளமா' சாமான்கள் கொடுக்கிறது. இப்படியே நடந்துகிட்டு வந்தது. அவம் ஒரு வார்த்தை கூட இவகிடா பேசுறதில்ளே, அவ வந்த ஒடனே இவனுக்கு தொண்டை இறுகி போயிரும்! என்ன பேசுறதுன்னே தெரியாது.

இவளுக்குனாப்  பொறுக்கல.வாயத்  தொறந்தே கேட்டுட்டா. " இப்படி தாராளமா ரண்டு பங்கு சாமான்க கொடுக்கயெ கட்டுப்படி ஆகுமா ஒனக்கு?"

" நா எல்லாத்துக்கும் அப்படி கொடுப்பானா; ஒனக்கு மட்டுந்தான்" என்றான்.

"எதுக்கு அப்படி தரனும், கெரகசாரமா?" என்று கேட்டாள். அப்பத்தான் திக்கிதெணறி அவஞ் சொன்னாம் "ஒம்பேர்ல எனக்கு பிரியமா

 "சீ இந்த சோலியெல்லாம் வச்சுக்கிடாதே. நான் ஒங்கடைக்கு இனி வர மாட்டேன்"ன்னு  வெடுக்குன்னு சொல்லிட்டு போயிட்டா. அதுல இருந்து அவ அவங்கடைக்கு சாமான் வாங்க போகாம வழக்கமா வாங்குற இடத்துக்கே அவம் கடையத் தாண்டியே போயிக்கிட்டுருந்தா.

இவனுக்கு சங்கட மாயிட்டு. இதுக்காகவா நாம கடைய வச்சம். இப்படி ஆயிட்டதேன்னு  வருத்தமான வருத்தமில்லெ.

ஆனாலும் திடிர்னு கடைய மூடிற முடியுமா. சரி பாப்போம்ன்னுட்டு பேருக்கு கடைய நடத்திகிட்டே அவ போறத வர்றதப் பாத்து பாத்துப் பெருமூச்சு விட்டுகிட்டே இருந்தாம்.

கடையும் முந்தி மாதிரி, "கலாவலியா" நடக்கலெ. கூட்டமும் கொறஞ்சு போச்சி. அதோட பருத்தி சீசன் முடிஞ்சிறதும் ஒரு காரணம்.

 ஒரு நா ராத்திரி, சுக்கு வாங்குறதுக்காக அவ கடைக்கு போனா. அந்த கடைல சுக்கு இல்லெ. வர்ற வழியெல இவம் கடைல சுக்கு இருக்குதான்னுட்டு கேப்பமான்னு நின்னா. கடைக்கு முன்னாலே யாருமில்லே . அவந்தாம் தனியா உட்காந்துகிட்டு 'ஏங் குரங்கே'ன்னு வெளக்க இமைக்காம பார்த்துகிட்டிருந்தான். பார்க்க பாவமா இருந்துச்சு அவளுக்கு.

வாசல்ல போயி இவ நிக்கா. அப்பாவும் அவம் வெளக்கையே பாவமா பார்த்துகிட்டிருந்தாம். சுக்கிருக்கனிட்டுக் கேக்கா. அப்பாவும் அவம் காதுல விழுந்த மாதிரி தெரியல. திரும்பவுங் கேட்டா. முகத்த திலுப்பிப் பாத்தாம்; நிகா பிடிபட்ட மாதிரி தோனல. அதுவும் பொரவுதாம் இவான்னுட்டுத் தெரிஞ்சது போலருக்கு. பாத்தது பாத்தபடியே இருந்தாம்.

"என்ன, மேலுக்கு சேட்டமில்லியா?"ன்னுட்டு கேட்டா.

பயலுக்கு களகளன்னு கண்ணுலருந்து தண்ணி வருது. இவ பின்னாடி திரும்பி பாத்தா யாரும் வராகளன்னுட்டு; யாரையும் காணம்.

"எங் கங்கலங்குதீறு?"ன்னுட்டு கேட்டா. அவம் ஒன்னும் பேசல. கைய மட்டும் நீட்டுனாம். இவ கம்மம்புல்லு கொண்டுவந்த கொட்டாநெ அவங்கிட்டே நீட்டுனா, வாங்கி அளந்து பாத்துட்டு  என்ன வேணும்கிற மாதிரி பார்த்தான்.

"சுக்கு"

சுக்கெ நிறுத்திக் குடுத்தாம்.

காப்பிடி புல்லுக்கு அரப்பிடிக்கு அளவுக்கு இருந்துச்சு சுக்கு.

இவளும் மேக்கொண்டு ஒன்னும் பேசாம வாங்கிட்டு போயிட்டா.

அதிலே இருந்து அவ அவங்கடையிலேயே சாமான்க வாங்க ஆரம்பிச்சா.

 இப்படி கொஞ்ச நாப் போச்சு.

ஒரு பேச்சு வார்த்தை கிடையாது. அவலெ அவம் ஏறிட்டுக் பாக்கிறதுக்கூட கிடையாது.

 ஒரு நா ராத்திரி, அவ  சாமான்க வாங்க வர்றதுக்கு கொஞ்சம் நேரமாயிட்டு (கடை எடுத்து வைக்கிற நேரத்துக்கும் அதிகமா ஆயிருந்தது)

ஆனாலும் அவம் காத்திருந்தான்.

வளக்கம் போல கொட்டான்ல தவசம் (தானியம்) கொண்டு வந்தா. சாமான்க வாங்குனா.

புறப்புட்டு போறதுக்கு முன்னாடி, அவ தயங்குன மாதிரி இருந்துச்சு.

என்னங்கிற மாதிரி அவலெ ஏறிட்டுப் பார்த்தான். அப்பதாம் அவ சொல்லுவா,  'ஒடம்பு ஏம் இப்பிடி மெலிஞ்சிகிட்டே வாரீறு. வைத்தியரு கிட்டே கைய காமிச்சு மருந்து ஏதாவது சாப்பிடக் கூடாதா?'

அப்பதாம் அவம் தன்னோட ஆசைய தயங்கி தயங்கிச் சொன்னாம் .

இவ அதுக்கு ஒன்னும் சொல்லாம, வேற என்னத்தையோ பத்தி அவங்கிட்டே ஒரு தகவல் விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா. இவம் அதுக்கு இவம் அதுக்கு என்னத்தையோ பதில் சொன்னாம்.

கொஞ்ச நாள் போச்சி. அதுக்கு பெறவு என்ன பேசனுட்டுத் தெரியல. இவந்தாம் சொன்னாம். 'நாளைக்குக் காலையில ஓம் வீட்டுக்கு வரட்டா?'

அவ அதுக்கு ஒன்னுஞ் சொல்லாம ஒரு குருஞ்சிரிப்பாணி சிரிச்சிட்டு போயிட்ட.



'வயது வந்தவர்களுக்கு மட்டும்'  பாகம் ஒன்று '



இத டைப் அடிக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? கொஞ்சம் யோசிங்க. பதிவு "பிடிச்சிருந்தா" பின்னுட்டம் போடுங்க தப்பு இல்ல. உங்க ISP  பில்லில் கூடுதல் கட்டணமெல்லாம் போடமாட்டாங்க. "ஓட்டும் போடலாம்" யாரும் தப்ப நெனக்க மாட்டாங்க.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

17 comments:

Anonymous said...

ம்ம்ம்.. தொடருங்கள்...

Tirupurvalu said...

U r telling interesting story behalf ki.ra

Anonymous said...

தொடர்ந்து எழுதுங்கள் ..... நன்றாக உள்ளது...

Anonymous said...

இதற்கு பேர் தான் விடாமுயற்சியோ ? சரியா தவறா? ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல.

நாய் நக்ஸ் said...

PL. CONTINUE
DONT STOP
ITS ALL HISTORY AND RECORD !!!

மனசாலி said...

NAAI-NAKKS said...
*அதனால தான் இதெ எழுதுறேன் நண்பா.*

Hassan said...

fine

vels-erode said...

நல்லா தாமல இறுக்கி. உடாம டைப் அடியும். ராஜ நாராயணன் கதைனாலே ஒரு கிக் தாமல. அதுலயும் கிக்கான கதைனா?

கற்பதை கற்பிப்போம் said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்லம் எனக்கும் வலைப்பூ இருக்கிறது பல சுவாரசியமான அம்சங்கள் அடங்கி உள்ளன www.suncnn.blogspot.com

Kathiravan Rathinavel said...

அருமை நண்பரே

Anonymous said...

நல்ல எழுத்து நடை .....

rara said...

சூப்பர்

rara said...

சூப்பர்

hakk said...

Verasm ella eluthu...........nice.........

Unknown said...

நல்ல erukku

Unknown said...

kanna superpa

ssyed321 said...

ரொம்ப அழாகன கதை நன்றி