Wednesday, August 3, 2011

Captcha Entry Work எதற்காக செய்கிறோம்? யாருக்காக செய்கிறோம்? சுடுதண்ணி போன்றவர்கள் கொஞ்சம் விளக்கலாமே.

Captcha Entry Work எதற்காக செய்கிறோம்?
யாருக்காக செய்கிறோம்?
சுடுதண்ணி போன்றவர்கள் கொஞ்சம் விளக்கலாமே.
 
                       இணையத்தில் வேலை பல உள்ளது. அதில் பல நாம் பணம் கட்டி செய்வது. அது பெரும்பாலும் ஏமாற்று வேலையாகவே இருக்கும். ஆனால் சமிப வருடங்களில் Captcha Entry Work என்ற ஒன்று பலரால் செய்யப்பட்டு வருகிறது. முன் பணம் கட்ட தேவையில்லை. வேலை செய்தால் பணம் கிடைத்து விடுகிறது. சிலரை தவிர பெரும்பாலோர் ஏமாறாமல் செய்த வேலைக்கு பணம் தந்து விடுகிறார்கள். 

                         இதற்க்கு முன்னாள்  DATA ENTRY WORK என்று ஒன்றை பலர் செய்தார்கள்.அதில் பலர் பணம் கட்டி வேலை செய்தார்கள் ஒரு பக்கத்திற்கு 5 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை கிடைக்கும் என்று நம்பி பணம் கட்டுவார்கள் (ம்ஹ்ம்  நானும் பணம் கட்டி இருக்கேன்) பணம் பெற்று கொண்டவர்கள் முதலில் நமக்கு ஒரு சோதனை வேலை கொடுப்பார்கள். அதில் நாம் தேற வேண்டும். QC என்று அவர்கள் ஒரு அறிக்கை கொடுப்பார்கள். அதில் பலர் தேற மாட்டார்கள். சோதனை வேளையில் தேராதவர்களுக்கு ரியல் வொர்க் கிடைக்காது. நாம் செலுத்திய பணமும் திரும்ப கிடைக்காது. 

                      சரி நாம் இப்பொழுது  Captcha Entry க்கு வருவோம். CAPTCHA என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு ஒரு தம்மாத்துண்டு அறிமுகம். நாம் CHATROOM  நுழையும் முன் ஒரு இமேஜ் வெரிபிகேசன்   வருமல்லவா அது தான் மேற்சொன்ன CAPTCHA .அங்கே நாம் அதை டைப் செய்கிறோம் என்றால் அதற்க்கு காரணம் CHAT செய்யப்போவது மனிதனா அல்லது இயந்திரமா என்ற சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள வேண்டி நாம் அதை அடிக்கிறோம்.
                      அனால் Captcha Entry Work  செய்யும் பொது நாம் ஏன் அதை அடிக்கிறோம் ஒன்றும் புரியவில்லை. ஆளே இல்லாத கடைக்கு நாம் யாருக்காக டீ ஆற்றுகிறோம்? இதை எழுதும் போது எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது.
                     ஒரு ஊர்ல ஒரு நூலகம். பழைய  நூலகம். உறுப்பினர்கள் வராத நூலகம். பரபரப்பான சாலைக்கு பின்புறம் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத ஒரு தெருவில் உள்ள நூலகம். அங்கே ஒரு நூலகர். அவருக்கு ஒரு உதவியாள். ஒரு நாள்  ஒரு தினசரியில் ஒரு வரி விளம்பரம்
செம்பட்டை முடி உள்ளவர்கள் 
கவனத்திற்கு
அறிய வாய்ப்பை தவற விடாதீர்கள் 
உங்கள் முடி நாங்கள் விரும்பும்படி இருதால் உங்களுக்கு மாதம் 50 ,௦௦௦ ருபாய் சம்பளத்தில் வேலை உறுதி.
கல்வி தகுதி தேவையில்லை
இப்படிக்கு 
செம்பட்டை முடியுள்ளவர்கள் சங்கம்.
      இதை அந்த உதவியாள் பார்க்கிறான். அவர் அதை நூலகரிடம் காட்டுகிறான். ஏனென்றால் நூலகருக்கு செம்பட்டை முடி. அவருக்கும் அந்த நேரம் 5௦௦௦௦ பணமும்  தேவைபடுகிறது . போய் பார்க்கலாம் என்று முடிவு செய்கிறார். அங்கே போனால் பயங்கர கூட்டம். அவருக்கு ஆச்சர்யமாக இருக்கிறது நகரில் செம்பட்டை முடி உள்ளவர்கள் இத்தனை பேர் இருக்கிறாகள என்று?  நேர்காணல் பல பரீட்சைக்கு இடையில் நடக்கிறது. முடி தண்ணிர் விட்டு அலசப்படுகிறது. அதன் அடர்த்தி பரிசோதிக்கப்படுகிறது. நீளம் அளக்கப்படுடிறது. நேர்காணல் காணும் இருவருக்கு யாரும் திருப்தியாக அமையவில்லை.

                நூலகரை பரிசோதிக்கிறார்கள். அவர்கள் விரும்பும் எல்லா தகுதியும் அவருக்கு இருக்கிறது. அவருக்கு வேலை கிடைக்கிறது. சம்பளத்தை முன் பணமாக தருகிறார்கள். எல்லா விவரங்களையும் வாங்கி கொள்கிறார்கள். மறு நாள் நூலகத்தை உதவியாளிடம் விட்டு விட்டு செம்பட்டை முடி உள்ளவர்கள் சங்கத்திற்கு வேலைக்கு செல்கிறார். அவரிடம் இரு திருக்குறள் புத்தகம் தனது அதை பிரதி எடுக்க சொல்கிறார்கள். பின் இருவரும் சென்று விடுகிறார்கள். மாலை ஐந்து மணி அவர்கள் வந்தவுடன். இவர் வேலை முடிகிறது . 
           
              மறு நாள் பாரதியார் கவிதைகள் பிரதி எடுக்கும் வேலை. இவ்வாறு 20 நாட்கள் சென்றிருக்கும். அடுத்த நாள் செல்லும் போது செம்பட்டை முடி உள்ளவர்கள் சங்கம் பூட்டி கிடக்கிறது. அதன் பின் அந்த அலுவலகமே திறக்கப்படவில்லை.  

             நூலகருக்கு நடந்தது குழப்பமாகவே இருந்தது. யார் இவர்கள்? ஏன் வந்தார்கள்? எதற்கு ரூபாய் கொடுத்தார்கள்? ஏன் பிரதி எடுத்தார்கள்? இதை தெரிந்து கொள்ள அவர் ஒரு துப்பறிவாளரிடம் சென்றார். அவர் துப்பறிந்த போது கிடைத்தது என்னவென்றால்.
           நூலக உதவியாளனும் செம்பட்டை முடி சங்கம் நடத்தியர்களும் சேர்ந்து இவரை வேலை என்று  காலை பத்து முதல் மாலை ஐந்து வரை  நூலகத்தில் இல்லாமல் செய்திருக்கிறார்கள். அப்பொழுது இவர்கள்  பயன்படுட்டப்படாத நூலகத்தின் தரை கீழ்(UNDER GROUND) அறையிலிருந்து  பக்கத்து தெருவிலிருக்கும் வங்கியின் பண அறைக்கு சுரங்கம் தோண்டி இருக்கிறார்கள்.. இவ்வாறு போகிறது அந்த கதை.
 


 ஆனால் CAPTCHA விஷயத்தில் என்ன நடக்கிறது . நான் யார்? நூலகரா? அல்லது சுரங்கம் தோண்டுபவர்கள? அல்லது வேறு யாராவதா? யாரவது சொல்லுங்களேன்.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

சுடுதண்ணி said...

Hi, please check this

http://www.suduthanni.com/2010/03/captcha-1.html

மனசாலி said...

சுடுதண்ணி said... Hi, please check this http://www.suduthanni.com/2010/03/captcha-1.html October 18, 2011 8:41 PM


வருகைக்கு மிக்க நன்றி